வியாழன், 20 டிசம்பர், 2018

ஆன்மசுகம் ஆன்ம இன்பம் என்றால் என்ன ?

ஆன்ம சுகம் ஆன்ம இன்பம் என்பது என்ன ?

உலகில் உருவத்தை வைத்து ஆண்பெண் என்பது தவறு...ஆன்மாவாகிய அனைத்தும் பெண் தன்மை கொண்டது .

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மட்டுமே ஆண் தன்மை கொண்டவராகும்....

உலகியல் ஆண்பெண் என்ற உறவு ஓர் இனச் சேர்க்கை உறவு என்பது போலாகும்..

ஆன்மாக்கள் யாவும் பெண் இனத்தைச் சார்ந்தது. பெண்ணும் பெண்ணும் உடல் உறவு கொள்வது உலகியல் இன்பம் அதற்கு சிற்றின்பம் என்பது பெயர்..அவை உடம்பையும் உயிரையும் அழித்துவிடும்.

அதாவது ஆன்மா வாழும் உடம்பின் மீது பற்றுக் கொண்டு காதலித்து அழிந்து கொண்டு உள்ளோம்

ஆன்மாவும் பரமான்மாவும் உறவு கொள்வது தான் உண்மையான இன்பம்.உண்மையான சுகம்.அந்த இன்பம் என்றும் அழியாதது.

உலகியல் இன்பத்தால் சுக்கிலம் சுரக்கும்.சுக்கிலம் தோன்றும்.அவை உடம்பையும் உயிரையும் அழித்துவிடும்.அதற்கு சிற்றின்பம் என்று பெயர்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் உறவு கொள்ளும் போது அருள் சுரக்கும்.அருள் தோன்றும்.ஆன்மா அருள் சுகத்தை அனுபவிக்க வேண்டும்

அதற்கு பெயர்தான் பேரின்பம் என்று பெயர்.

எனவே தான் சித்தர்கள்.யோகிகள் ஞானிகள் எல்லாம் உலகியல் திருமணம் செய்து கொள்ளாமல் இறைவனைத் தொடர்பு கொள்ள தேடினார்கள்..இறைவனைக் காதலித்தார்கள் ..

சித்தர்கள் யோகிகள் ஞானிகள் எல்லாம்  எல்லாம் இறைவன் என்று காதலித்தது எல்லாம் உண்மையான இறைவனை அல்ல.அதனால் அவர்கள் ஆன்மாவின் முழு இன்பத்தையும் சுகத்தையும் அனுபவிக்க முடியவில்லை..

வள்ளலார் மட்டுமே உண்மையான இறைவனைக் கண்டுபிடித்தார் காதலித்தார்..திருமணம் செய்து கொண்டார்

அந்த இறைவன் தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.

வள்ளலார் பாடல் !

காதல் கைம் மிகுந்த தென்செய்வேன் எனைநீ

கண்டுகொள் கணவனே என்றாள்

ஓதலுன் புகழே அன்றிநான் ஒன்றும்

உவந்திலேன் உண்மையீ தென்றாள்

பேதைநான் பிறிதோர் புகலிலேன் செய்த

பிழையெலாம் பொறுத்தருள் என்றாள்

மாதய வுடைய வள்ளலே என்றாள்

வரத்தினால் நான்பெற்ற மகளே.!

உடம்பை கொடுத்த மாயை யான தாய் இந்த இராமலிங்கம் என்ற பெயர் கொண்ட ஆனமாவாகிய பெண் உன்னையே நினைத்து காதல் கொண்டுள்ளாள்.என்று ஆண்டவருக்கு தூது அனுப்புகிறாள்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தன்னை முழுமையாக காதலித்த இராமலிங்கபெருமான் வள்ளலாரின் உண்மையான காதலைத் தெரிந்து கொண்டு திருமணம் செய்து கொண்டார்....

வள்ளலார் பாடல் !

எல்லாஞ்செய் வல்லதுரை என்னைமணம் புரிந்தார்

எவ்வுலகில் யார்எனக்கிங் கீடுரைநீ தோழீ

நல்லாய்மீக் கோளுடையார் இந்திரர்மா முனிவர்

நான்முகர்நா ரணர்எல்லாம் வான்முகராய் நின்றே

பல்லாரில் இவள்புரிந்த பெருந்தவத்தை நம்மால்

பகர்வரிதென் கின்றார்சிற் பதியில்நடம் புரியும்

வல்லானை மணந்திடவும் பெற்றனள் இங்கிவளே

வல்லாள்என் றுரைக்கின்றார் நல்லார்கள் பலரே.!

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை திருமணம் செய்து கொண்ட ஒரே பெண் (ஆன்மா) இவள்தான் என்று...இந்திரர்.
நான்முகர்
நாரணர்.மற்றும் பல்லோரும் நல்லோரும் எல்லோரும் போற்றி வாழ்த்துகிறார்களாம்...

திருமணம் செய்து கொண்டது மட்டும் அல்ல..எங்கனம் அனுபவிக்கின்றார் என்பதை வள்ளலார் விளக்குகின்றார்...

வள்ளலார் பாடல் !

கண்உறங்கேன் உறங்கினும்என் கணவரொடு கலக்கும்

கனவேகண் டுளமகிழ்வேன் கனவொன்றோ நனவும்

எண்அடங்காப் பெருஞ்ஜோதி என்இறைவர் எனையே

இணைந்து இரவு பகல் காணா தின்புறச்செய் கின்றார்

மண்உறங்கும் மலைஉறங்கும் வளைகடலும் உறங்கும்

மற்றுள
எல்லாம் உறங்கும் மாநிலத்தே நமது

பெண்உறங்காள் எனத்தாயர் பேசிமகிழ் கின்றார்

பெண்கள்எலாம் கூசுகின்றார் பெருந்தவஞ்செய் கிலரே.!

என் இறைவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இரவு பகல் காணாது  இன்பம் உற செய்கின்றார்.என் மகள் செய்த தவமே பெரியதே என்கிறார் தாய்

மண்உறங்கும் மலை உறங்கும் வளைகடலும் உறங்கும் மற்றும் உள்ள எல்லாம்  உறங்கும் மானிலத்தே  என் பெண் உறங்காள் என்று எல்லோரும் பேசி மகிழ்கின்றார்கள்.
என்கின்றார்

என்பெண் செய்த தவம் யாரும் செய்யவில்லையே.

இந்த உலகில் உள்ள ஆன்மாக்கள் எல்லாம் வள்ளலாரைப்போல்
ஒரே நோக்கத்தோடு ஒரே குறிக்கோளோடு.
உண்மை அன்போடு
. அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைக் காதலித்து திருமணம் செய்து பூரண அருளைப் பெற்றால் மட்டுமே மரணத்தை வென்று..

பேரின்ப சித்தி பெருவாழ்வில் வாழமுடியும்.

இதுவே ஆன்மாவின் இம்மை இன்ப வாழ்வு....மறுமை இன்பவாழ்வு..பேரின்ப வாழ்வாகும்

இம்மை இன்ப லாபம்.மறுமை இன்ப லாபம் பேரின்ப லாபமாகும்....

வள்ளலார் அழைக்கின்றார் !

இன்புறலாம் எவ்வுலகும் ஏத்திடவாழ்ந் திடலாம்

எல்லாம்செய் வல்லசித்தி இறைமையும்பெற் றிடலாம்

அன்புடையீர் வம்மின்இங்கே சமரசசன் மார்க்கம்

அடைந்திடுமின் அகவடிவிங் கனகவடி வாகிப்

பொன்புடைநன் கொளிர்ஒளியே புத்தமுதே ஞான

பூரணமே ஆரணத்தின் பொருள்முடிமேல் பொருளே

வன்புடையார் பெறற்கரிதாம் மணியேசிற் சபையின்

மாமருந்தே என்றுரைமின் தீமையெலாம் தவிர்ந்தே.!

என்ற பாடல் மூலம் ஆன்மாக்கள் எல்லாம் அருள்பெற்று இன்பம் அடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு அன்பு.தயவு. கருணையோடு அழைக்கின்றார்....

ஆசை உண்டேல் வாருங்கள் !


ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்

அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்

ஏசறநீத் தெனைஆட்கொண் டெண்ணியவா றளித்தான்

எல்லாஞ்செய் வல்லசித்தன் என்னுயிரில் கலந்தான்

தேசுடைய பொதுவில்அருள் சித்திநடம் புரியத்

திருவுளங்கொண் டெழுந்தருளும் திருநாள்இங் கிதுவே

மோசஉரை எனநினைத்து மயங்காதீர் உலகீர்

முக்காலத் தினும்அழியா மூர்த்தம்அடைந் திடவே.!

விரிக்கில் பெருகும்.....

எல்லா ஆன்மாக்களும் இன்புற்று வாழ்க !

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்..
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு