வெள்ளி, 14 டிசம்பர், 2018

புயல் வருவதற்கு காரணம் !

புயல் வரக் காரணம் !

கடலில் வாழும் கோடிக்கணக்கான உயிர்களை தினமும் கொன்று தின்பதுதான் என்பது மக்களுக்கும்.அறிவியலுக்கும். அரசாங்கத்திற்கும் தெரியவில்லை.

வள்ளலார் பாடல் !

மண்ணுல கதிலே உயிர்கள்தாம் வருந்தும் வருத்தத்தை ஒருசிறி தெனினும்

கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும் கணமும்நான் சகித்திடமாட்டேன்

எண்ணுறும் எனக்கே நின்னருள் வலத்தால் இசைத்தபோ திசைத்தபோ தெல்லாம்

நண்ணும்அவ் வருத்தம் தவிர்க்கும்நல் வரந்தான் நல்குதல் எனக்கிச்சை எந்தாய்.!

வள்ளலார் பாடல் !

துண்ணெனக் கொடியோர் பிறவுயிர் கொல்லத் தொடங்கிய போதெலாம் பயந்தேன்

கண்ணினால் ஐயோ பிறஉயிர் பதைக்கக் கண்டகா லத்திலும் பதைத்தேன்

மண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணி வகைகளும் கண்டபோ தெல்லாம்

எண்ணிஎன் உள்ளம் நடுங்கிய நடுக்கம் எந்தைநின் திருவுளம் அறியும்.!

உயிர்கள் கொலை செய்யப்படுவதையும் அதனால் அவைகள் படும் துன்பத்தையும்  தினமும் கண்டு கண்டு வள்ளலார் உள்ளம் நடுங்குவதை வெளிப்படுத்துகின்றார்.

எல்லா உயிர்களும் தம் உயிர்போல் எண்ணி எந்த உயிர்களையும் கொலை செய்யாமலும் அதன் மாமிசத்தை உண்ணாமலும்.வாழ்கிறார்களோ

அப்போது தான் இயற்கை சீற்றங்கள் வரவே வராது.

வள்ளலார் பாடல் !

எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்

தம்உயிர்போல் எண்ணி உள்ளே

ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்

யாவர்அவர் உளந்தான் சுத்த

சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்

இடம்எனநான் தெரிந்தேன் அந்த

வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்

சிந்தைமிக விழைந்த தாலோ.!

உயிர்களைக் கொல்லாமல். எல்லா உயிர்களும் ஒன்றுதான் என்று நினைத்து உணர்கின்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கடவுளாக நினைத்து வணங்குகிறேன் என்கிறார் வள்ளலார்.

இறைவனால் படைத்த உயிர்களை அழிக்க எவருக்கும் உரிமை இல்லை.

உயிர்களை பரிக்கும் வரை.மனிதர்களுக்கு துன்பங்களும் சோதனைகளும்  வந்து கொண்டே தான் இருக்கும்..

வள்ளலார் பாடல் !

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என்றார் வள்ளலார்.

வள்ளலார் என்ற சாதாரண மனிதன் சொல்லியது அல்ல.அருளைப்பெற்று மரணத்தை வென்ற மகான் சொல்லியது.

உயிரெலாம் பொதுவி னுளம்பட நோக்குக
செயிரெலாம் விடுகெனச் செப்பிய சிவமே

 அருட்பெருஞ்ஜோதி அகவல்

உயிருள்யா மெம்மு ளுயிரிவை யுணர்ந்தே
உயிர்நலம் பரவுகென் றுரைத்தமெய்ச் சிவமே

 அருட்பெருஞ்ஜோதி அகவல்

உயிர்வகை பலவா யுடல்வகை பலவாய்
இயலுற விளக்கிடு மென்றனிச் சித்தே

 அருட்பெருஞ்ஜோதி அகவல்

உய்தர வமுத முதவியென் னுளத்தே
செய்தவம் பலித்த திருவளர் மதியே

 அருட்பெருஞ்ஜோதி அகவல்

உயங்கிய உள்ளமு முயிருந் தழைத்திட
வயங்கிய கருணை மழைபொழி மழையே !

 ஆறாம் திருமுறை / அருள்விளக்க மாலை !

உயிர்க்கொலையும் புலைப்பொசிப்பும் உடையவர்கள் எல்லாம்
உறவினத்தார் அல்லர்அவர் புறஇனத்தார் அவர்க்குப்

பயிர்ப்புறும்ஓர் பசிதவிர்த்தல் மாத்திரமே புரிக
பரிந்துமற்றைப் பண்புரையேல் நண்புதவேல் இங்கே

நயப்புறுசன் மார்க்கம்அவர் அடையளவும் இதுதான்
நம்ஆணை என்றெனக்கு நவின்றஅருள் இறையே

மயர்ப்பறுமெய்த்
 தவர்போற்றப் பொதுவில்நடம் புரியும்
மாநடத்தென் அரசேஎன் மாலைஅணிந் தருளே!

உயிர்க்கொலை செய்பவர்களும் புலால் உண்பவர்களும் இறைவனை நினைக்க தகுதி அற்றவர்கள் என்கிறார் வள்ளலார்.

இயற்கை பேரழிவு வருவதற்கு அடிப்படை  காரணமே உயிர்களை அழிப்பதுதான்..

உயிர்க்கொலை யை இறைவன் ஏற்றுக்கொள்வதில்லை என்பதை அனைத்து சமய மத வாதிகளும் தெரிந்து கொள்ள வேண்டும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு