வியாழன், 18 அக்டோபர், 2018

ஆண்டவர் எதையும் கேட்கவில்லை !

ஆண்டவர் எதையும் கேட்கவில்லை !

அன்பும் அறிவும் தயவும் கருணையும். இறைவன் நமக்கு கொடுத்த அருட் கொடையாகும்..

இறைவன் மீது அன்பும் ஜீவர்கள் மீது இரக்கமும். பரோபகாரமும் செலுத்த வேண்டும் என்பதுதான்  உயர்ந்த அறிவுள்ள மனிதர்கள் தெரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

இதுவே அறிவுள்ள மனிதர்களின் செய்யும் செயல்பாடாகும்....

கடவுள் நம்மை எதுவும் கேட்கவில்லை.கடவுள் கை ஏந்தும் பிச்சைகாரன் அல்ல.
எல்லாம் வல்லவன்.
எல்லாம் உள்ளவன்.
எங்கும் நிறைந்தவன் கடவுள் என்பதை தெரிந்து .அறிந்து.
புரிந்து கொள்ள வேண்டும்.

கடவுள் பெயரைச் சொல்லி பல வேடங்கள் போட்டுக் கொண்டு கடவுள் இடமே ஏமாற்றும் வேலையைச் செய்து கொண்டு உள்ளவர்கள்.அதுவே அறிவு இல்லாத  அறியாமையின் செயல்களாகும்.

கடவுள் காரியப்படுவது !

கடவுள் ஆன்ம வியாபகமாகிய மனித தேகத்தில்...

கடவுள் இயற்கை உண்மையான
ஆன்ம ஒளி வடிவமாகியும்..
இயற்கை விளக்கமான அருள் வடிவமாகியும் .
இயற்கை இன்பத்தை தரும் வல்லபம் உடையவராகவும். மனித தேகத்தில் காரிய காரணமாக விளங்கிக் கொண்டு உள்ளவர் தான் கடவுள்.

மேற்கண்ட உண்மைத் தெரியாமல் .தெரிந்து கொள்ளாமல்..

உண்மைக்கு புறம்பாக .மண்.கல்.
தங்கம்.வெள்ளி.
பஞ்சலோகம் முதலிய பொருள்களைக் கொண்டு தத்துவ உருவங்களை பொம்மைகளாக்கி. வான் உயர ஆலயங்களைக் கட்டி...அதன் உள்ளே அந்த சிலைகளை பிரதிஷ்டை செய்து.அந்த பொம்மைக்குள்ளே
கடவுள் காரியப்படுவதாக சொல்லுவது மந்த ஞாயம் என்கிறார் வள்ளலார்.
அதிலே கடவுள்  இருப்பதாக சொல்லுவது அறியாமையின் உச்சகட்டம் என்கிறார் வள்ளலார்...

அதைவிட கேவலமான அறியாமையின் செயல்.

அந்த உருவ பொம்மைகளுக்கு மாலை மரியாதை சேலை.வேட்டி. துண்டு துப்பட்டாக்கள் அணிந்தும்...
தங்கம். வெள்ளி. வைரம் போன்ற விலை உயர்ந்த ஆபரணங்கள். வைர கிரீடம் .போன்றவற்றை அணிந்து அலங்காரம் செய்து...

மேலும் அபிஷேக ஆராதனைகள்.பால்.
பழம்.தேங்காய்.வெத்தலைப்பாக்கு.சூடம்.
விபூதி.குங்குமம்.மற்றும் உணவுப் பொருள்களை கொண்டு
படையல் வைத்து வணங்கி வழிபாடு செய்கிறார்கள்..

மேலும் மனிதர்களுக்கு செய்வது போல் . ஆண் பெண் பொம்மை உருவங்களுக்கு திருமணம் செய்து வைத்து முதல் இரவிற்கும் அனுப்பி வைக்கும் காரியங்களையும் செய்து வருகிறார்கள்...

மேற்படி பொருள்களை கடவுள் விரும்புகிறாரா ?  நீங்கள் படைக்கும் படையலை கடவுள் உண்கிறாரா ? கடவுள் திருமணம் செய்து வைக்க சொன்னாரா ? என்று கேட்பவர்களுக்கு பதில் சொல்லத் தெரியாமல் விழிக்கிறார்கள்...

சிலைகளில் கடவுள் தோன்றி அனுக்கிரகிப்பதாகச் சொல்வது மந்த நியாயம் மாயா ஜாலம் என்கிறார் வள்ளலார்.

மனிதர்களும் அந்த அந்த உருவ வழிபாட்டிற்குத் தகுந்தாற்போல்..பச்சை.கருப்பு.மஞ்சள். சிகப்பு.காவி.வெள்ளைபோன்ற ஆடைகள்.
அணிகலன்கள்.மாலைகள்.தாடிவிட்டுக் கொள்வது.மொட்டை அடித்துக் கொள்ளுதல்.அலகு குத்துதல்.அக்கினி மிதித்தல்.
தேர் இழுத்தல்.காவடி எடுத்தல்.விபூதி அணிதல்.நாமம் போடுதல்.குங்குமம் அணிதல் போன்ற பல்வேறு வேடங்கள் போட்டுக் கொள்கிறார்கள்..

இதெல்லாம் படித்தவர்கள்.படிக்காதவர்கள்.அறிவியல்.விஞ்ஞானம்.அணு ஆராய்ச்சியாளர்கள்.
நாட்டை ஆட்சி செய்பவர்கள்.
அதிகாரிகள்.
நீதிமான்கள் போன்ற அனைவரும் கண்மூடித் தனமாக கடைபிடித்து வருகிறார்கள்.

அதிகம் படித்து பட்டம் பெற்ற உயர்ந்த அறிவாளிகளும் கடவுள் கொள்கையில் அறியாமையில் உள்ளார்கள். 

பெரிய அறியாமையில் மனிதர்கள் உள்ளார்கள் என்பதை வள்ளலார் படம் பிடித்து காட்டுகின்றார்.

கடவுள் ஒருவரே !

உருவ ராகியும் அருவின ராகியும் உருஅரு வினராயும்

ஒருவ ரேஉளார் கடவுள்கண் டறிமினோ உலகுளீர் உணர்வின்றி

இருவ ராம்என்றும் மூவரே யாம்என்றும் இயலும்ஐ வர்கள்என்றும்

எருவ ராய்உரைத் துழல்வதென் உடற்குயிர் இரண்டுமூன் றெனலாமே.!

என்ற பாடலில் தெளிவாக விளக்குகின்றார் வள்ளலார்..

கடவுள் உருவமானாலும் சரி.
உருவம் இல்லாமல் இருந்தாலும் சரி..
உருவம் அருவமானாலும் சரி ஒரே கடவுள் தான் இருக்க முடியும்.
ஒரே கடவுள் தான் இருக்கின்றார்.
என்பதை உதாரணத்துடன் விளங்க வைக்கின்றார்..

ஒரு உடலுக்கு இரண்டு.மூன்று.ஐந்து உயிர் இருக்கின்றது என்றால் நம்ப முடியுமா ?
நம்பவே முடியாது .
அது உண்மையும் அல்ல..

அதேபோல்  இந்த உலகத்தை தோற்றுவித்தலும்.
இயக்குவித்தலும்.
அடக்குவித்தலும்.
மயக்குவித்தலும்.
தெளிவித்தலும்

ஆகிய தொழில்களை எளிதில் கொடுத்தற்கு உரிய அருள் பூரண சுதந்தரம் உடையவர் ஒருவரே.அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பதை உலகுக்கு அறிமுகப் படுத்தியவர் தான் வள்ளலார்.

கலை உரைத்த கற்பனை கதைகளின் கதாபாத்திரங்களை விட்டு வெளியே வாருங்கள் ...என்கிறார் வள்ளலார்...

பாடல் !

கலையுரைத்த கற்பனையே நிலைஎனக்கொண் டாடும்

கண்மூடி வழக்கம்எலாம் மண்மூடிப் போக

மலைவறுசன் மார்க்கம்ஒன்றே நிலைபெறமெய் உலகம்

வாழ்ந்தோங்கக் கருதியருள் வழங்கினைஎன் தனக்கே

உலைவறும்இப் பொழுதேநல் தருணம்என நீயே

உணர்த்தினைவந் தணைந்தருள்வாய் உண்மைஉரைத் தவனே

சிலைநிகர்வன் மனங்கரைத்துத் திருவமுதம் அளித்தோய்

சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.!

என்னும் பாடல் வாயிலாக உண்மையை உரக்க உரைத்து மக்களின் நல்வாழ்விற்காக அழைக்கின்றார்.வள்ளலார்....இதுவள்ளலார் வார்த்தை அன்று சத்தியவான் வார்த்தை ...்

  பாடல் !

சத்தியவான் வார்த்தைஇது தான்உரைத்தேன் கண்டாய்

சந்தேகம் இலைஇதனில் சந்தோடம் உறுவாய்

இத்தினமே அருட்சோதி எய்துகின்ற தினமாம்

இனிவரும்அத் தினங்கள்எலாம் இன்பம்உறு தினங்கள்

சுத்தசிவ சன்மார்க்கம் துலங்கும்எலா உலகும்

தூய்மைஉறும் நீஉரைத்த சொல்அனைத்தும் பலிக்கும்

செத்தவர்கள் எழுந்துலகில் திரிந்துமகிழ்ந் திருப்பார்

திருவருட்செங் கோல்எங்கும் செல்லுகின்ற தாமே.!

இனி வருங்காலம் இயற்கை உண்மை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் நேரடி தொடர்புடைய காலம் .

சாதி.சமயம்.மதங்கள் அற்ற"" சமரச சுத்த சன்மார்க்க சத்திய காலம்"" மக்கள் மகிழ்ச்சியுடன் வாழும் காலம் உதயமாகி விட்டது..

சிந்தியுங்கள் செயல் படுங்கள்.உண்மை உணருங்கள்

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு