சனி, 7 செப்டம்பர், 2019

வள்ளலார் இறுதியாக சொல்லியது !

வள்ளல்பெருமான் இறுதியாக சன்மார்க்க சங்கத்தார்க்கு இட்ட கட்டளை!

வள்ளலார் மேட்டுக்குப்பம் சித்திவளாக திருமாளிகையில்.ஸ்ரீமுக வருடம் கார்த்திகை மாதம் 1873 ஆண்டு இறுதியாக சொல்லியது.

வள்ளலார் தங்கியிருந்த மேட்டுக்குப்பம் சித்திவளாக திருவறையில். தான் வழிபாடு செய்து கொண்டிருந்த திருவிளக்கை. திருமாளிகைப் புறத்தில் வைத்து.இதை தடைபடாது ஆராதியுங்கள்.இந்தக்கதவைச் சாத்திவிடப் போகின்றேன் இனி கொஞ்சகாலம் எல்லோரும் ஆண்டவர் இப்போது தீப முன்னிலையில் விளங்குகின்றபடியால்.உங்களுடைய காலத்தை வீணிற் கழிக்காமல்.

நினைந்து நினைந்து  என்னும்  தொடக்கமுடைய ஞானசரியை 28 பாசுரங்கள் அடங்கிய பாடலில் கண்டபடி தெய்வபாவனையை இந்த தீபத்திற் செய்யுங்கள்.நான் இப்போது இந்த உடம்பில் இருக்கிறேன்.இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வேன் என்று திருவாய் மலர்ந்து அருளினார்கள்.

இவற்றிற்கு ஆதாரமான பாடல் !


என்னும் பாடல் வாயிலாக தெரியப்படுத்துகின்றார்.

அடுத்து 30-1-1874 ஸ்ரீமுக வருடம் தைமாதம் 19 ஆம் நாள் வெளிப்படுத்தியது. நான் பத்துப் பதினைந்து நாள்  உங்களுடன் இருக்கப்போகிறேன்.இனிமேல் என்னைப் பார்க்க முடியாது .உள்ளே செல்லப்போகிறேன். பார்த்து அவநம்பிக்கை அடையாதீர்கள்.ஒருகால் பார்க்க நேர்ந்து பார்த்தால் .யாருக்கும் தோன்றாது வேறு வீடாகத்தான் இருக்கும்படி ஆண்டவர் செய்விப்பார். என்னைக் காட்டிக்கொடார் என்று சொல்லிவிட்டு.

ஆயிரக்கணக்கான அன்பர்கள் முன்னிலையில்.சித்திவளாக திருமாளிகையின் உள்ளே சென்று .வெளியே தாளிட்டுக்கொள்ள சொல்லிவிடுகிறார்.திருவறையின்   உள்ளே சென்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் கலந்து அருட்பெருஞ்ஜோதியாக மாற்றம் அடைந்து விடுகிறார்..இதுவே கடவுள் நிலைஅறிந்து அம்மயமாதல் என்பதாகும்.

இவற்றிற்கு ஆதாரமான பாடல்களை இறுதியாக பதிவு செய்து வைத்துள்ளார்.

சத்திய அறிவிப்பு பாடல்கள் !


  • 1. ஐயன்அருள் வருகின்ற தருணம்இது கண்டீர்
    ஐயமிலை ஐயமிலை ஐயன்அடி ஆணை 
    மெய்யன்எனை ஆட்கொண்ட வித்தகன்சிற் சபையில் 
    விளங்குகின்ற சித்தன்எலாம் வல்லஒரு விமலன் 
    துய்யன்அருட் பெருஞ்சோதி துரியநட நாதன் 
    சுகஅமுதன் என்னுடயை துரைஅமர்ந்திங் கிருக்க 
    வையமிசைத் திருக்கோயில் அலங்கரிமின் விரைந்தே 
    மணியாலும் பொன்னாலும் மலராலும் வியந்தே. 
  • 2. தனித்தலைமைப் பெரும்பதிஎன் தந்தைவரு கின்ற 
    தருணம்இது சத்தியம்காண் சகதலத்தீர் கேண்மின் 
    இனித்தநறுங் கனிபோன்றே என்னுளம்தித் திக்க 
    இன்னமுதம் அளித்தென்னை ஏழுலகும் போற்ற 
    மனித்தஉடம் பிதைஅழியா வாய்மைஉடம் பாக்கி 
    மன்னியசித் தெல்லாம்செய் வல்லபமும் கொடுத்தே 
    கனித்தசிவா னந்தமெனும் பெரும்போகம் தனிலே 
    களித்திடவைத் திடுகின்ற காலையும்இங் கிதுவே. 
  • 3. சத்தியவான் வார்த்தைஇது தான்உரைத்தேன் கண்டாய் 
    சந்தேகம் இலைஇதனில் சந்தோடம் உறுவாய் 
    இத்தினமே அருட்சோதி எய்துகின்ற தினமாம் 
    இனிவரும்அத் தினங்கள்எலாம் இன்பம்உறு தினங்கள் 
    சுத்தசிவ சன்மார்க்கம் துலங்கும்எலா உலகும் 
    தூய்மைஉறும் நீஉரைத்த சொல்அனைத்தும் பலிக்கும் 
    செத்தவர்கள் எழுந்துலகில் திரிந்துமகிழ்ந் திருப்பார் 
    திருவருட்செங் கோல்எங்கும் செல்லுகின்ற தாமே. 
  • 4. என்சாமி எனதுதுரை என்உயிர்நா யகனார் 
    இன்றுவந்து நான்இருக்கும் இடத்தில்அமர் கின்றார் 
    பின்சாரும் இரண்டரைநா ழிகைக்குள்ளே எனது 
    பேருடம்பில் கலந்துளத்தே பிரியாமல் இருப்பார் 
    தன்சாதி உடையபெருந் தவத்தாலே நான்தான்
    சாற்றுகின்றேன் அறிந்திதுதான் சத்தியம்சத் தியமே 
    மின்சாரும் இடைமடவாய் என்மொழிநின் தனக்கே 
    வெளியாகும் இரண்டரைநா ழிகைகடந்த போதே !

  • மேலே கண்ட பால்களின் வாயிலாக தெரியப்படுத்துகின்றார்.
  • அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளலாரை ஆட்கொண்டு கலந்து கொள்வதற்காக.இன்று அவர் தங்கி இருந்த அறையில் வந்து அமர்ந்து காத்திருக்கின்றார் என்று நிகழ்காலத்தைக் குறிப்பிட்டு சொல்கின்றார்..
  • வள்ளலார் திருஅறைக்குள் சென்றதும் ஆண்டவருடன் கலந்து கொள்கிறார் என்பதற்கு ஆதாரமான பாடல்களே மேலே பதிவு செய்துள்ள பாடல்களாகும்.அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சொல்ல சொல்லி வள்ளலார் பதிவு செய்த பாடல்களாகும்.
  • வள்ளலார் ஆண்டவருடன் கலந்து கொண்டு மரணத்தை வென்று சித்தி பெற்றதால் சித்திவளாக திருமாளிகை என்று பெயர் வழங்கப்பட்டது.அதுவே மேட்டுகுப்பம் சித்திவளாக திருமாளிகை என்பதாகும்.
  • அருட்பெருஞ்ஜோதி !

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு