திங்கள், 3 செப்டம்பர், 2018

எல்லோருக்கும் எல்லாம் தெரியும் ? ஒன்று மட்டும் தெரியாது !



உலகில் உள்ள ஆண் பெண் இருபாலருக்கும்.
உலகில் உள்ள எல்லா விபரங்களும்.உணர்ச்சிகளும் தெளிவாக  தெரிந்து கொண்டு இருக்கிறார்கள்.

கடவுள் கொள்கையில்.படித்தவர்கள்.படிக்காதவர்வகள் அனைவருமே தவறான வழிகளையே பின் பற்றுகிறார்கள்.

இன்று கிருஷ்ணர் ஜெயந்தி என்று கிருஷ்ணர் சிலையை வைத்து அலங்காரம் செய்து ஆடல் பாடல்கள் போன்ற  கொண்டாட்டத்துடன்.மக்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்..

இதனால் மனம் மகிழ்ச்சி அடையும்.ஆன்மா மகிழ்ச்சி அடைவதில்லை என்பது மக்களுக்கு புரிய வாய்ப்பே இல்லாமல் போயிற்று..

தன்னை உணரந்து கொள்ளவும்.தன்னை இயக்கும் உள் ஒளியாகிய ஆனமாவைத் தெரிந்து கொள்ளவும் அறியாத மூடர்களாய் அறியாமையில் வாழ்ந்து கொண்டு உள்ளார்கள்.

அந்த அளவிற்கு மக்களை மாற்றி உள்ளது தான் சமய மத மூட நம்பிக்கை கொள்கைகளாகும்.

இதைத்தான் வள்ளலார் கடுமையாக சாடுகின்றார்...

வள்ளலார் பாடல் !

கலையுரைத்த கற்பனையே நிலைஎனக்கொண் டாடும்கண்மூடி வழக்கம்எலாம் மண்மூடிப் போக

மலைவறுசன் மார்க்கம்ஒன்றே நிலைபெறமெய் உலகம்வாழ்ந்தோங்கக் கருதியருள் வழங்கினைஎன் தனக்கே

உலைவறும்இப் பொழுதேநல் தருணம்என நீயேஉணர்த்தினைவந் தணைந்தருள்வாய் உண்மைஉரைத் தவனே

சிலைநிகர்வன் மனங்கரைத்துத் திருவமுதம் அளித்தோய்சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.!

என்னும் பாடல் வாயிலாக தெரியப்படுத்தி உள்ளார்.

தன்னை அறியாமல்.தன் தலைவனை அறியாமல் வாழ்வதால் தான் மரணம் என்னும் பெரும் பிணியால் மாண்டு போகின்றார்கள்.

இதைத்தான் வள்ளலார்..தன்னை அறிந்தால் தலைவனை அறியலாம் என்கிறார்.

தன்னை அறிந்து தலைவனை அறிந்தால் மட்டுமே மரணத்தை வெல்ல முடியும்.

தலைவன் என்பது நம்மைப் படைத்த இறைவன் .அவர்தான் நம்மை காப்பாற்றும் சக்தி படைத்தவர்.அவரைத் தொடர்பு கொள்ளாமல் வாழ்வதால் எந்த பயனும் இல்லை. என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். தெரிந்து கொண்டு இறைவனிடம் தொடர்பு கொள்ள வேண்டும்..

வள்ளலார் பாடல் !

அச்சையும் உடம்பையும் அறிவகை அறியீர்அம்மையும் அப்பனும் ஆர்எனத் தெரியீர்

பச்சையும் செம்மையும் கருமையும் கூடிப்பலித்தநும் வாழ்க்கையில் பண்பொன்றும் இல்லீர்

பிச்சையிட் டுண்ணவும் பின்படு கின்றீர்பின்படு தீமையின் முன்படு கின்றீர்

இச்சையில் கண்மூடி எச்சகம் கண்டீர்எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.

அம்மை அப்பன் யார் என்று தெரியாமல் .அற்பத்தனமான இச்சைகளிலே பற்று வைத்து.எச்சுகம் கண்டீர்... பைத்தியக்கார்ர்கள் போல் திரிகின்றீர்கள் ..

இறைவனால் படைக்கப்பட்ட ஏழை எளிய மக்களைத் திரும்பிபார்த்து அவர்களுக்கு பிச்சைப் போட மனம் இல்லாமல்.
கல்லுக்கும் மண்ணுக்கும்.படத்திற்கும் படையல் வைத்து உண்ணுகின்றீர்கள்...

இது அறிவு பெற்ற மனிதர்களின் செயலா என கேட்கின்றார்..

உண்மையான இறைவனைத் தொடர்பு கொண்டால் மட்டுமே அருள் கிடைக்கும்.அருள் கிடைத்தால் மட்டுமே மரணத்தை வெல்ல முடியும்....

இறைவன் யார் ?

இப்பொழுது இறைவன் யார் ? என்பதுதான் கேள்வி...

உண்மையான இறைவன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்தான் ..

அவர்தான் நம் சிரநடுவில் உள் ஒளியாக ஆன்மாவாக இயங்கிக் கொண்டு உள்ளவர் .அவரைத்தான் நாம் ஒவ்வொரு வரும் தொடர்பு கொள்ள வேண்டும்...

வள்ளலார் பாடல் !

எப்பொருட்கும் எவ்வுயிர்க்கும் உள்ளகத்தும் புறத்தும்இயல்உண்மை அறிவின்ப வடிவாகி நடிக்கும்

மெய்ப்பொருளாம் சிவம்ஒன்றே என்றறிந்தேன் உனக்கும்விளம்புகின்றேன் மடவாய்நீ கிளம்புகின்றாய்மீட்டும்

இப்பொருள்அப் பொருள்என்றே இசைப்பதென்னே பொதுவில்இறைவர்செயும் நிரதிசய இன்பநடந் தனைநீ

பைப்பறவே காணுதியேல் அத்தருணத் தெல்லாம்பட்டநடுப் பகல்போல வெட்டவெளி யாமே.!

என்ற பாடலில் தெளிவாக விளக்கி உள்ளார்..இதுபோல் ஆயிரக்கணக்கான பாடல்களில் விளக்கம் தந்துள்ளார்.

படித்து பயன் பெறுவோம்.. அருளைப் பெறுவோம் மரணத்தை வெல்வோம்...

விரிக்கில் பெருகும்...

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு