புதன், 5 டிசம்பர், 2018

அமுதம் சுரக்கம் வழிகள் !

அமுதம் சுரக்கும் வழிகள் !

மனிதர்களாக பிறப்பு எடுத்தவர்கள் அடையக்கூடிய லாபம் .
பெறக்கூடிய லாபம் ஆன்மலாபம் என்பதாகும்..

நாம் ஜீவ லாபமாகிய மண்ணாசை.
பெண்ணாசை.
பொன்னாசை
என்னும் சிற்றின்ப லாபம் மட்டுமே பெற்று.அற்ப மகிழ்ச்சி அடைந்து வாழ்ந்து இறுதியில் மரணம் அடைந்து. மீண்டும் பிறப்பு எடுத்துக் கொண்டே உள்ளோம்.

இது மனித வாழ்க்கை அல்ல ! மனிதர்களுக்கு அரிய பெரிய அறிவையும். அருளையைம் பெற்றுக் கொள்வதற்காகவே இறைவனால் கொடுக்கப்பட்ட உயர்ந்த பிறவி மனிதப்பிறவியாகும்.

ஆன்ம லாபம் !

மனித தேகத்தில் ஆன்மா இயங்கும் இடத்தை தெரிந்து கொண்டு. இடைவிடாது தொடர்பு கொள்ள வேண்டும்..

தொடர்பு கொள்ளும் வழியைக் கண்டுபிடித்து.அதற்கு சுத்த சன்மார்க்கம் என்று பெயர் வைத்துள்ளார் வள்ளலார்...

இடைவிடாது தொடர்பு கொள்வதற்கு எவை எவை தடையாக இருக்கின்றதோ..அவற்றை எல்லாம்.பற்றுஅற அப்புறப்படுத்த வேண்டும்.

அந்த தடைகள் என்ன என்பதை வள்ளலார் தெரியப்படுத்துகின்றார்

வள்ளலார் சொல்லுவதை கவனமாக படித்து பின்பற்ற வேண்டும் !

எல்லாம் உடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே !

இது தொடங்கி எக்காலத்தும் சுத்தசன்மார்க்கத்தின் முக்கியத் தடைகளாகிய சமயங்கள்.மதங்கள்.
மார்க்கங்கள்.எனபவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும்.

வருணம்.ஆசிரமும் முதலிய உலக ஆசார சங்கற்ப விகற்பங்களும் எங்கள் மனத்திற் பற்றாதவண்ணம் *அருள்* செய்தல் வேண்டும் .

சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை.எங்களுக்குள்.
எக்காலத்தும்.
எவ்விடத்தும்.
எவ்விடத்தும்.
எவ்வளவும்.விலகாமல் *நிறைந்து* விளங்க செய்வித்து அருளல் வேண்டும்.

என்று வள்ளலார் தெளிவாக சொல்லி உள்ளார்...அதன்படி ஒழுக்க நெறியில் நின்று பின்பற்றினால்.
ஆன்மாவில் இருந்து அருள் சுரக்கும் இரகசியத்தை.(உளவை) அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வெளிப்படுத்துவார்....

உளவினி லறிந்தா லொழிய மற்றளக்கின்
அளவினி லளவா வருட்பெருஞ் ஜோதி!.

உள்ளானைக் கதவுதிறந் துள்ளே காண

உளவெனக்கே உரைத்தானை உணரார் பாட்டைக்

கொள்ளானை என்பாட்டைக் குறிக்கொண் டானைக்

கொல்லாமை விரதமெனக் கொண்டார் தள்ளா

தள்ளானைக் கொலைபுலையைத் தள்ளா தாரைத்

தழுவானை யான்புரிந்த தவறு நோக்கி

எள்ளானை இடர்தவிர்த் திங்கென்னை ஆண்ட

எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.!

மேலே கண்ட பாடல் வரிகளில் உண்மை வெளிப்பட சொல்லியுள்ளார்...

அவற்றை எல்லாம் உணர்ந்து வாழ்க்கையில் பின்பற்றினால்.ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் அறியாமை. அஞ்ஞானம் என்னும் திரைகளாகிய கதவுகள் ஒவ்வொன்றாக திறந்து ஆன்மாவின் வழியாக அருள் சுரக்கும்..

அருள் அமுதம் ஐந்து சுவைகளாக இருக்கின்றது! 

ஆண்டவரிருக்கும் பொது ஸ்தானங்கள் 5. இவைகள் பஞ்ச சபைகளாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.

பிருதிவி - பொற்சபை
அப்பு - ரஜிதசபை
தேயு - தெய்வசபை
வாயு - நிருத்தசபை
ஆகாயம் - சிற்சபை

பஞ்ச அமுத ஸ்தானங்கள்
சுத்த அமுத ஸ்தானங்கள் 5.

1-வது அமுதம் நாக்கினடியில் இனிப்புள்ள ஊற்றுஜலம் போலிருக்கும்.

2-வது அமுதம் உள் நாக்குக்குமேல் இளகின இனிப்புள்ள சர்க்கரைப் பாகு போலிருக்கும்.

3-வது மூக்கு முனையில் காய்ச்சின சர்ப்பரைப் பாகு போலிருக்கும்.

4-வது நெற்றி நடுவில் முதிர்ந்த மணிக் கட்டியாகவிருக்கும்.

5-வது மகா இனிப்புள்ள மணிக் கட்டியாகவிருக்கும்; அதிக குளிர்ச்சியாகவுமிருக்கும்.

இந்த 5-வது அமுதத்தை யுண்டவர்கள் என்றும் அழியாத தேக சித்தியைப் பெற்றவர்கள்.

பஞ்ச அமுத ஸ்தானங்கள்
யோகானுக்கிரக பஞ்ச அமுத ஸ்தானங்கள் 5.

1-வது அமுதம் நாக்கு நுனியில். பக்குவஞானத்தால்.
சிருஷ்டி வல்லபப் பிரஞ்ஞையால்.

2-வது புவனாமுதம் - நாக்குமத்தியில், பக்குவ கிரியையால், ஸ்திதி
பிரஞ்ஞை யுணர்ச்சியால்.

3-வது மண்டலாமிருதம் - நாக்கினடியில், பக்குவஇச்சை, சம்சார உணர்ச்சியால்.

4-வது ரகசியாமிருதம் - உள் நாக்கடியில், பக்குவதிரோபவம்.

5-வது மௌனாமிருதம் - உண்ணாக்கு மேல், பக்குவ அனுக்கிரகம்.
அனுக்கிரகம், சுபாவத்தினது அனுபவம், துரியநிலை.!

மேலே உள்ளபடி ஐந்து வகையான அமுதம் ஆன்மாவில் இருந்து  சுரக்கும்..

இதில் ஐந்து அமுத சுவைகள் உள்ளன.

ஐந்தாவது அமுதம் கிடைப்பது ரொம்ப சிரமம்..அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணை யால் மட்டுமே கிடைக்கும்...

ஐந்து வகையான அமுதமும் சிந்தாமல்.சிதறாமல் பெற்றவர் வள்ளல்பெருமான் ஒருவரே !

சித்தர்கள்.யோகிகள்.ஞானிகள் பெற முடியாத அமுதத்தை.
மனிதர்களாகிய நாம் ஜீவகாருண்யத்தாலும். சத்விசாரத்தாலும். எளிதாகப் பெறுவதற்குண்டான வழியைக் காட்டி உள்ளார் வள்ளலார்..

ஐந்து அமுதம் சொல்லியதின் உளவை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்..தொடரும்...

முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம்..

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு