சனி, 15 டிசம்பர், 2018

படம் வேண்டாம் என்பவருக்கே படம் வைத்துள்ளார்கள் !

படம் வேண்டாம் என்பவருக்கே படம் வைத்துள்ளார்கள் !

வள்ளலாரின் செயற்கை யான போட்டோ படம் சன்மார்க்க சங்கங்களிலும்.வடலூர் வள்ளலார் தெய்வ நிலையங்களிலும் வைத்து வழிபாடு செய்து வருகிறார்கள்.

வடலூர் சத்திய ஞானசபையில்.மேட்டுக்குப்பம் சித்திவளாகத்தில் மட்டுமே ஒளிவழிபாடு நடந்து கொண்டு வருகிறது.

வள்ளலார் பிறந்த மருதூர்.தண்ணீர் விளக்கு எரித்த கருங்குழி.வடலூர் தருமச்சாலை போன்ற இடங்களில் வள்ளலாரின் கற்பனை உருவமான படங்களை வைத்து வழிபாடு செய்து வருகிறார்கள்..

மேலும் வள்ளலார் படத்திற்கு சமயச்சின்னமான விபூதியை அணிவித்த படங்களை வைத்துள்ளார்கள்.

*முதலில் வடலூர் வள்ளலார் தெய்வநிலையங்களை தூய்மைப் படுத்த வேண்டும்...*

சமயக் கோயில்களைப்போல்..விபூதி பிரசாதம் வழங்கி வருகிறார்கள்.

இந்த பழக்கம் வழக்கம். விளக்கத்திற்கு எப்படி வந்த்து...

எல்லாமே வள்ளலார் உடன் இருந்த சமய மதவாதிகளின் சூழ்ச்சியா ? அல்லது சமய மத வாதிகளின்  அறியாமையா ? என்பது தெரியவில்லை...

*வள்ளலார் உடன் இருந்தவர்கள் எல்லோருமே சைவ சமய மத வாதிகள்*.

*வைணவர்கள் வள்ளலார் உடன் இருந்து இருந்தால் வள்ளலார் படத்திற்கு நாமம் போட்டு இருப்பார்கள்.*

முதன்முதலில் வள்ளலார் படம் வெளி வந்தது.!

ஆறு திருமுறைகளும்  சேர்ந்த அருட்பாவின் முதற் பதிப்பு 1892 ஆண்டு வெளிவந்துள்ளது.
இதில்தான் முதன்முதலாக இராமலிங்கம் பிள்ளையவர்கள் சரித்திரச் சுருக்கம்  என்று சேர்க்கப்பட்டுள்ளது..

*வள்ளலார் சிதம்பரம் இராமலிங்கம் என்றே கை எழுத்து இடுவார்*...

இவர்கள் இராமலிங்க பிள்ளையவர்கள் சரித்திரச் சுருக்கம் என்று வள்ளலாருக்குத் சாதிப் பெயரை சூட்டி உள்ளார்கள்...

வள்ளல்பெருமானின் திருவுருவப்படமும் இதில்தான் முதன் முதலில் விபூதியுடன் வெளியிட்டுள்ளார்கள்..அவை அப்படியே மக்கள் மத்தியில் பரவிவிட்டன..

வள்ளலார் எழுதிய திருஅருட்பாவை சிறந்த முறையில் ஆர்வத்தோடும்.பக்தியோடும் வெளியிட்டுள்ளார்கள்..அவர்களுக்கு நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்...

*இருந்தாலும் அவர்களுக்கு வள்ளலார் சொல்லிய உண்மைக் கடவுள் ஒருவரே ! என்றும்.அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பதும் விளங்கிக் கொள்ள முடியவில்லை போலும்.*

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பது சாதி.சமயம்.மதம் சார்ந்த கடவுள்களில் ஒருவர் அல்ல என்பதை ..அப்போது வள்ளலார் உடன் இருந்தவர்களுக்கு புரியவில்லை....

*சைவ சமயமும் சுத்த சன்மார்க்கமும் ஒன்று என்றே நினைத்து இருப்பார்கள் போலும்*.

இப்போது வளர்ந்து வருகின்ற இளையசமுதாயம் வள்ளலார் கொள்கைகளை ஆழமாக சிந்தித்து .சாதி.சமய.
மதம் அற்ற சுத்த சன்மார்க்கத்தை பின்பற்றி வருகிறார்கள்.பாராட்டிற்குரியதாகும்.

வள்ளலார் என்னை வணங்க வேண்டாம் வழிபட வேண்டாம் என்றார்!

வள்ளலார் உருவத்தை பலமுறை போட்டோ எடுத்தும் அவர்படம் போட்டோவில் பதிவாகவில்லை.படம் போட்டோவில் விழவில்லை.ஏன் ? என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்...

போட்டோவில் அவர் உருவம்  விழவில்லை.அவர் உடம்பு ஒளி உடம்பாக மாற்றிக் கொண்டார் ஒளி ஒளியில் பதியாது.்்நிழல் இல்லாத உடம்பு எனவே நிழல் படத்தில் விழவில்லை....

அவர் போட்டோவே  இல்லாதபோது எப்படி போட்டோ படம் வெளியில் வந்தது..

வள்ளலாரின் அணுக்கத் தொண்டர்களில் ஒருவரான வேலாயுதனார் அவர்கள் .. வள்ளலார் உருவ தோற்றத்தை சொல்லிய வண்ணம் யூகமாக படம் வரைந்து வள்ளலார் படம் மக்கள் மத்தியில் பரவத்தொடங்கியது..

தன்னுடைய படம் இருந்தால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை விட்டுவிட்டு..சமய மதவாதிகள் போல் என்னை வணங்க ஆரம்பித்து விடுவார்கள் என்பது வள்ளலாருக்குத் தெரியும்....

அவர் உருவ பொம்மையை மண்ணால் செய்து கொண்டு வந்து வள்ளலார் இடம் காண்பித்தபோது..
பொன்னான உடம்பை மண்ணாக்கி விட்டீர்களே என்று கோபத்துடன் கீழே போட்டு விட்டார்..அந்த பொம்மை உடைந்து சிதறிவிட்டது...

வள்ளலாருக்குத் தெரியும்...இந்த மக்கள் தம்மை கடவுளாக்கி வழிபடுவார்கள் என்று.

பேருபதேசத்தில் வள்ளலார் பதிவு செய்துள்ளது கவனிக்கவும்...!

சமயம் தவிர மதங்களில் உள்ள வேதாந்தி.சித்தாந்தி என்று பெயரிட்டுக் கொண்ட பெரியவர்களும்.உண்மை அறியாது .சமயவாதிகளைப் போலவே ஒன்று கிடக்க ஒன்றை உளறுகிறார்கள் என்கிறார்..

மேலும்.ஆதலால் நீங்கள் அவை ஒன்றையும் நம்ப வேண்டாம்.
எவைகளிலும் தெய்வத்தைப் புறமுகமாகப் புலப்பட சொல்லவில்லை.

**தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாது இவ்வுலகத்தார் என்னைத் தெய்வம் என சுற்றுகிறார்கள்**

ஐயோ நம் சகோதரர்கள் தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாத தினாலே அல்லவா நம்மைச் சுற்றுகிறார்கள்.என்று நான் உள்ளும் புறமும் பரிதாப்ப் பட்டுக் கொண்டே இருந்தேன் இருக்கின்றேன் இருப்பேன்..என்று தெளிவாக வள்ளலார். சொல்லி உள்ளார்

மேலும் ..தெய்வத்தை ஏன் தெரிந்து கொள்ளவில்லை என்றால்.ஒரு பதார்த்தத்தை அனுபவித்தால் அல்லது அந்தப் பதார்த்ததினுடைய ருசி தெரியாது...

ருசி தெரியாத பதார்த்தத்தின் மேல் இச்சை போகாது..அதுபோல் .தெய்வத்தை உள்ளபடி அனுபவித்தால் அல்லது.தெய்வத்தின் இடத்தில் பிரியம் வராது.

ஆதலால் தெய்வத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற முக்கிய லட்சயத்தில் இருந்து கொண்டு விசாரஞ் செய்து கொண்டு இருங்கள் என்று எல்லோருக்கும் புரியும் வண்ணம் சொல்லி எழுதி வைத்துள்ளார்....

இவ்வளவு சொல்லியும் எழுதிவைத்தும்  வள்ளலார் படத்தை வணங்குவதும் வழிபடுவதும். வள்ளலார் சொல்லிய கருத்திற்கு  ஏற்புடையதாகுமா ? வள்ளலார் வார்த்தைக்கு.கொள்கைக்கு  மீறிய செயல் அல்லவா ?

இவற்றை வெளிப்படையாக ஈரோடு கதிர்வேல் சொன்னால் சில சன்மார்க்க அன்பர்களும் .சமயம் சார்ந்த சன்மார்க்க அன்பர்களும் கோபித்துக் கொள்கிறார்கள்.
வருத்தப்படுகிறார்கள் .

கதிர்வேல் பெரியார் கடவுள் மறுப்புக் குரூப்பை சேர்ந்தவன் என்று குற்றம் சுமத்துகிறார்கள்.

அவற்றைப்பற்றி நான் கவலைப்படுபவன் அல்ல.நான் வள்ளலார் கொள்கையில் என் வாழ்க்கை முழுதும் அர்பணித்துக் கொண்டவன் என்பது எல்லோருக்கும் தெரியும்..

வள்ளலார் கடவுள் மறுப்பு கொள்கை உடையவரா?

உண்மைக் கடவுளை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்.
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையே உலகிற்கு வரவைத்தவர்..
வரவைத்த இடம் தான்

****மேட்டுக்குப்பத்தில் உள்ள சித்திவளாகம்***.என்பதை உலகம் அறிந்து கொள்ள வேண்டும்****

வள்ளலார் பாடல் !

மருணெறி சேர் மலவுடம்பை யழியாத விமலாவா வடிவாக்கி எல்லாம் செய் வல்ல சித்தாம் பொருளைத்

தருணமது தெரிந்து எனக்குத் தானே வந்து அளித்த தயாநிதியை எனையீன்ற தந்தையை என்தாயைப்

பொருணிறை சிற்றம்பலத்தை விளங்குகின்ற பதியைப் புகலரிதாஞ் சுத்த சிவ பூரண மெய்ச் சுத்தக்

கருணை அருட்பெருஞ்ஜோதிக் கடவுளை என்கண்ணாற் கண்டு கொண்டேன் கனிந்த கொண்டேன் கலந்து கொண்டேன் களித்து !

என்பன போன்ற பலநூறு பாடல்களில் தெரிவித்து உள்ளார்..

வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் கலந்து அருட்பெருஞ்ஜோதி யாகவே உள்ளார்.என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் அழுத்தமாக பதிவு
செய்கின்றார் !

அருட்ஜோதி ஆனேன் என்று அறையப்பா முரசு
அருளாட்சி பெற்றேன் என்று அறையப்பா முரசு
மருட்சார்பு தீரந்தேன் என்று அறையப்பா முரசு
மரணம் தவிர்ந்தேன் என்று அறையப்பா முரசு !

என்று வள்ளலார் முரசு கொட்டி மகிழ்ச்சி அடைகிறார்...

இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன ?

வள்ளலார் மனித உருவத்திலோ.போட்டோ உருவத்திலோ.சிலை வடிவத்திலோ இல்லை..அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் உருவத்தில் உள்ளார் அதாவது அருட்ஜோதி உருவத்தில் ஐந்தொழில்களை செய்ய வல்லவராய் உள்ளார்...செய்து கொண்டும் உள்ளார்.

வள்ளலார் உருவத்தை வைத்து வழிபடுவதால் எந்த பயனும் லாபமும் இல்லை...

அப்படி வணங்கினால் அவை  சன்மார்க்க வழிபாடும் அல்ல ஆகாது..சமய.மதம் சார்ந்த வழிபாடாக மாறிவிடும்.

அருட்பெருஞ்ஜோதி யை வணங்கினால் வழிப்பட்டாலே எல்லா நன்மையும் லாபமும் கிடைக்கும்.

வள்ளலார் உருவத்தில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இல்லை.அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் உருவத்தில் வள்ளலார் உள்ளார்...

எனவே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை மட்டுமே வழிபடுவதும் வணங்குவதும் சுத்த சன்மார்க்க கொள்கையாகும்  வழிபாடாகும்....

சாதாரண மக்கள் புரிந்து கொள்கிறார்கள்..சமயச்
சன்மார்க்கிகள் திருந்தி மற்றவர்களுக்கும் வழிகாட்ட வேண்டும்.என்று உங்கள் தாழ்வணங்கி கேட்டுக் கொள்கிறேன்..

வள்ளலார் பாடல் !

சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் உமது தாள் வணங்கிச் சாற்றுகிறேன் தயவினொடும் கேட்பீர்

என்மார்க்கத்தில் எனை உமக்குள் ஒருவன் எனக் கொள்வீர் எல்லாஞ் செய் வல்ல நமது இறைவனையே தொழுவீர்

புன்மார்க்கத்தவர் போலே வேறு சிலபுகன்றே புந்தி மயக்கடையாதீர் பூரண மெய்ச் சுகமாய்த்

தன்மார்க்கமாய் விளங்கச் சுத்த சிவம் ஒன்றே தன்னாணை என்னாணை சார்ந்து அறிமின் நீண்ட !

என்னும் பாடலின் வாயிலாக.. என்னைத் தொழாமல் .எல்லாம் செய்ய வல்ல நமது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையே தொழவேண்டும் என்று   சன்மார்க்கி களின் தாழ் வணங்கி ஆணையிட்டு சொல்லுகின்றார்.

 தெளிவாக பதிவு செய்துள்ளார்..நாம்தான் புரிந்து கொள்ளாமல் தவறான பாதையில் செல்லுகின்றோம்....

நாம் அனைவரும் மாறுவோம் மற்றவர்களையும் மாற்றுவோம்..

இப்போது நடந்து கொண்டு. இருப்பது சுத்த சன்மார்க்க காலம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்...

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !

முன்னாள் மார்க்கங்கள் யாவும்
முடிந்தன

மன்னுள சுத்த சன்மார்க்கம் சிறந்தது

பன்னுளந் தெளிந்த பதிநடம் ஓங்கின.

என்னுளத்து அருட்பெருஞ்ஜோதி யார் எய்தவே !

என்னும் பலபாடல்களில் தெளிவாக பதிவு செய்துள்ளார்.

நாம் பின்பற்ற வேண்டியது.ஜீவகாருண்ய ஒழுக்கம்(இதுதான் வழிபாடு )
சத்விசாரம் என்பன போன்ற இரண்டு வழிகள் போதுமானதாகும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு