வியாழன், 19 செப்டம்பர், 2019

சொல்லாமல் வருவது மரணம் !


தெரிந்து வருவது பிறப்பு !
தெரியாமல் வருவது மரணம் !

ஒவ்வொரு ஆன்மாவும் தான் வாழ்வதற்கு தனக்கு என்று .உடம்பு என்னும் ஒரு வீடுகட்டிக்கொண்டு வீட்டோடு வெளியே வருகின்றது. பின் இவ்வுலகில் வாழ்கிறது.

வீட்டோடு வந்த ஆன்மா.வீட்டை பாதுகாக்க தெரியாமல் வீட்டைவிட்டு சென்று விடுகின்றது.வீட்டை விட்டு பிரிந்துவிட்ட பிறகு உயிர் இல்லாத உடம்பைப் பார்த்து உறவினர்கள்.சுற்றத்தார்கள்.நண்பர்கள்.யாவரும்
குய்யோ .முறையோ.அய்யோ என்று அடித்துக்கொள்கிறார்கள்.மாண்டு மாண்டு அழுதாலும் மாண்டார் வருவதில்லை என்று தெரிந்தும் கதறுகிறார்கள்..

இதற்கு வள்ளலார் சொல்லும் பாடல் !


உடம்பை விட்டு உயிர் பிரியாத வாழ்க்கை உள்ளது என்பது தெரியாமல் .இந்த மக்கள் இப்படி அழுகிறார்களே என்று .நமக்காக மிகவும் வேதனைப்படுகின்றார் வள்ளலார்.

பிணி.மூப்பு.மரணம் வராமல் வாழும் வாழ்க்கையைக் கற்றுத்தரவே சிறப்பான சுத்த சன்மார்க்க கொள்கையை தோற்றுவித்துள்ளேன்.வாருங்கள் வாருங்கள் என அழைக்கின்றார் 

மரணத்தை வெல்லும்.  *சாகாக்கல்வி கற்றுத்தர அழைக்கின்றார்*

அடுத்தப் பிறப்பில் பார்த்துக் கொள்ளலாம் என நினைந்து ஏமாந்து போய்விடாதீர்கள்.இந்த பிறப்பிலே மரணத்தை வெல்ல முடியும் என்கிறார்.

தான் வாழ்ந்த உடம்பு என்னும் வீட்டை காப்பாற்றத் தெரியாமல். பாதுகாக்கத் தெரியாமல் பழுது பார்க்கத் தெரியாமல்.மாற்றம் அடையசெய்யாமல் வாழ்வதால் மீண்டும் இந்த வீட்டில் வாழ்வதற்கு வாய்ப்பில்லை.தகுதியில்லை என்று தெரிந்தவுடன்.*ஆன்மா*வேறு ஒரு புதிய வீட்டைத் தேர்வு செய்து. பின் அந்த வீட்டிற்கு போய் குடித்தனம  செய்ய ஆரம்பித்துவிடுகிறது.

ஆன்மா இவ்வுலகிற்கு வந்ததிலிருந்து. தான் வாழ்வதற்கு வீட்டை மாற்றிக் கொண்டே உள்ளது.ஒவ்வொரு வீட்டிற்கும் மாறுகின்றபோது முன்பு இருந்த வீட்டின் ஞாபகம் வருவதில்லை.

நிலையான வீட்டை மாற்றிக் கொண்டால் மட்டுமே நினைப்பு மறைப்பு.பிறப்பு இறப்பு அற்றுப்போகும்.

*ஆன்மாவிற்கு ஞாபக மறைதி அதிகம்*

ஆன்மாவிற்கு நினைப்பு.மறைப்பு வந்துகொண்டே இருப்பதிற்கு காரணம்.தன்னை அனுப்பியவர் இயக்குபவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பது தெரியாமல் வாழ்வதும்.அவரிடம் இருந்து அழியாத அருள் பெறும் தகுதி இல்லாமல் வாழ்வதால் நினைப்பு மறைப்பு மரணம் வந்து கொண்டே உள்ளது.

தன் கரணங்களும்.இந்திரியங்களுமே முக்கியமானது என நினைந்து உலக போகங்களில் வாழ்வதால் ஆன்ம அறிவு விளக்கத்தை இழந்து விடுகின்றது. அதனால் நினைப்பு மறைப்பு உண்டாகிறது.

மேலும் ஆன்மாவானது. பொய்யான புறத்தில் வைக்கப்பட்டுள்ள  ஜட தத்துவங்களை கடவுளாக நினைந்து வணங்கி வழிப்பட்டுக் கொண்டு இருப்பதால்.நினைப்பு.மறைப்பு உண்டாகி.உடம்பை விட்டு உயிரும்.ஆன்மாவும் பிரிந்து விடுகின்றது..

அதுவே பிறப்பு இறப்புகளுக்கு காரண காரியமாகி விடுகின்றது.

*நினைப்பு மறைப்பு அற்றால் மரணம் நீங்கும் என்பார்* வள்ளலார்

மனித பிறப்பு கிடைக்க 84 லட்சம் யோனிபேதங்களை கடந்து.எல்லாப்பிறப்பும் எடுத்து.அனைத்து பிறப்பையும் தாண்டி ஆன்மா இந்த மனித தேகத்திற்கு வந்துள்ளது.அதனால்தான் மனிதப்பிறப்பிற்கு உயர்ந்த அறிவுள்ள பிறப்பு என்று சொல்லப்படுகின்து.

பிறப்பதும் வாழ்வதும் தெரிகிறது.

ஆனாலும் எதிர்பாராது திடீர் என எதாவது ஒரு காரணத்தால் மரணம் வந்து விடுகின்றது. எந்த வயதில்.எந்த நேரத்தில் எந்த கோணத்தில்.எந்த இடத்தில் வரும் என்றே தெரிவதில்லை.

நாம் சம்பாதித்த பொருட்களைக் கொண்டு எவ்வளவு செலவு செய்தாலும் மரணத்தை வெல்ல முடிவதில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.தெரிந்தும் தவறே செய்து  கொண்டுள்ளோம்.

உடம்பையும் உயிரையும் காப்பாற்ற நேர் வழி ஏதும் தெரியவில்லை. நம் முன்னாடி வாழ்ந்த ஆன்மிக அருளாளர்களும் வழிகாட்டிகளும் உண்மைத் தெரியாமல் உளறிக் கொண்டுள்ளார்கள்.நாமும் நம்பிக் கொண்டே உள்ளோம்.

வள்ளலார் தெளிவான சுத்த சன்மார்க்க ஒழுகக நெறி கொள்கைகளைச் சொல்லியும் .அதன்படி வாழ்ந்தும் மக்களுக்கு வழிகாட்டியுள்ளார்.

வள்ளலார் பாடல் !


புன்செய் நிலத்திற்கு கூட உதவாத .மேடு பள்ளமாக உள்ள.பாழடைந்த  கரடுமுரடான மலைக் காட்டை மரம் செடி போன்றவைகளை வெட்டி அகற்றி.மேடு பள்ளங்களை சமம்படுத்தி.என்றும் வற்றாத தண்ணீர் வசதி செய்து.அதை வெளியேற்ற.மோட்டார் போன்ற மின்அமைப்புக்களை அமைத்து அழகான நன்செய் நிலமாக மாற்றியபின் அங்கே என்ன பயரிடனும்.நெல்.வாழை.தென்னை.கரும்பு போன்ற நன்செய் பயிர்களை வைத்து உற்பத்தி செய்து தங்களுக்கும் மற்றவர்களுக்கும் பயன்படும்படி அறிவுள்ளவன் செய்வான்.

ஆனால் அந்த இடத்தில் கடுகுபோன்ற விஷப்பயிர்களை வளர்த்து யாருக்கும் பிரயோசனம் இல்லாமல் செய்வது விடுகிறான்.அவன் அவ்வளவு பாடுபட்டு பயன் அறியாமல்.பயன்இல்லாமல் தன் உழைப்பை வீண்விரயம் செய்து விடுகிறான்.

அந்த அறிவில்லாதவன் செயல்போல்.!

நமக்கு அளவு கடந்த துற்குண பிறவிகள் கொடுத்து இறுதியில் உயர்ந்த அறிவுள்ள பிறவி கொடுத்துள்ளார் நமது அருட் தந்தை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.

நமக்கு உயர்ந்த அறிவுள்ள பிறவி கிடைத்தும் நம் உடம்பையும் உயிரையும் காப்பாற்ற முடியாமல்.பொருள் என்னும் விஷத்தை உண்டு மாண்டு கொண்டுள்ளோம்.

மரணத்தை வெல்ல ஈடுகட்ட தெரியவில்லை.

எதைவைத்து ஈடுகட்டுவது ? 

பொருள் உணவை குறைத்து. அருள் உணவை பெறுவதே ஈடுகட்டுவதாகும்.கொடுக்க வேண்டியதை கொடுத்து.தடுக்க வேண்டியதை தடுக்கக் கற்றுக் கொள்வதே சாகாக்கலை என்பதாகும்.

நாம் பொருள் உணவு உட்கொள்ளுகின்ற வரை மரணம் வந்தே தீரும்.

வள்ளலார் பாடல் !



மேலே கண்ட பாடலில் தெளிவாக விளக்கம் தந்துள்ளார்.சோற்றாசை உள்ளவரை எமன் என்னும் கூற்றுவன் துணிந்து வந்து கொண்டுபோய்விடுவான்.எச்சரிக்கை மணி ஒலிக்காமல் கொண்டுபோய் விடுவான்..

சன்மார்க்கத்தை பின் பற்றும் அன்பர்கள் மாமிச உணவை நிறுத்திவிட்டால் போதும் மரணத்தை வென்றுவிடலாம் என நினைப்பது அறியாமையாகும்.எந்த உணவு உட்கொண்டாலும் மரணம் வந்தே தீரும்.

மாமிச உணவு என்பது விகார உணவு.அதாவது துர்நாற்றமுள்ள அசுத்த உணவு அவைகளை உட்கொள்வது  தவறுதான்.ஆனால் அதுவே முடிவல்ல.எந்த உணவை உட்கொண்டாலும் மரணம் வந்துவிடும்.

*உணவு மாற்றம் தேவை !*

உணவை மாற்றுவதற்கும் கொஞ்சம் கொஞ்சமாக பழகுவதற்கும்தான்.புழுக்காத உணவை உட்கொள்ள வேண்டும் என்கிறார் வள்ளலார். உணவு மாற்றம் இல்லாமல் அருள் பெருவதற்கு வாய்ப்பே இல்லை.

அவைகள்தான்.நாட்டுச்சர்க்கரை.கற்கண்டு.தேன்.அயச்செந்தூரம்.தாமரைபஸ்பம்.போன்றஉணவு வகைகளாகும்.இவைகள் புழுக்காத உணவாகும்..புழுக்காத உணவு என்றால் மலம் வராத உணவாகும்.மற்ற உணவுகள் யாவும் புழுக்கின்ற மலம் வரும் உணவாகும்.

மலம்.சிறுநீர்.வியர்வை. பீளை.குறும்உடலில் .எச்சில்.போன்ற துர்நாற்றம் உள்ள கழிவுகள் உடலில் உள்ளவரை அருள் கிடைக்காது.அருள் சுரக்காது.

ஒவ்வொருவருக்கும் கருணை நன்முயற்சி வேண்டும் என்கிறார் வள்ளலார்.

உணவு உட்கொள்பவர்களுக்கு முழுமையான அன்பு.தயவு.கருணை நன்முயறசி வரவே வராது...(ஏகதேசம் வரும்.கிடைக்கும்).அருள் பெறுவதற்கு முடியவே முடியாது.ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையும் அறிவு பூர்வமாக விளங்காது.

கருணை ததும்பி அகமும் புறமும் அருள்  நிறைய வேண்டுமானால்.. வள்ளலார்போல் உணவு உட்கொள்ளாமல்.தன் ஜீவகாருண்ய பணியை இடைவிடாம் செய்து கொண்டு.அருட்பெருஞ்ஜோதியே கதி என்று இருக்க வேண்டும். .அதற்கு உணவு இல்லாமல் உயிர் உடம்பை பாதுகாக்கும் பழக்கதிறகு கொண்டுவர வேண்டும்..

சாப்பிட்டாலும் மரணம்.சாப்பிடாத விட்டாலும் மரணம்..எவற்றை எல்லாம் ஈடுகட்ட வேணுமோ அவற்றை எல்லாம் ஈடு கட்ட பழக வேண்டும்.

சன்மார்க்கிகள் சாப்பாடு போட்டால் போதும் மரணத்தை வென்றுவிடலாம் என்று நினைப்பதும் அறியாமையாகும்.

பசித்தவர்களுக்கு உணவு அளித்து நாம் சாப்பிடாமல் இருப்பதே ஜீவகாருண்யம். நம் ஜீவனைக் காப்பாற்ற. மற்ற ஜீவனைக் காப்பாற்றுவதே ஜீவகாருண்யம்.

நாம் மற்றவர்களுக்கு பசியைப் போக்கினால் நம்பசியை இறைவன் போக்குவார் என்ற உணர்வை வரவைத்துக் கொள்வதே ஜீவகாருண்யம்.

*வள்ளலார் வடலூரில் தருமச்சாலை துவக்கினார்.ஒருநாளும் தருமச்சாலையில் அவர் உணவு உட்கொள்ளவில்லை*.

*உலகத்தில் உணவு உட்கொள்ளாமல். பூரண அருளைப்பெற்றவர் வள்ளலார் ஒருவரே*

மற்ற ஞானிகள் எல்லாம் ஏகதேச அருளைப்பெற்றவர்களே ! *நான் சொல்லவில்லை வள்ளலாரே சொல்லுகின்றார்*.

பாடல்.!



உண்ணுவதும். உறங்குவதும்.விழிப்பதும் இறத்தல்.பிறத்தல் பல பெறுவதுமாய் உழலும் மறங்குலவு ஆன்ம அணுக்கள் பலர் .அவர்கள் செய்த சிறிய சிறிய விரதத்தால்.மதத்தலமை.பதத்தலைமை வாய்த்தனர்.அதனால் அவர்களை வணங்குவதாலோ.வழிபடுவதாலோ ஒரு பயனும் இல்லை என்கிறார்.

நான் இயற்கை உண்மையான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் புகழ்பாடி இருக்கின்றேன் என்கிறார்.

எனவேதான் பசித்திரு.தனித்திரு.விழித்திரு என்கிறார் வள்ளலார்.

உண்மையாக இறைவனை நினைத்தால் அழுத கண்ணீர் மாறுமோ ஆகாரத்தில் இச்சை செல்லும் என்கிறார் வள்ளலார்.

எனவே பிறப்பு தெரிந்தே வருகின்றது. மரணம் என்னும் இறப்பு தெரியாமல்.சொல்லாமல் வந்துவிடுகின்றது.சன்மார்க்கிகள் சாக்கிரதையாக இருக்க வேண்டும்.

உலகியல் வாழ்க்கையில் நாம் அனுபவித்த பொருட்கள்தான் கடன். வாங்கிய கடனை ஈடுகட்ட தெரிந்து கொள்ளவேண்டும். திருப்பித் தந்துவிட வேண்டும்.

திருப்பித்தருவதே புற ஜீவகாருண்யம்.என்பதாகும்.
எல்லாவற்றையும் ஈடுகட்டினால் மட்டுமே மரணத்தை வெல்ல முடியும்

மரணத்தை வெல்லுவதே மனித வாழ்க்கை என்பதை அறிந்து.புரிந்து.தெரிந்து வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவேண்டும்.

வள்ளலார் பாடல் ! 



நமக்கு வரும் மரணத்தைப்பற்றி நாம் கவலைப்படுவதில்லை.நமக்காக வள்ளலார் கவலைப்பட்டு அழைக்கின்றார்.

சன்மார்க்கிகளே மெய்ப்பொருளை உணர்ந்து செயல்பட்டு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.கடமையாகும்..

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு