திங்கள், 12 ஜூன், 2017

ஆன்மீகம் என்றால் என்ன ?

ஆன்மீகம் என்றால் என்ன ?

இந்த உலகம் முழுவதும் ஆன்மீகம் என்ற பெயரில் தன்னையும் ஏமாற்றிக் கொண்டு மக்களையும் ஏமாற்றிக் கொண்டு உள்ளார்கள்

உலகில் தோன்றிய அனைத்து ஆன்மீக வாதிகளும் .கடவுளின் உண்மைத் தெரியாமல் பொய்யே பேசி உள்ளார்கள்

எல்லோருமே கடவுள் விஷயத்தில் குருடர்கள்.

உண்மையான கடவுள் யார் என்பதை அறிய முடியாமல் உளறிக் கொண்டு உள்ளார்கள்.

உலக வரலாற்றில் கடவுளைக் கண்ட ஒரே அருளாளர் வள்ளல் பெருமான் ஒருவரே.

அவர் கண்ட கடவுள் தான் தத்துவம் எல்லாம் கடந்த தனிப் பொருளாகும்.

அவை அருள் நிறைந்த ஒளிப் பொருளாகும்.அவற்றை எவராலும் காண முடியாது.

அதற்கு உண்மைப் பெயர் வைத்தவர் வள்ளலார் .அவைதான்

அருட்பெரும்ஜோதி
அருட்பெரும்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெரும்ஜோதி!

எனபதாகும்.

இந்த உண்மைக் கடவுளை தொடர்பு கொள்ளாமல. வேறு பொய்க் கடவுள்களையும்.பொய்யான தத்துவங்களான ஜடப்பொருள்கள் எவற்றைத் தொடர்பு கொண்டாலும் வாழ்க்கை சூன்யம் தான்.

இதை அறிந்து கொள்ளும் அறிவு உள்ளவன் எவனோ அவனே அறிவு உள்ள மனிதன் .

இந்த உண்மையை வள்ளலார் தெளிவாக பறைசாற்றி உள்ளார்.

கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதே

கற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணே

உண்டதெலாம் மலமேஉட் கொண்டதெலாம் குறையேஉலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே

விண்டதனால் என்இனிநீர் சமரசசன் மார்க்கமெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள்நன் குணர்ந்தே

எண்டகுசிற் றம்பலத்தே எந்தைஅருள் அடைமின்இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே.!

என்று தெளிவாக சொல்லி உள்ளார்.

ஏன் அப்படி சொல்லி உள்ளார் என்றால்

உண்மையான இறைவனைக் கண்டார் களித்தார்.அதிலே கலந்து கொண்டார்

மனித வடிவிலே சொல்லவில்லை .சொல்லவும் முடியாது.

இறைவனுடன் கலந்து அருள் வடிவிலே .பர நாத ஒலியிலே ஒளியிலே பேசுகின்றார் அவர் கண்ட உண்மையை எழுத்து வடிவிலே எழுதி வைத்து உள்ளார்.

கண்டேன் களித்தேன் கருணைத் திருஅமுதம்உண்டேன் உயர்நிலைமேல் ஓங்குகின்றேன் - கொண்டேன்அழியாத் திருஉருவம் அச்சோ
எஞ் ஞான்றும்அழியாச்சிற் றம்பலத்தே யான்.

என்றும்

கண்ணிற் கலந்தான் கருத்திற் கலந்தான்

என்எண்ணிற் கலந்தே இருக்கின்றான் - பண்ணிற்கலந்தான்

என் பாட்டிற் கலந்தான் உயிரில்கலந்தான் கருணை கலந்து.

என்ற அருள் வார்த்தைகளால் ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமையால் மக்களுக்கு போதித்து உள்ளார்.

அறிவு உள்ள மனிதர்களாய் இருந்தால் அருட்பெரும்ஜோதி ஆண்டவரை மட்டுமே நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து அவர் மீது அன்பு நிறைந்து கண்ணீர் பெருக வழிபட வேண்டும்.

அப்போதுதான் உண்மையான அருட்பெரும்ஜோதி ஆண்டவர் இடம் நாம்  தொடர்பு கொள்ள முடியும்...

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

அன்புள்ள ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்

9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு