செவ்வாய், 3 அக்டோபர், 2017

சுத்த சன்மார்க்கம் என்றால் என்ன

சுத்த சன்மார்க்கம் என்றால் என்ன ?

வள்ளலார் சுத்த சன்மார்க்கம் என்ற
 ஒரு புதிய பொது நெறியை உலகிற்கு வழங்கி உள்ளார்.

சுத்த சன்மார்க்கம் என்பது !

சாகாக் கல்வி கற்று தருவது.
கடவுள் ஒருவரே அவரே அருட்பெருஞ்ஜோதி என்ற உண்மை அறிதல்.
மலம் ஐந்தையும் விலக்குவது.
உடம்பை விட்டு உயிர் பிரியாமல்.உடம்பையும்.உயிரையும்.ஆன்மாவின் தன்மைக்கு அருள் ஒளியாக மாற்றம் செய்வது.
இந்த நான்கு வகையான மாற்றங்களை செயல் படுத்துவதுதான் சுத்த சன்மார்க்கம் என்பதாகும்.

வள்ளலார் பாடல்!

சாகாத கல்வியே கல்விஒன் றேசிவம்தான்என அறிந்தஅறிவேதகும்அறிவு மலம்ஐந்தும் வென்றவல் லபமேதனித்தபூ ரணவல்லபம்வேகாத காலாதி கண்டுகொண் டெப்பொருளும்விளையவிளை வித்ததொழிலேமெய்த்தொழில தாகும்இந் நான்கையும் ஒருங்கேவியந்தடைந் துலகம்எல்லாம்மாகாத லுறஎலாம் வல்லசித் தாகிநிறைவானவர மேஇன்பமாம்மன்னும்இது நீபெற்ற சுத்தசன் மார்க்கத்தின்மரபென் றுரைத்தகுருவேதேகாதி மூன்றும்நான் தருமுன்அருள் செய்தெனைத்தேற்றிஅருள் செய்தசிவமேசிற்சபையின் நடுநின்ற ஒன்றான கடவுளேதெய்வநட ராஜபதியே.!

என்ற பாடல் வாயிலாக தெரியப்படுத்துகின்றார்.

சாதி சமய மதங்களில் பற்று வைத்துக் அழிந்து கொண்டு உள்ளவர்களை அதில் இருந்து மீட்டு காப்பாற்றி கரை சேர்க்க வேண்டும் என்பது தான் சுத்த சன்மார்க்க கொள்கையாகும்.

வள்ளலார் காலத்திலே அவருடன் நெருங்கி பழகி இருந்தவர்கள் எல்லாம் நன்கு படித்தவர்கள் உலக கல்வி அறிவு உள்ளவர்கள். வள்ளலார் சொல்லிய சுத்த சன்மார்க்க கொள்கையை .வள்ளலார் சொல்லிய காட்டிய உண்மைக் கடவுள் அருட்பெருஞ்ஜோதி யை தெரிந்து கொள்வார்கள் இல்லை.எல்லாருமே சமய மத வெரியர்களாகவே இருந்து உள்ளார்கள்.அந்த கூட்டத்தில் வள்ளலாரின் முதல் மாணாக்கராக இருந்தவர் வேலாயுத முதலியார் என்பவர் அவரே சாதியை விட்டு விலகாமல் முதலியார் என்ற சாதிப்பெயரை தன் பெயருடன் சேர்த்தே கையொப்பம் இட்டு எழுதி வந்துள்ளார் .மற்றும் உடன் இருந்தவர்களும் சாதி சமய மத்த்தை விட்டு விலகாமல் அதே நிலையில் தான் இருந்து உள்ளார்கள்.

வள்ளலார் மிகவும் மன வேதனையுடன் சொல்லுகின்றார்.

இவ்வளவு காலம் என்னுடன் தொடர்ந்து இருந்தவர்களும்.நெருங்கிய பழக்கம் உள்ளவர்களும் நான் சொல்லும் சுத்த சன்மார்க்கம் என்னவென்று புரிந்து கொள்ளவில்லை.நான் சொல்லும் உண்மைக் கடவுள் அருட்பெருஞ்ஜோதி தான் என்பதையும் தெரிந்து புரிந்து கொள்ளவில்லை.என்று மிகவும் வேதனைப் படுகின்றார்.அந்த அளவிற்கு அறிவு தெளிவு விளக்கம் இல்லாமல் வள்ளலார் பின்னாடியே சுற்றிக் கொண்டு இருந்துள்ளனர்.

வள்ளலார் சொல்லுகின்றார். வேலாயுதமுதலியாரும் கைவிட்டுவிட்டார் என்று பதிவு செய்கின்றார்.

வள்ளலார் எழுதிய பாடல்களை  திருஅருட்பா என்று பெயர் இட்டு புத்தகமாக  வெளியிட்டவர்களே .வள்ளலார் சொல்லுயுள்ள எழுதிவைத்துள்ள பாடல்கள்.உரைநடைகள் ஜீவகாருண்ய  ஒழுக்க நெறிகள் சுத்த சன்மார்க்க உண்மை வழிபாட்டு முறைகள்.வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை.தெளிவாக எடுத்து சொல்லியும் .ஒருவர் கூட பின்பற்ற வில்லை.

அவைத் தொடர்ந்து இன்றுவரையில் எவரும் பின்பற்றவில்லை.கடைபிடிக்கவில்லை.

ஒவ்வொருவரும் தங்களின் சுய நலத்திற்காக வள்ளலாரை பிடித்து கொண்டு சன்மார்க்கம் என்ற பெயரில் .பட்டம்.பதவி.புகழ் .பணம்.பெயர் வரவேண்டும். என்ற போதையில் அலைந்து திரிந்து அழிந்து கொண்டு உள்ளார்கள்.

சாதி சமயம் மதம் போன்ற வற்றில் பற்று இல்லாத இளைய சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற பெருங் கருணையோடு. இப்பொழுது  அதி தீவிர முயற்சியில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பணி தொடங்கி உள்ளது.

போலி சன்மார்க்கிகளின் வேஷம் களைக்கப்பட போகின்றது. சுத்த சன்மார்க்கம் உலகம் எங்கும் பூத்துக் குலுங்கும் காலம் வந்து விட்டது.இனி சுத்த சன்மார்க்கத்திற்கு எவ்விதப்பட்ட தடைகளும் கிடையாது. இனி வருங்காலம் சுத்த சன்மார்க்க காலம் .

இளைஞர்களே விழித்து எழுங்கள்.வள்ளலார் சொல்லியுள்ள சுத்த சன்மார்க்க  கொள்கைகளை உலகம் எங்கும் கொண்டு செல்வோம் வாரீர் வாரீர் வாரீர் என் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அழைக்கிறார்...

புதிய உலகை படைப்போம்.மக்களை மரணத்தில் இருந்து மீட்டு எடுத்து மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்வதற்கு வழிக்காட்டுவோம்.

வள்ளலார் சொல்லியுள்ள மரணத்தை வெல்லும் புதிய சாகாக் கல்வியை உலக மக்கள் கற்று தேர்ச்சி பெற சாகாக்கலவி பாடசாலையை தொடங்கி நாம் தேர்ச்சி அடைந்து இறை அருளைப் பெற்று மரணத்தை வென்று மற்றவர்களுக்கும. வழிகாட்டுவோம். வீண்காலம் கழிக்காமல் உடனே சுத்த சன்மார்க்க நன் நெறியை பின்பற்றி மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழ்வோம்.

மற்றறிவோம் எனச்சிறிது தாழ்த்திருப்பீர் ஆனால்மரணமெனும் பெரும்பாவி வந்திடுமே அந்தோசற்றும்அதை நும்மாலே தடுக்கமுடி யாதேசமரசசன் மார்க்கசங்கத் தவர்கள்அல்லால் அதனைஎற்றிநின்று தடுக்கவல்லார் எவ்வுலகில் எவரும்இல்லைகண்டீர் சத்தியமீ தென்மொழிகொண் டுலகீர்பற்றியபற் றனைத்தினையும் பற்றறவிட் டருளம்பலப்பற்றே பற்றுமினோ எற்றும்இற வீரே.!

மேலே கண்ட பாடலில் கண்டபடி சுத்த சன்மார்க்க நெறியைப் பின்பற்றி ஜீவ காருண்யத்தை முழுமையாக கடைபிடித்து வாழ்க்கையை அமைத்துக் கொண்டு வாழ்வோம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.என்ன

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு