செவ்வாய், 14 ஜனவரி, 2020

வள்ளலார் காலத்திலும் கூச்சல் குழப்பம் உண்டாகி இருக்கிறது !

*வள்ளலார் காலத்தில் கூச்சல் குழப்பம் உண்டாகி இருக்கிறது.*

வழிப்பாட்டு விஷயத்தில் மக்களிடையே
கூச்சல் குழப்பம் ஏன் உண்டாயிற்று என்பதை சிந்திப்போம்.

வள்ளலார் சொல்லிய சுத்த சன்மார்க்க கொள்கைகள் கருத்துக்களை ஏற்க மறுத்தும் ஏற்றுக் கொள்ள முடியாமலும் வழிப்பாட்டு விஷயத்தில்  கூச்சல் குழப்பம் உண்டாகி இருக்கிறது.

அதற்கு வள்ளலார் சொல்லும் பதில் பேருபதேசத்தில் ஒருபகுதி.கீழே.

இத்தருணம் இங்கு உண்டாகும் கூச்சல் குழப்பம் முதலியவையும் அடுத்தவர்களுக்குப் பக்குவம் வருவிக்கவும் பாவிகளை விலக்கவும் உண்டாயின.

ஆதலால் நாம் எல்லவரும் இத்தருணம் இப்போதே விசேஷ நன்முயற்சியுடனே இருந்தால், ஆண்டவர் வருகிறபோது, நம் கீழ்ப் பாகத்திலுள்ள அசுத்த மாயாதிரையோடு கூடி மேற்பாகத்திலிருக்கிற சுத்த மாயையினுடைய பச்சைத் திரையும் நீங்கிப் போய்விடும்.

 *கருமையிற் பச்சை வண்ணமுடையது அசுத்தமாயாதிரை*.

*பொன்மையிற் பச்சை வண்ணமுடையது சுத்தமாயா திரை*.

 கருமையிற் பச்சை வண்ணமுடைய அசுத்தமாயாதிரை நீங்கினபிறகு, மற்ற எட்டுத் திரைகளும் அதிக விரைவில் நீங்கிப் போய்விடும். இத்திரைகளின் விவரத்தைத் திருவருட்பெருஞ்ஜோதி அகவலில் கண்டுணர்க.

 மேலும், இது நீங்கினவுடனே ஒருவன் பஞ்சகிருத்திய முதலானவையுஞ் செய்வான். ஆதலால், ஒவ்வொருவரும் முயற்சியுடனே இருந்தால், அதற்குத் தக்க லாபத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
என்று பதிவு செய்கிறார்.

மனித பிறப்பில் பெறவேண்டியது ஆன்மலாபம் மட்டுமே.

அதை விடுத்து வீண் விவாதங்களிலும்.உலக இச்சைகளிலும்.சமய மத வழிப்பாட்டு முறைகளிலும். காலத்தை வீணாக்குவதால் இறுதியில் மரணம் என்பது நிச்சயம்.என்று எச்சரிக்கை விடுகின்றார் வள்ளலார்.

வள்ளலார் பாடல் !

சுகமறியீர் துன்பம் ஒன்றே துணிந்து அறிந்தீர் உலகீர்
சூதறிந்தீர் வாதறிந்தீர் தூய்மை யறிந்திலிரே

இகம்அறியீர் பரம்அறியீர் என்னே உங்கருத்தீர்
தென்புரிவீர் மரணம் வரில் எங்குறுவீர் அந்தோ

அகமறிந்தீர் அனகமறிந் தழியாத ஞான
அமுதவடிவம் பெறலாம் அடைந்திடுமின் ஈண்டே

முகமறியார் போலிருந்தீர் என்னை அறியீரோ
முத்தரெலாம் போற்றும்அருட் சித்தர்மகன் நானே.!

என்று.இகம் பரம் தெரியாமல் வாழ்ந்து அழிந்து கொண்டுள்ளீர்கள்.
என்னை அறியீரே.. என்னைப்பாருங்கள்.
என்னைப்பார்த்து  உங்கள் வாழ்க்கையில் மாற்றிக் கொள்ளுங்கள் என்று அன்பாக ஆன்மநேயத்தோடு அழைக்கிறார்.

மேலும் காலம் தாழ்த்தாமல் விரைந்து வாருங்கள்.காலத்தை விரயம் செய்தால் காலன் வந்து கவ்விக் கொள்வான்.

காலன் என்னும் எமனை எதிர்த்து போராடி வெற்றி பெறுவதே வள்ளலார் காட்டும் சுத்த சன்மார்க்க கொள்கையாகும்.

வள்ளலார் பாடல் !

விரைந்து விரைந்து அடைந்திடுமின் மேதினியீர் இங்கே
மெய்மை உரைக் கின்றேன் நீர் வேறு நினையாதீர்

திரைந்து திரைந்து உளுத்தவரும் இளமை அடைந்திடவும்
செத்தவர்கள் எழுந்திடவும் சித்தாடல் புரிய

வரைந்து வரைந்து எல்லாஞ்செய் வல்லசித்தன் தானே
வருகின்ற தருணம் இது வரம்பெறலாம் நீவீர்

கரைந்து கரைந்து உளம்உருகிக் கண்களின் நீர் பெருகிக்
கருணை நடக் கடவுளை உட் கருதுமினோ களித்தே.!

இறைவனை இடைவிடாது தொடர்பு கொண்டு கண்களில் நீர்பெருக அழுதால் எமன் நெருங்க மாட்டான்.

குழந்தை அழுதால் தாய் தானே வந்து குழந்தைக்கு பால் கொடுப்பாள்.

அதேபோல் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை நினைந்து நினைந்து.உணர்ந்து உணர்ந்து.நெகிழ்ந்து நெகிழ்ந்து. இடைவிடாது அழுது தொடர்பு கொண்டால்

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நெருங்கி வந்து அருள் வழங்கி ஆட்கொள்வார்.

ஆதலால் இதுவரை இருந்த்து போல் இனியும் வீண்காலம் கழிக்காமல் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்ளுங்கள் என்கிறார்.

நாமும் வள்ளலார் வழியில் நின்று அருளைப்பெற்று மரணத்தை வென்று வாழ்ந்து மற்ற உலக ஆன்மநேய சகோதர சகோதரிகளுக்கு காட்டுவோம்.

வழிப்பாட்டு விஷயத்தில் சன்மார்க்க அன்பர்கள் ஆச்சாரா சங்கற்ப விகற்பங்கள் அற்ற காரியங்களில் விழிப்புடன் வழிபட வேண்டும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு