புதன், 11 செப்டம்பர், 2019

வள்ளலார் சரித்திரக் குறிப்பு !

வள்ளலார் சரித்திரக் குறிப்பு !

இயற்பெயர்... இராமலிங்கம்.

சிறப்புப் பெயர்... திருஅருட்பிரகாசவள்ளலார்.

பிறப்பு..5-10-1823.சுபானு வருடம் புரட்டாசிமாதம் 21 ஆம்நாள் ஞாயிற்றுக்கிழமை.
அவர் பிறந்த நாளை உலக ஒருமைப்பாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது.

மனித உடம்புடன் தோன்றியகாலம்
1823..1874 வரை.

பிறந்தஊர்...மருதூர்.சிதம்பரவட்டம்.கடலூர்மாவட்டம்.வடலூரிலிருந்து சுமார் 12 கிலோமீட்டர்.

பெற்றோர்...இராமய்யா உபகாரதந்தை.
சின்னம்மை உபகாரத்தாய்.

உடன் பிறந்தவர்கள்...சபாபதி.பரசுராமன்.உண்ணாமுலை.சுத்தரம்பாள்.

மனைவி...தனக்கோடி அம்மையார்.

வாழ்ந்த இடங்கள்..சென்னை 1823--1855
கருங்குழி...1856--1868
வடலூர்...1869-1870
மேட்டுக்குப்பம்.. 1870-1874 சித்தி பெற்ற இடம்.

வெளியிட்ட நூல்கள்...ஒழிவிலொடுக்கம்.
தொண்டமண்டலசதகம்.
தின்மய தீபிகை.

இயற்றியநூல்கள்...மனுமுறைகண்ட வாசகம்
ஜீவகாருண்ய ஒழுக்கம்.

அருளிய நூல்கள்...திருவருட்பா ஐந்து திருமுறைகள் பக்தி சம்பந்தமுடையது.

திருவருட்பா ஆறாம் திருமுறை... சமயம் கடந்த அருள் ததும்பும் ஞானப்பாடல்கள்.

நிறுவிய நிறுவனங்கள்...
 சமரச வேத சன்மார்க்கசங்கம்...1865
சத்திய தருமச்சாலை..1867.
சத்திய ஞானசபை...1872
சமரச சுத்த சன்மார்க்க சத்தியசங்கம்..1872
சித்திவளாகம்..1874

வள்ளலார் இறைவனால் பெற்ற பேறுகள்..

இறைவனால் வருவிக்க உற்றவர்.

இறைவனால் நல்லபிள்ளை என பட்டம் பெற்றவர்.

அடி.நடு.முடி காட்டப்பெற்றது.சூட்டப்பட்டது.

முடிவான ஞானத்தில் ஞானம் பெற்றது.

கர்மசித்தி.யோகசித்தி.ஞானசித்தி பெற்றது.

பொன் செய்யும் ஆற்றல் பெற்றது.

ஐந்தொழில் ஆற்றல் பெற்றது.

இறைவனால் மணிமுடி சூட்டப்பட்டது.

இறை செங்கோல் அளிக்கப்பெற்றது.

இறைவனால் கங்கனம் அணிவிக்கப்பட்டது.

இறைவனால் ஆழி அளிக்கப்பட்டது.

அம்பலத்தரசை அளிக்கப்பெற்றது.

நரை.திரை.பிணி.மூப்பு.மரணம் அனுகாது மரணம்இல்லாப் பெருவாழ்வு பெற்றது.

தம் உடம்பை மண்ணுக்கோ.நீருக்கோ.நெருப்புக்கோ.காற்றுக்கோ.ஆகாயத்திற்கோ இறையாகாமல் உடம்பை ஒளிமயமாய் மாற்றிகொண்டு இறைவனோடு கலந்த்து.

அற்புதங்கள் ...647 கோடி சித்திகளையும் முழுமையாக கைவரப்பெற்றது.

அருள்வாழ்க்கை...
கருவிலே இறைவனால் ஆட்கொள்ளப்பட்டது.

வழிபடுகடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.

வழிபடுகுரு...கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்!.

வழிபடுநூல்..திருவருட்பா.

கொள்கைகள். ...

பள்ளிக்கு செல்லாமல் பாடம் கற்காமல் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளால் அனைத்தும் கற்றது .

சமய மத தெய்வங்களைப் பற்றி ஐந்து திருமுறைகள் பாடியதும் இறைவன் சொல்லியே பாடியது...நடித்ததும் இறைவன் சொல்லியே நடித்தேன்.

பாடல்...

படித்தேன் பொய் உலகிய நூல் எந்தாய்
படிப்பித்தாய் அன்றியும் அப்படிப்பில் இச்சை
ஒடித்தேன் நான்ஒடித்தேனோ ஒடிப்பித்தாய் பின்
உன்னடியே துணைஎன நான் உறுதியாகப்
பிடித்தேன் மற்றதுவும் நீ பிடிப்பித்தாய் இப்
பேதையேன் நின்னருளைப் பெற்றோர்
போல்
நடித்தேன் எம்பெருமான் ஈதொன்றும் நானே
நடித்தேனோ அல்லது நீ நடிப்பித்தாயோ்!


இறுதியாக இறைவன் அருளைப்பெற்று இறைவன் சொல்ல எழுதியநூல் ஆறாம்திருமுறையாகும்.

பாடல்...

நான் உரைக்கும் வார்த்தை எல்லாம் நாயகன்றன் வார்த்தை
நம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே

வான் உரைத்த மணிமன்றில் நடம்புரியும் எம்பெருமான்
வரவெதிர் கொண்டு அவன் அருளால் வரங்கள் எலாம்பெறவே

தேன்உரைக்கும் உளம்இனிக்க எழுகின்றேன் நீவீர்
தெரிந்தடைந்து என்உடன் எழுமின் சித்திபெறல் ஆகும்

ஏன்உரைத்தேன் இறக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்ணர்
யான் அடையும் சுகத்தை நீர்தான் அடைதல் குறித்தே !

  • அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் வருவிக்கவுற்ற வள்ளலார் இறைவன் ஆணைப்படி வாழ்ந்து.அருள்பெற்று மரணத்தை வென்று். மனித குலத்திற்கு வாழும் வழிக்காட்டிஉள்ளார்.

அருட்ஜோதி ஆனேன் என்று அறையப்பா முரசு
அருளாட்சி பெற்றேன் என்று அறையப்பா முரசு
மருட்சார்பு தீர்ந்தேன் என்று அறையப்பா முரசு
மரணம் தவிர்த்தேன் என்று அறையப்பா முரசு ! 

வள்ளலார் கொள்கைகளை *வள்ளலார் கண்ட மெய்ப்பொருள்* என்னும்  இந்நூலை படித்து தெரிந்து கொள்ளவும்.

அருட்பெருஞ்ஜோதி

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு