வியாழன், 13 அக்டோபர், 2016

சாகாக் கல்வி ஒரு சிறு விளக்கம் !

சாகாக் கல்வி ஒரு சிறு விளக்கம் !

சாகாக் கல்வி என்பது;--- மரணம் அடையாமல் வாழும் வாழ்க்கைப் பற்றி கற்றுக் கொள்ளும் கல்விக்கு சாகாக் கல்வி என்று பெயர் .

உலகில் உள்ள  அனைத்தையும் அறிந்து கொள்ள ஆரம்பக் கல்வி முதல் ,பல்கலைக் கழகம் வரை, கல்வி சாலைகள் உள்ளன ,ஆனால் உடம்பையும் உயிரையும் அழிக்காமல் பாது காக்கும் கல்வி சாலைகள் இல்லை..உலகில் உள்ள கல்விகள் அனைத்தும் பணம் ( பொருள் ) சம்பாதிக்கும் கல்வியாகவே உள்ளது ..அருள் சம்பாதிக்கும் கல்வி எங்குமே இல்லை என்பதே அனைவருக்கும் தெரியும்.

சாகாக் கல்வி ;--

நம்முடைய தமிழ் நாட்டில் பிறந்து வாழ்ந்து மரணத்தை வென்று வாழ்ந்து கொண்டு இருக்கும் ''திரு அருட்பிரகாச வள்ளலார் ''அவர்கள் சாகாக் கல்வியை உலகிற்கு அறிமுகப் படுத்தி உள்ளார்.அவர்களால் சொல்லப்படும் சாகாக் கல்வியைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் ;--

சாகாத கல்வித் தரமறிதல் வேண்டும் என்றும்
வேகாத கால் உணர்தல் வேண்டும்,உடன் -சாகாத்
தலை அறிதல் வேண்டும் தனி அருளாம் உண்மை
நிலை அடைதல் வேண்டும் நிலத்து !.....அடுத்து

சாகாத தலை அறியேன் வேகாத காலின்
தரம் அறியேன் போகாத தண்ணீரை அறியேன்
ஆகாய நிலை அறியேன் மாகாய நிலையும்
அறியேன் மெய்ந் நெறிதனை ஓர் அணு அளவும் அறியேன்
மாகாதல் உடைய பெரும் திருவாளர் வழுத்தும்
மணி மன்றம் தனை அடையும் வழியும் அறிவோனோ
ஏகாய உலகினிடை எங்கனம் நான் புகுவேன்
யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே !......அடுத்து

சாகாத வரம் எனக்கே தந்த தனித் தெய்வம்
சன்மார்க்க சபையில் எனைத் தனிக்க வைத்த தெய்வம்
மா காதலால் எனக்கு வாய்த்த ஒரு தெய்வம்
மாதவர் ஆதியர் எல்லாம் வாழ்த்துகின்ற தெய்வம்
ஏகாத நிலை அதன்மேல் எனை ஏற்றும் தெய்வம்
எண்ணு தொறும் என் உளத்தே இனிக்கின்ற தெய்வம்
தேகாதி உலகம் எலாம் செய்ப் பணித்த தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் !  அடுத்து

சாகா அருள் அமுதம் யான் அருந்தி நான் களிக்க
நாகாதி அதிபர் சூழ் நடராஜா --ஏகா
பவனே பரனே பராபரனே எங்கள்
சிவனே கதவைத் திற !...அடுத்து

கண்டேன் களித்தேன் கருணைத் திரு அமுதம்
உண்டேன் உயர் நிலைமேல் ஓங்கு கின்றேன் கொண்டேன்
அழியாத் திரு உருவம் அச்சோ எஞ்ஞான்றும்
அழியாச் சிற்றம்பலத்தே யான் !

என்று பல ஆயிரம் பாடல்களில் சாகாக் கல்வியைப் பற்றி வள்ளலார் தெரிவித்து உள்ளார் .

முதலில் சாகாக் கல்வியின் தரம் அறியேன் என்கின்றார் ..அடுத்து சாகாக் கல்வியின் தரம் அறிதல் வேண்டும் என்கின்றார் ..அடுத்து சாகாக் கல்வியை எனக்கே கற்றுத் தந்தாய் என்கின்றார் .அடுத்து சாகாமல் இருக்கும் அருள் அமுதம் உண்டேன் என்கின்றார் ...அடுத்து அழியாமல் வாழும் அருளைப் பெற்று எஞ்ஞான்றும் அழியாமல் வாழும் வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டு உள்ளேன் என்கின்றார் ...அடுத்து .திரு சிற்றம்பலத்தில் உள்ள அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் நிலைப் பெற்றேன் என்கின்றார் ...

சாகாக் கல்வி கற்க முக்கியமான மூன்று வழிகளை சொல்லுகின்றார் ..;---

''சாகாத் தலை ...வேகாக் கால் ...போகப் புனல் ''....என்பவை சுத்த சன்மார்க்க அனுபவ ஸ்தானங்கள் என்கின்றார் ..இவை மூன்றும் கண்டத்திற்கு மேல் உள்ளது .அதாவது மனிதனின்  தலைப் பாகத்தில் உள்ளது அதை தெரிந்து கொள்வதுதான் சாகாக் கல்வி என்பதாகும்...இவை மூன்றும் ஞான யோகம்  என்னும் பதினைந்தாவது அனுபவ காட்சியில் ,அனுபவ நிலைகளை அறிந்து கொள்ளும் போது வெட்ட வெளிச்சமாகத் தெரியும்

சாகாக் கல்வி கற்க;-- சுத்த சன்மார்க்கத்தில் வள்ளலார் சொல்லி உள்ள  ''ஞான சரியை தான் '' முதற் படியாகும்.அடுத்து உள்ள ஞான கிரியை ,ஞான யோகம் என்னும்  மூன்றாம் படிதான் ஞான யோகம் என்பதாகும்.அந்த ஞான யோக அனுபவ  நிலையில் உள்ளவர்களுக்குத் தான் எல்லா உண்மைகளும் தெரியும்..அடுத்து ஞானத்தில் ஞானம் என்பது முழுமையான படியாகும்  ( பூரணம் ) அடைவதாகும் அதாவது...கடவுளை அறியும் நிலையாகும்.....இந்த நிலையை அறிந்தவர் அடைந்தவர் உலகில் ஒரே ஒருவர்  அவர்தான் ''திரு அருட்பிரகாச  வள்ளலார்'' என்பவராகும்.

சாகாத்தலை ..வேகாக் கால் ...போகப் புனல் ..என்ன ? என்பதைப் பார்ப்போம்...

சாகாத்தலை என்பது;--- ஜீவன் என்னும் உயிராகும் ..அதற்கு காரண அக்கினி என்று பெயர் ...ஆகாசம் என்றும் பெயர் ..
வேகாக் கால் என்பது ;-- வேகாத காற்று என்பதாகும் ....அதற்கு ஆன்மா என்றும் பெயர் ..காரண வாயு என்றும் பெயர் ....வாயு என்றும் பெயர் ...
போகப் புனல் என்பது ;---போகாத அருள் என்னும் திரவம் என்பதாகும்  .; பூரண அருள் என்பதாகும் ..அதற்கு காரணோ அகம் என்றும் பெயர்  ....அக்கினி என்றும் பெயர் ..போகாத தண்ணீர் என்றும் பெயர்

சாகாத்தலை என்பது ;--சாகும் உயிரைக் சாகாமல் காப்பாற்றுவதே சாகாத்தலை என்பதாகும்.அதாவது உடம்பை விட்டு உயிர் பிரியாமல் பாது காக்க வேண்டும்  ,உயிரை ஒன்றும் இல்லாமல் ஆகாசம் போல் மாற்ற வேண்டும்,உயிர் மீண்டும்  பிறப்பு எடுக்காமல் ஒளியாக மாற்ற வேண்டும். .அதற்கு சாகாத்தலை என்று பெயர் ..

வேகாக் கால் என்பது ;--மேலேக் கண்ட உயிரைக் காப்பாற்ற வேண்டுமானால் வேகாத காற்றை சுவாசிக்க வேண்டும்.அதுவே வேகாத கால் என்பதாகும்.

 உயிரைக் காப்பாற்ற வேண்டுமானால் நாம் சுவாசிக்கும் காற்று  சூடு படாமல் இருக்க வேண்டும் .நாம்  சுவாசிக்கும் காற்று ஒவ்வொரு முறையும் .கத்தரிக்கோல் போன்று விரிந்து ,தலையின் மத்தியில் உள்ள ஆன்மாவைச் சிற்றிக் கொண்டு உள்ளே செல்கின்றது ..அதற்கு பிராண வாயு என்று பெயர் ..ஆன்மாவை சுற்று கின்றபோது காற்று சூடாகித் தான் அசுத்தங்களை வெளியே தள்ளிவிட்டு சுத்தமானக் காற்றை உடம்பு முழுவதும் அனுப்புகின்றது .,உள்ளே செல்வது ''கரிமலவாய்வு'' என்னும் பிராண வாய்வு  என்பதாகும்...வெளியே வருவது அசுத்தக் காற்று என்னும் ''கார்பன் டை ஆக்சைடு'' என்பதாகும்....

காற்று இந்த உலகில் நான்கு வகையாக கலந்து உள்ளது .அவை  அசுத்தக் காற்று,.. விஷக் காற்று..,பூதக் காற்று,..அமுதக் காற்று என்பனவாகும்.நாம் சுவாசிக்கும் காற்றை மாற்ற  வேண்டும் ...அமுதக் காற்றை மட்டும்  சுவாசிக்கும் பழக்கத்திற்கு நாம் கற்றுக் கொள்ள வேண்டும்..''அமுதக் காற்று உள்ளே செல்லும் போது ஆன்மாவில் சென்று  சூடு ஆகாமல் நேரடியாக உள்ளே செல்லும் .அதுவே வேகாக் கால் என்பதாகும்''..நாம் தினமும் தனித்து இருந்து காலையில் 4-30-மணிக்கு பூமியை நோக்கி வரும் அமுதக் காற்றை மட்டும் சுவாசிக்கும் பழக்கத்திற்கு வருவதாலும் இடைவிடாது இறைவனைத் தொடர்பு கொள்வதாலும்,அமுதக் காற்றை சுவாசிக்கும் பழக்கம் வந்துவிடும் .

சூடு ஆகாத அமுதக் காற்றை சுவாசிப்பதே  ''வேகாக் கால்'' என்பதாகும்.அதாவது ஆன்மாவில் உள்ள சுத்த உஷ்ணம் விரையம் ஆகாமல் இருக்க வேண்டும்..வேகாத விரயம் ஆகாத ஆன்மாவாக இருக்க வேண்டும் ,வேகாத கற்றாக இருக்க வேண்டும்.அதுவே வேகாக்கால் என்பதாகும். விரிக்கில் பெருகும்.

போகப் புனல் என்பது ;-- மேலே சொன்ன அமுதக் காற்றால் சுத்த உஷ்ணம் வெளியே  விரையம் ஆகாமல் ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் திரைகள் விலகி   அருள் என்னும் திரவ அமுதம் சுரக்கும்..அந்த அருள் என்னும் அமுதம்  உடம்பை விட்டு  வெளியே போகாத (தண்ணீர்) அதாவது போகப் புனலாக மாற்ற வேண்டும்...

நாம் உண்ணும் உணவு இரத்தமாக ,விந்துவாகி விரையம் ஆகிக் கொண்டே உள்ளது. அது தான் போகும் புனல் என்பதாகும் ....உணவு உண்ணாமல்.அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் இருந்து  அருளைப் பெற வேண்டும்..அருள் உடம்பை விட்டு வெளியேப் போகாது.அதுதான் போகப் புனல் என்பதாகும். அருளைப் பெற வேண்டுமானால் உலகில் உள்ள உயிர்கள் மேல்  .உண்மை இரக்கம்.உண்மை தயவு, உண்மை கருணை,  உண்மை அன்பு வேண்டும்...இவையாவும் உண்மையாக இருந்தால் ''சாகாக் கல்வி''என்பதை
சீக்கிரம் கற்றுக் கொள்ளலாம் .

வள்ளலார் அகவலில் பதிவு செய்து உள்ளது ;--

கல்வியும் சாகாக் கல்வியும் அழியாச்
செல்வமும் அளித்த சிவமே சிவமே
அருள் அமுதம் எனக்கே அளித்து அருள் நெறி வாய்த்
தெருள் உற வளர்க்கும் சிவமே சிவமே !

உலகியல் சிறிதும் உளம் பிடியா வகை
அலகில் பேர்  அருளால் அறிவது விளக்கிச்
சிறு நெறி செல்லாத் திறன் அளித்து அழியா
துது நெறி உணர்ச்சி தந்து ஒளி உறப் புரிந்து
சாகாக் கல்வியின் தரம் எலாம் உணர்த்திப்
சாகா வரத்தையும் தந்து மேன் மேலும்
அன்பையும் விளைவித்து அருட் பேர் ஒளியால்
இன்பையும் நிறைவித்து  என்னையும் நின்னையும்
ஓர் உரு ஆக்கி யான் உன்னிய படி எலாம்
சீர் உறச் செய்து உயிர் திறம் பெற அழியா
அருள் அமுது அளித்தனை அருள் நிலை ஏற்றினை
அருள் அறிவு அளித்தனை அருட்பெரும்ஜோதி
வெல்க நின் பேரருள் வெல்க நின் பெருஞ் சீர்
அல்கல் இன்று ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி !

என்னும் விளக்கத்தால் தெளிவுப் படுத்தி உள்ளார் ...

சாகாத்தலைப் பெறுவதற்கு.... பசித்து இருக்க வேண்டும்,
வேகாக் கால் ,பெறுவதற்கு..... தனித்து இருக்க வேண்டும்
போகப் புனல் பெறுவதற்கு...... விழித்து இருக்க வேண்டும்.

தொடரும் ;--

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு