திங்கள், 9 அக்டோபர், 2017

கடவுளுக்கும் நமக்கும் என்ன மறைப்பு ?

கடவுளுக்கும் நமக்கும் என்ன மறைப்பு ?

கடவுள் இயற்கை உண்மையான அருள் ஒளியாக உள்ளார்.கடவுளுக்கு உடம்பு கிடையாது .மறைப்பு கிடையாது  இயற்கை விளக்கமாக உள்ளார்.எல்லா உயிர்களுக்கும் அன்பும்.தயவும் கருணையும் வழங்கிக் கொண்டே உள்ளார்.

அடுத்து என்றும் அழியாத மாறாத மறையாத  இயற்கையான இன்பத்தை தந்து கொண்டே உள்ளார்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தன்மைப் பற்றி வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !

இயற்கையிலே பாசங்கள் ஒன்றும்இலார் குணங்கள்ஏதுமிலார் தத்துவங்கள் ஏதுமிலார் மற்றோர்செயற்கைஇல்லார் பிறப்பில்லார் இறப்பில்லார் யாதும்திரிபில்லார் களங்கம்இல்லார் தீமைஒன்றும் இல்லார்வியப்புறவேண் டுதல்இல்லார் வேண்டாமை இல்லார்மெய்யேமெய் ஆகிஎங்கும் விளங்கிஇன்ப மயமாய்உயத்தரும்ஓர் சுத்தசிவா னந்தசபை தனிலேஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.!

மேலே உள்ள பாடலில் கண்டபடி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் உள்ளார்.

மனித தேகம் எடுத்த நாமும் அதே நிலைக்கு மாற வேண்டும். அப்படி மாற்றம் அடைவதற்கு பெயர் தான் "" கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல்""என்று வள்ளலார் பெயர் வைத்து உள்ளார்.

அதே அருட்பெருஞ்ஜோதி ஜோதிதான் இயற்கை உண்மையாக நம் சிரநடு சிம்மாதனத்தில் ஞான சிங்காதன பீடத்தில் அமர்ந்து உயிரையும்.உடம்பையும் இயக்குவதற்கு ஒளி வழங்கிக் கொண்டு உள்ளார்.ஜீவனை இயக்கிக் கொண்டு இருப்பதால் அதற்கு ஜீவ ஆத்மா என்று பெயர்.

இறைவனை காண்பதற்கும் இறைஅருளைப் பெறுவதற்கும் தடையாக இருப்பது உடம்பும் உயிரும் தான் என்பதை வள்ளலார் தெளிவாக விளக்கி உள்ளார்.அதற்குப் பெயர்தான் ஆணவம்.மாயை.கன்ம்ம் என்பதாகும்.ஆன்மாவைப் பற்றிக் கொண்டு உள்ள ஆணவம் என்னும் மறைப்பு. உயிர்  என்னும் பிடிப்பு .உடம்பு என்னும் சுவர் இவைகள் மூன்றும்  ஆன்மாவை மறைத்துக் கொண்டு உள்ளன். இவற்றை அகற்ற வேண்டும். அகற்றினால் தான் கடவுள் நிலைக்கு நம்மை மாற்றிக் கொள்ள முடியும். இந்த கதவுகளை திறக்க மாற்ற எது தேவை என்றால் அருள் தேவை.அருள் பெறுவதற்கு. என்ன செய்ய வேண்டும் ? உயிர்கள் மேல் இரக்கம் தயவு என்னும் ஜீவ காருண்ய மயமாக மாற வேண்டும்.அடுத்து

கடவுள் ஒருவரே அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்ற உண்மை அறிந்து அவரிடம் இடைவிடாத அன்பு என்னும் காதல் கொள்ள வேண்டும்.அன்பும் காதலும் களங்கம் இல்லாமல் இணையவேண்டும்.அந்த பேரானந்த இனைப்பினால் சேர்க்கையால் அருள் சுரக்கும் அந்த அருள் உயிரையும் உடம்பையும் ஒளிமயமாக மாற்றும்.ஒளிமயமாக மாறினால் மட்டுமே நம் தந்தை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் யார் என்பதை அருட் கண்களால் காண முடியும்.அந்த உண்மையைக் கண்ட வள்ளலார் கண்டேன் களித்தேன் களிப்புற்றேன் கலந்து கொண்டேன் என்கிறார்.

மேலும் திருக்கதவை திறப்பதற்கு அவர் பதிவு செய்துள்ள பாடல் !

திருக்கதவம் திறவாயோ திரைகளெலாம் தவிர்த்தேதிருவருளாம் பெருஞ்சோதித் திருஉருக்காட் டாயோ

உருக்கிஅமு தூற்றெடுத்தே உடம்புயிரோ டுளமும்ஒளிமயமே ஆக்குறமெய் உணர்ச்சிஅரு ளாயோ

கருக்கருதாத் தனிவடிவோய் நின்னைஎன்னுட் கலந்தேகங்குல்பகல் இன்றிஎன்றும் களித்திடச்செய் யாயோ

செருக்கருதா தவர்க்கருளும் சித்திபுரத் தரசேசித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.!

மேலே கண்ட பாடலில் இரவு பகல் அறியாமல் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை உணர்ச்சி பொங்க கட்டி பிடித்து . இணைந்து அருளைப் பெற்றுள்ளார். இதுதான் சத்விசாரம் என்பதாகும்.

கணவன் மனைவி உறவு கொண்டால் உணர்ச்சி மோகத்தில் சுக்கிலம் வெளியே வருகிறது  அப்போது கிடைக்கும் இன்பம் அபாரமானது.அவை கொஞ்ச நேரம் சுவைக்கலாம்.பிறகு மறைந்து விடும்.இதற்கு சிற்றின்பம் என்று பெயர்.

அவ்வாறே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இடம் இணைந்து உணர்ச்சி பொங்க அனுபவித்து கிடைக்கும் இன்பம் அருட் சுகம் .அருள் இன்பம்.ஆன்ம சுகம் ஆன்ம இன்பம் என்று பெயர்...இதற்கு பேரின்பம் என்றும் பெயர்.அந்த இன்பம் அந்த சுகம் என்றும் அழியாது.அந்த ஆன்ம இன்ப லாபத்தைப் பெற்றால் தான் மரணத்தை வெல்ல முடியும்.பேரின்ப லாபம் என்னும் சுத்த பிரணவ ஞான தேகத்தைப் பெற்று.கடவுள் நிலை அறிந்து அம்மயமாகி வாழ்வதுதான் மனித தேகத்தை பெற்ற ஜீவர்களின் வாழ்க்கையாகும்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கும் நமக்கும் உள்ள இடைவெளியை நீக்கி அருள் இன்பம். அருட் சுகம். பெறும் வழியைக் காட்டுவதுதான் .வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்கம். சுத்த சன்மார்க்கம் கற்றுத்தரும் கல்வி தான்  சாகாக்கல்வி என்பதாகும்.

வள்ளலார் கற்றுத் தந்த சாகாக்கல்வியைக் கற்று அருட்சுகம் பெற்று அருள் இன்பம் அடைந்து கடவுள் நிலை அறிந்து அம்மயமாவோம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக.!

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு