புதன், 26 அக்டோபர், 2016

ஞான சபையும் ! சுற்றி உள்ள சங்கிலியும் !

ஞான சபையும் ! சுற்றி உள்ள சங்கிலியும் !

கடவுள் ஒருவரே அவரே அருட்பெருஞ்ஜோதியர் ! என்ற உண்மையை உலகிற்கு தெரியப் படுத்துவதற்கு  வடலூர் பெருவெளியில் ''சத்திய ஞான சபையை''  வள்ளல்பெருமான் தோற்றுவித்து உள்ளார் ..

சத்திய ஞான சபையின் தோற்றம் !

சத்திய ஞான சபையின் தோற்றம் எட்டு கோண வடிவம் உள்ளது ..எட்டு பாகமாக பிரித்து வடிவம் அமைத்து உள்ளார் .ஒவ்வொரு பக்கத்திலும்,ஒரு  பெரிய கதவு இரண்டு ஜன்னல்கள் வைத்து கட்டப்பட்டு உள்ளது .

 ஆக மொத்தம்  எட்டுக் கதவுகள் பதினாறு ஜன்னல்கள் உள்ளன. ஏன் எட்டு கதவுகள் வைத்து வள்ளல்பெருமான் அமைத்து  உள்ளார் என்பதை சிந்திக்க வேண்டும்.ஒவ்வொரு கதவுக்கும் ஒவ்வொரு அம்பலம் என்று பெயர் .அதனால் வடலூர் ஞான சபையில் எட்டு அம்பலம் ,அதாவது எட்டுக் கதவுகளும் திறந்தே வைத்து இருக்க வேண்டும் என்பதுதான் வள்ளலாரின் விருப்பம் கட்டளையுமாகும்...

உடம்பு என்பது சபையாகவும் ,அதன்  உள்ளே இருக்கும் தீப  ஒளியே அறிவாகிய ஆன்ம பிரகாசமாகிய அருட்பெருஞ்ஜோதியாகவும் ,அந்த உள்  ஒளியை சுற்றி உள்ள கண்ணாடியே மனமாகவும்,அதற்கு வெளியே கண்ணாடியை மறைத்துக் கொண்டு உள்ள, மன மாயை என்னும் அறியாமையாகிய மாயை,  மாமாயை,பெரு மாயை என்னும் ஏழு திரைகளாகவும்  .அமைத்து உள்ளார்கள்.

ஞான சிங்காதன மேடை ;--

சபையின் மத்தியில் நான்கு தூண்கள் எழுப்பி அதன்மேல் மேடை அமைத்து உள்ளார் .அந்த மேடையின் பெயர் ''ஞான சிங்காதன மேடை'' என்று பெயராகும்..நான்கு தூண்கள் என்பது கழுத்து பாகம் ..உடம்பிற்கும் .தலைக்கும் இணைப்பு பாகம்தான் கழுத்துப் பாகமாகும்...

அந்த மேடையின் அனுபவ நிலைகள் ;--

1,படிக மேடை
2,ஆயிரத்து எட்டு கமல இதழ்
3,ஓங்கார பீடம்
4,குண்டலி வட்டம்
5,ஜோதிஸ் தம்பம்
6,சுத்த நடனம் ..

இந்த ஆறு ஸ்தானங்களும் அனுபவத்தால் தான் அறிய முடியும்,இஃது நிராதார லஷ்ணம் என்று வள்ளலார் சொல்லுகின்றார்.இவற்றை அறிய வேண்டுமானால் சுத்த சன்மார்க்கத்தை கடைபிடித்து தயவே வடிவாக நின்றோமானால் ,அனுபவத்தில் அறியலாம். இந்த அனுபவ ஸ்தானங்கள் கனடத்திற்கு மேலே உள்ளது .அவற்றை அறிந்துதான் ஞான சபையைத் தோற்றுவித்து உள்ளார் ..

வள்ளலார் சொல்லுவது ;--

சபை எனது உளம் எனத் தான் அமர்ந்து எனக்கே
அபயம் அளித்ததோர் அருட்பெருஞ்ஜோதி !.....என்றும்

சமரச சத்தியச் சபையில் நடம்புரி
சமரச சத்தியத் தற்சுயஞ் சுடரே !......என்றும்.

சத்திய ஞான சபை என்னுள் கண்டனன்
சன்மார்க்க சித்தியை நான் பெற்றுக் கொண்டனன்
நித்திய ஞான நிறை அமுதம் உண்டனன்
நிந்தை உலகியற் சந்தையை விண்டனன் ,,,

என்றும் ..

ஆணிப் போன்னம்பலக் காட்சி ! என்னும் தலைப்பில் எழுதிய பாடல்களில் அனுபவக் காட்சிகளை படம் பிடித்துக் காட்டுகின்றார்,..

வடலூர் ஞான சபையில் காட்டும் ஜோதி தரிசனம் !

வள்ளலார் சொல்லிய வண்ணம் ஞான சபையில்,இப்போது ஜோதி தரிசனம் காட்டவில்லை ..என்பதை சுத்த சன்மார்க்கிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

வள்ளலார் எதற்க்காக எண்கோண வடிவமாக ஞான சபையைத் தோற்றுவித்து,எட்டுக் கதவுகளை வைத்து உள்ளார்,என்பதை சிந்திக்க வேண்டும்.

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !

வருவார் அழைத்து வாடி !

வருவார் அழைத்து வாடி வடலூர் வடதிசைக்கே
வந்தாற் பெறலாம் நல்ல வரமே .

திருவார் பொன்னம்பலத்தே செழிக்கும் குஞ்சித பாதர்
சிவ சிதம் பரபோதர் தெய்வச் சபா நாதர் .............வருவார்

சிந்தை களிக்கக் கண்டு சிவானந்த மது உண்டு
தெளிந்தோர் எல்லோரும் தொண்டு செய்யப் பவுரி கொண்டு
இந்த வெளியில் நடம் இடத் துணிந்தீரே அங்கே
இதை விடப் பெருவெளி இருக்கு தென்றால் இங்கே ......வருவார்

இடுக்கு இல்லாமல் இருக்க இடம் உண்டு நடஞ் செய்ய
இங்கு அம்பலம் ஒன்று அங்கே எட்டு அம்பலம் உண்டைய
ஒதுக்கில் இருப்பது என்ன உளவு கண்டு கொள்வீர் என்னால்
உண்மை இது வஞ்சம் அல்ல உம்மேல் ஆணை என்று சொன்னால் ....வருவார்

மெல்லியல் சிவகாமி வல்லி உடன் களித்து
விளையாடவும் எங்கள் வினை ஓடவும் ஒளித்து
எல்லையில் இன்பம் தரவும் நல்ல சமயம் தான் இது
இங்கும் அங்கும் நடமாடி இருக்கலாம் எனற போது

வருவார் அழைத்து வாடி வடலூர் வட திசைக்கே
வந்தால் பெறலாம் நல்ல வரமே !

என்ற பாடலின் வாயிலாக தெளிவாக விளக்கி உள்ளார் ..

தொடரும் ;-----
0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு