ஞாயிறு, 15 அக்டோபர், 2017

பொய்யான மதங்கள்.சமயங்கள் !

பொய்யான மதங்கள்.சமயங்கள் !

உலகில் தோன்றிய தோற்றுவித்த அனைத்து சாதிகளும். மதங்களும் சமயங்களும்.அவற்றை சார்ந்த மார்க்கங்கள்.அனைத்துமே பொய் பொய்யே அவற்றில் புகுதாதீர்கள்.நம்பாதீர்கள்.பின் தொடராதீர்கள்.என்கிறார் வள்ளலார்.

அவைகள் யாவும் மனித இனத்தை அழிவு பாதையில் இட்டுச் சென்று கொண்டு உள்ளது.அவற்றில் உள்ள கடவுள் கொள்கைகள் அனைத்துமே உண்மைக்கு புறம்பானது பொய்யானது.தத்துவங்களையும்.செயற்கைப் பொருள்களையும் கடவுள்களாக கற்பித்து காட்டி உள்ளார்கள்.

கற்பித்த சமய.மத வாதிகள் அனைவரும் உண்மைக் கடவுளைக் காணவில்லை.காணும் அறிவும்.அருளும் பெறவில்லை.அதனால்தான் வள்ளலார்.

சாதியும் மதமும் சமயமும் பொய் என
ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி!....என்றும்.

சமயம் கடந்த தனிப்பொருள் வெளியாய் அமையும் திருச்சபை அருட்பெருஞ்ஜோதி!....என்றும்.

சாதி சமய மதங்களைக் கடந்த்து தான் உண்மையான கடவுளாகும்.அந்த உண்மைக் கடவுளைக் கண்டவர் தான் திரு அருட்பிரகாசவள்ளலார். ஏன் அவரால் மட்டுமே அருட்பெருஞ்ஜோதி யைக் காண முடிந்த்து என ஒரு கேள்வி எழலாம்.

மனிதன் உடம்பை பஞ்ச பூதங்களுக்கு இரையாக்காமல் அதாவது மரணம் அடையாமல்.ஊன உடம்பை ஒளிதேகமாக மாற்றினால் மட்டுமே உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி யைக் காண முடியும் என்ற உண்மையை அறிந்து.வாழ்ந்தார் வாழ்ந்து உலக மக்களுக்கு நேர்மையான ஒழுக்கமான வழியைக் காட்டினார்.

 மரணத்தை வென்று வாழ்ந்து காட்டுவதற்கு எவை தேவை ?
அருள் தேவை ! அருள் பெருவதற்கு எவை வேண்டும்.அன்பு வேண்டும் ! அன்பு பெருவதற்கு எவை வேண்டும். உயிர் இரக்கம் என்னும் தயவு வேண்டும்.தயவு பெருவதற்கு எவை வேண்டும்.ஜீவகாருண்யம் வேண்டும்...

ஜீவ காருண்யம் என்றால் என்ன ?. ஜீவ காருண்யம் என்பது ஒழுக்கம் என்பதாகும்.அவற்றில் புற ஒழுக்கம்.அக ஒழுக்கம் என இரண்டு பிரிவுகள் உள்ளன.இரண்டு ஒழுக்கமும் அவசியம்..ஜீவ காருண்யத்தில் இந்திரிய ஒழுக்கம்.கரண ஒழுக்கம்.ஜீவ ஒழுக்கம்.ஆன்ம ஒழுக்கம்.என்னும் நான்கு ஒழுக்கங்கள் உள்ளன.நான்கு ஒழுக்கத்தில் இரண்டு ஒழுக்கம் மிகவும்  முக்கியமானது.இந்திரிய ஒழுக்கம்.கரண ஒழுக்கம்.என்ற இரண்டு ஒழுக்கத்தைக் முழுமையாக கடைபிடித்தால்.ஜீவ ஒழுக்கம்.ஆன்ம ஒழுக்கத்தை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் போனஸாக வழங்கி விடுவார்.அதன் பின்புதான் ஆன்மாவில் இருந்து அருள் சுரக்கும்.பூரண அருள் பெற்றால் மட்டமே மரணத்தை வொல்ல முடியும்.மரணத்தை வென்றால் மட்டுமே இயற்கை உண்மைக் கடவுளைக் கண்டு.இயற்கை விளக்கம் என்னும் அருளைப்பெற்று.இயற்கை இன்பத்தை பெற முடியும்.இவற்றைப் பெற்றவர்தான் வள்ளலார்....அதனால் அவர் கடவுள் நிலை அறிந்து அம்மயமானார்.ஆகவே உண்மையை உலக மக்களுக்கு மறைக்காமல் சொல்லுகிறார்.

உலகில் உள்ள சாதி சமய மத அருளாளர்கள். மேலே கண்ட இயற்கை உண்மை.இயற்கை விளக்கம்.இயற்கை இன்பத்தை பெறாமல்.ஏகதேச செயற்கை உண்மை .செயற்கை விளக்கம்.செயற்கை இன்பத்தைப் பெற்றவர்கள்.அதனால் தான் செயற்கையான சாதி.சமய.மதங்களை தோற்றுவித்து மனித குலத்தை பிரித்து வைத்து விட்டார்கள்.அதனால் மனித குலம் ஒற்றுமை இல்லாமல்.வேற்றுமையால்.உண்மை அறியாமல் போட்டி போட்டு சண்டையிட்டு அழிந்து கொண்டு உள்ளார்கள்.

இதற்கு எல்லாம் யார் காரணம்.?

சாதி சமய மத அருளாளர்கள் தான் காரண காரியமாக இருந்துள்ளார்கள்.அவர்களின் தகுதி என்னவென்று வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்.....


மேலே கண்ட பாடலில் சாதி.சமய.மத வாதிகளின் ஏகதேச ஒழுக்கத்தால்.விரத்த்தால்.தவத்தால் .மத்த்தலைமை.பத்த்தலைமை வாய்த்தனர்.அவர்களின் செயல்  பதவியைப்பற்றியும். தெளிவாக விளக்கி உள்ளார். அவர்களுக்கும் மரணம் என்பது நிச்சயம்..மீண்டும் பிறப்பு எடுத்து மேலே செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர்.ஆதலால் அவர்கள் காட்டிய தெய்வங்களும்.கொள்கைகளும் உண்மைக்கு புறம்பானவைகளாகும்.

எனவே சாதி.சமய.மதங்களால் தோற்றுவித்த தெய்வங்களும்.ஒழுக்கங்களும்.பொய்யானது .அவற்றை பின் பற்ற வேண்டாம் என்கிறார் வள்ளலார்.அவைகள் யாவும் ஒதுக்கித் தள்ளும் குப்பைகள் போன்றதாகும்என்கிறார்.மக்களை பிரித்த அவைகளை அழித்து விடுங்கள் என்கிறார் வள்ளலார்.


எனவே வள்ளலார் காட்டிய உண்மையான கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்னவர் ஒருவரே ! என்ற உண்மையை அறிவால் அறிந்து.அவர் காட்டிய உண்மை நெறியை பின் பற்றினால் மட்டுமே மனிதர்கள் மனிதனாக வாழ்ந்து ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமையை அறிய முடியும்.

எனவே சாதி சமய மதங்களை விட்டு உண்மை நெறியான சுத்த சன்மார்க்க தனி நெறியைப் பின் பற்றினால் மட்டுமே அருளைப் பெற்று மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ முடியும்.நம் வாழ்க்கை ஒளி உடம்பை பெற்று ஒளிமயமாய் வாழ முடியும்.

உன் உடம்பு ஒளி உடம்பாக மாற்றம் அடைய ஒரே வழி அருள் பெறல் வேண்டும்.

சாதி சமய மதங்களை பற்று அற விட்டால்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் வாரி வாரி வழங்குவார்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.  

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு