பிறவி சட்டத்தை கிழித்தவர் வள்ளலார் !
பிறவி சட்டத்தை கிழித்தவர் வள்ளலார் !
உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே ஆன்மாவை இந்த உலகத்திற்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அனுப்பிக்கொண்டே இருக்கின்றார்.
அந்த ஆன்மாக்கள் தாவரம்.ஊரவன.பறப்பன.நடப்பன.
தேவர்.அசுர்ர். என பலகோடி பிறப்புக்கள் எடுத்து இறுதியில் மனிதப்பிறப்பு கிடைத்துள்ளது.
மனிதப்பிறப்பின் இறை நோக்கம் இறை சட்டம் யாதுஎனில் ?
மனித ஆன்மாவிற்கு மட்டுமே உயர்ந்த அறிவு இறைவனால் கொடுப்பட்டுள்ளது.உயர்ந்த அறிவுபெற்ற மனிதன் இறைவனைத் தொடர்புகொண்டு அருளைப்பெற்று .உடம்பையும் உயிரையும் அழிக்காமல் ஒளிதேகமாக மாற்றி மரணத்தை வென்று இறைவனுடன் கலந்து பேரின்ப வாழ்வு வாழ வேண்டும் என்பதே இறைவன் ஆணையாகும் சட்டமாகும்.
இந்த சட்டம் வள்ளலாருக்கு முன்பு வரையில் அமுலுக்கு வரவில்லை.சட்டத்தின் நுணுக்கங்கள் நோக்கங்களை எந்த அருளாளர்களும் தெரிந்து கொள்ளவில்லை.அவர்களுக்கு புலப்படவில்லை.
சட்டத்தின் நுணைக்கங்களை மக்களுக்கு போதிக்கவே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் வருவிக்க உற்றவர் தான் வள்ளலார் என்பவராகும்.
ஆன்மாக்களின் நன்மைக்காக புதிய அருள் சட்டத்தை அமுல் படுத்தி உள்ளார் வள்ளலார்.
வள்ளலார் பாடல் !
கட்டமும் கழன்றேன் கவலை விட்டு ஒழித்தேன் கலக்கமும் தீரந்தன்ன் பிறவிச்
சட்டமும் கிழித்தேன் தூக்கமும் துறந்தேன் சாவையும் நோவையும் தவிர்த்தேன்
சிட்டமும் அடைந்தேன் சிற்சபை உடையான் செல்வ மெய்ப்பிள்ளை என்று ஒரு பேர்ப்
பட்டமும் தரித்தேன் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே !
மேலே கண்ட பாடலில் எளிய தமிழிலே சொல்லி உள்ளார் விளக்கம் வேண்டாம் என நினைக்கிறேன்.
மரணம் வருவது இயற்கை என்றும் ஆறிலும் சாவு நூறிலுஞ் சாவு என்ற பழமொழியை மாற்றியவர் வள்ளலார்.
மரணம் என்பது இயற்கையில் வருவதில்லை்.செயற்கையில் தான் மரணம் வருகின்றது.
தப்பாலே சகத்தவர் சாவே துணிந்தார் என்று சொல்லுகின்றார்... தவறு செய்வதால்தான் மரணம் வருகின்றது.
மரணம் வருவது இயற்கை அல்ல! செயற்கைதான் மரணம் என்று சத்தியம் வைத்து சொல்லுகின்றார்...
இது இன்று நேற்று நடப்பதில்லை மனிதர்கள் தோன்றிய காலத்தில் இருந்தே நடைப்பெற்று கொண்டே இருக்கிறது.
இந்த மரணப் பெரும்பிணியை தீர்க்க. நீக்க ஒழிக்க எந்த கடவுள்களாலும் முடியவில்லை.எந்த அருளாளர்களாலும் முடியவில்லை.ஆதலால் காலம் காலமாக நடந்து வருவதால் மரணம் என்பது இயற்கை என்று சொல்லி வைத்து விட்டார்கள்.
எனவே பழைய சட்டத்தை நீக்கிவிட்டு புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளார் வள்ளலார்.
வள்ளலார் பாடல் !
வள்ளலார் காட்டிய வழியில் செல்வோம் மரணத்தை வெல்வோம்
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

- சாவதென்றும் பிறப்பதென்றும் சாற்றுகின்றபெரும்பாவம் தன்னைஎண்ணி
- நோவதின்று புதிதன்றே என்றும்உள தால்இந்த நோவை நீக்கி
- ஈவதுமன் றிடைநடிப்போய் நின்னாலே ஆகும்மற்றை இறைவ ராலே
- ஆவதொன்றும் இல்லைஎன்றால் அந்தோஇச் சிறியேனால் ஆவதென்னே.!
சாவதுஎன்பதும் பிறப்பதுஎன்பதும் காலம் காலமாக நடந்து வருகின்றது.. இந்த நோயை நீக்க எந்த கடவுளாலும் முடியவில்லை.
எந்தக் கடவுள்களுக்கும் அருள் வழங்கும் தகுதி இல்லை.ஆதலால் அருள் வழங்கும் கடவுளை கண்டு பிடித்தார் வள்ளலார்.
அவர்தான் *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் * என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்துகின்றார்.
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் மட்டுமே அருள் வழங்க முடியும்.எனவே தான் நின்னாலே ஆகும் மற்ற இறைவராலே ஆவதும் ஒன்றும் இல்லை என்று ஆணித்தரமாக சொல்லுகின்றார்..
வள்ளலார் பாடல் !
ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதி என் உளத்தே
நீதியில் கலந்து நிறைந்த்து நானும் நித்தியன் ஆயினேன் உலகில்
சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தே சத்தியச் சுத்த சன்மார்க்க
வீதியில் உமைத்தான் நிறுவுதல் உண்மை விளம்பினேன் வம்மினோ விரைந்து !
என்றும்
ஆதி அந்தமும் இல்லதோர் அம்பலத்தாடும்
ஜோதி தன்னையே நினைமின்கள் சுகம் பெற விரைவில்
நீதிகொண்டே உரைத்தேன் இது மேல் ஏறும்
வீதி மற்றைய வீதிகள் கீழ்ச் செல்லும் வீதி !

என்னும் பாடல்கள் வாயிலாக தெரியப்படுத்துகின்றார்...
இனி சாதி சமய மதக் கொள்கைகள் யாவும் வேலைக்கு உதவாத வீண்கதைகளாகும்.
இதுவரையில் மரணம் அடைந்து.கீழ்வீதி என்னும் மண்ணுக்குள் சென்று கொண்டு இருந்தோம்.இனிமேல் நாம் கீழே செல்லாமல்.மேலே செல்லும் வீதியை காட்டியுள்ளார் வள்ளலார்.
இதுவரையில் மரணம் அடைந்து கீழே செல்லும் வீதீயைத்தான் சமயங்கள் மதங்கள் காட்டி உள்ளன.அவற்றையும் அவற்றின் கொள்கைகளையும். முற்றும் பற்று அற விட்டுவிட்டால் மட்டுமே. அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் வழங்கி மரணத்தில் இருந்து காப்பாற்றுவார்..
எமன் என்னும் கூற்றுவன் வந்து நம்மை கொண்டு செல்ல மாட்டான் இது சத்தியம் என்று சொல்லுகின்றார் வள்ளலார்.
வள்ளலார் பாடல் !
அமரரும் முனிவரும் அதிசயித்திடவே அருட்பெருஞ்ஜோதியை அன்புடன் அளித்து
கம்முறு சிவநெறிக்கு ஏற்றி என்தன்னையே காத்து எனது உளத்தினில் கலந்த மெய்ப்பதியே
*எமன் எனும் அவன் இனி இலை இலை மகனே* எய்ப்பற வாழ்க என்று இயம்பிய அரசே
சமரச சன்மார்க்க சங்கத்தின் முதலே தனி நடராஜ என் சற்குரு மணியே !
மேலே கண்ட பாடலில் எமன் என்னும் கூற்றுவன் நம்மை நெருங்க முடியாமல் வாழ்வதற்கு ஒரே வழி .*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் தோற்றுவிக்கப்பட்ட சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில்* நம் வள்ளல்பெருமான் சொல்லியுள்ள ஒழுக்க நெறிகளை பூரணமாக கடைபிடித்தால் மட்டுமே.
பிறப்பு இறப்பு என்ற பொய்யான சட்டத்தை கிழித்து. அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளலார் மூலமாக இயற்றிய புதிய சட்டத்தைப் பின்பற்றி வாழ்ந்து கடைபிடித்து.மரணத்தை வெல்ல முடியும்.எமனை விரட்ட முடியும் என்பதை தெளிவாக விளக்கியுள்ளார்.
மேலும் ஒருபாடல் !
ஆசை உண்டேல் வம்மின் இங்கே அருட்ஜோதிப் பெருமான் அம்மையுமாய் அப்பனுமாய் அருளும் அருளாளன்
ஏசறநீத் எனை ஆட்கொண்டு எண்ணியவாறு அளித்தான் எல்லாஞ்செய் வல்லசித்தன் என் உயிரில் கலந்தான்
தேசுடைய பொதுவில் *அருள்* திருநடனம் புரியத் திருவுளம் கொண்டு எழுந்து அருளும் திருநாள் இங்கு இதுவே
மோச உரை என நினைத்து மயங்காதீர் முக்காலத்தும் அழியா மூர்த்தம் அடைந்திடவே !
மேலே கண்ட பாடலில் ஆசைப்படுங்கள் அருளைப் பெறுவதற்கு ஆசைப்படுங்கள் என்கிறார் வள்ளலார்.
சமய மதங்கள் எல்லாம் அறுமின்கள் அறுமின்கள் ஆசையை அறவே அறுமின்கள்.ஈசனோடு ஆயினும் ஆசையை அறுமின்கள் என்றார்கள்.
உலக ஆசையை மாற்றி அருள் பெற ஆசைப்படுங்கள் என்கிறார் வள்ளலார்.
ஆசையை அழிக்க முடியாது மாற்ற முடியும் என்கிறார் வள்ளலார்.
ஆசை இருந்தால்தான் எதையும் சாதிக்க முடியும் ஆசை இல்லாதவன் சடமாக மாறிவிடுவான்.
மண்ணாசை.பொன்னாசை.
பெண்ணாசையை மாற்றி அருள் பெற ஆசைப்படுங்கள்.நிச்சியம் மரணத்தை வெல்லலாம்.
அருட்சுகம் ஒன்றே அரும்பெறல் பெருஞ்சுகம்
மருட்சுகம் பிற என வகுத்த
மெய்ச்சிவமே !
அருள் அறியார் தமை அறியார் எம்மையும் பொருளறியார் எனப் புகன்ற மெய்ச்சிவமே !
அருள்நிலை ஒன்றே அனைத்தும் பெறுநிலை
பொருள்நிலை காண்கெனப் புகன்ற மெய்ச்சிவமே !
என்னும் வரிகளில் அருளைப்பற்றி திருஅகவலில் நிறைய உள்ளது படித்து தெரிந்து கொள்ளவும்..
சாதி சமயச் சழக்கை விட்டேன் அருட் ஜோதியைக் கண்டேன் என்பார் வள்ளலார்...

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு