புதன், 12 அக்டோபர், 2016

மரணம் இல்லாப் பெருவாழ்வு ஒரு சிறு விளக்கம் !

மரணம் இல்லாப் பெருவாழ்வு ஒரு சிறு விளக்கம் !

மனிதனின் உடம்பில் பக்குவம் உள்ள ஆன்மா குடி இருக்கின்றது.அதனால் உயர்ந்த அறிவுள்ளவன் மனிதன் என்று சொல்லப் படுகின்றது ..அது ஐந்து மலங்களால் ஆனது.,அந்த உடம்பில் ஆன்மா ,உயிர், கரணங்கள்,இந்திரியங்கள் சேர்ந்த ஒரு கலவையாகும். அதற்கு  ஊன உடம்பு
( பஞ்ச பூத உடம்பு ) என்று பெயராகும்.

அந்த மலங்களால் ஆன கலவைகள் இயங்குவதற்கு ,பொருள் உணவு வேண்டும்.பொருள் உணவு என்பது பஞ்சபூதங்களால் கிடைக்கும்  உணவு முறைகள் ஆகும் .அந்த உணவை  உண்ணுகின்ற வரையில் மரணம் வந்து கொண்டே இருக்கும்..இன்பம் துன்பம் வந்து கொண்டே இருக்கும்.

ஆன்மா !

ஆன்மா என்னும் உள் ஒளியானது.உலக பற்று என்னும் சிறிய அற்ப ஆசைகளான மண்ணாசை,பொன்னாசை,பெண்ணாசை என்னும்  இன்பங்களினால் அதாவது  பாசங்களில் சிக்கி உள்ளதால் ஆன்மாவை ஏழு விதமான மாயா திரைகள் மறைத்துக்  கொண்டு உள்ளது.ஆதலால் ஆன்மா தன்னை அறிந்து கொள்ளாமல்,பிறந்து பிறந்து ,இறந்து இறந்து,இந்த உலகிலே வாழ்ந்து கொண்டு உள்ளது .

எனவே ஆன்மா தன்னுடைய உண்மையான தந்தை யார் ? என்பது தெரியாமல் தன்னுடைய உண்மையான சொரூபம்  என்னவென்று தெரியாமல்,தான் எங்கு இருந்து வந்தோம் என்று தெரியாமல்,ஐந்து மல இருள் சூழ்ந்து தன்னை அறியாமல்   வாழ்ந்து கொண்டு உள்ளது .

அருள் !

இந்த மனித தேகத்தில் இருந்து  விடுபட வேண்டுமானால் ''அருள்'' என்னும் திரவம் வேண்டும்...அந்த அருள் என்னும் திரவம் முழுமையாக அதாவது பூரணமாக கிடைக்க வேண்டும்.அந்த அருள்  ஆற்றலால் உடம்பையும் உயிரையும்,கரைத்து பிரிக்க வேண்டும்..உடம்பும் உயிரும் கரைந்து பிரிந்தால் ஆன்ம தேகம் என்னும் ஒளி உடம்பு வெளிப்படும்.ஊன உடம்பு ஒளி உடம்பாக மாற்றுவதுதான் மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும்.

உடம்பையும் ,உய்ரையும்  அழிக்கக் கூடாது அதாவது மரணம் வரக்கூடாது .மரணம் வந்தால் மீண்டும் பிறப்பு உண்டு.

ஊன உடம்பு ஒளி உடம்பாக மாற்றம் அடைந்தால் மீண்டும் பிறப்பு என்பது கிடைக்காது, ஆன்மா மீண்டும் பிறப்பு  எடுக்காது...அந்த ஆன்மாவில் இருந்து மீண்டும்  உயிரும் உடம்பும் தோன்றாது..

அருட்பெருஞ்ஜோதி தெய்வம் !

அருளைக் கொடுக்கும் ஒரே தெய்வம்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னும் பேர் ஒளியாகும்..அந்த தெய்வம் தான் நமது தாயாக, தந்தையுமாய் தாங்கி நிற்கும் தெய்வம் ..

சாதி, சமய,மதங்களில் சொல்லும் தெய்வங்கள் அனைத்தும் ''கலையுரைத்த கற்பனை தெய்வங்களாகும்''...அத் தெய்வங்களைப்  பின் பற்றாமல் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையே,பின்பற்றித் தொடர்பு கொள்ள வேண்டும்.

உடம்பையும் உயிரையும் ஐந்து மலங்களையும்..... ,,தவம்,யோகம்,தியானம்,போன்ற உபாய வகையாலோ ,மற்றும் காய கற்பத்தாலோ ,மருந்தாலோ,மன உணர்வாலோ ,மற்ற புறச்செயல்களாலோ,நீக்கப் பட முடியாது ...

திருவளின் சேர்க்கையால் தான் உடம்பிலும் உயிரிலும் கலந்து நிறைந்து ,கரைந்து பிரிக்க முடியும்...ஆகவே அந்த அருள்தான் எல்லாவற்றுக்கும் மேலான ''அருள் ஞான'' மருந்தாகும்.....அந்த அருள் ஞான மருந்தை முழுமையாக அனுபவிப்பவர் எவரோ ? அவரே மரணம் இல்லாப் பெரு வாழ்வில் வாழ முடியும்......

வள்ளலார் ஞான சரியை என்னும் தலைப்பில் பதிவு செய்து உள்ள பாடல் !

நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே
நிறைந்து நிறைந்து ஊற்று எழும் கண்ணீர் அதனால் உடம்பு
நனைந்து நனைந்து அருள் அமுதே நன் நிதியே ஞான
நடத்தரசே என் உரிமை நாயகனே என்று
வனைந்து வனைந்து ஏத்துதும் நாம் வம்மின் உலகியிலீர்
மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்து உரையேன் பொய் புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன்
பொற்சபையில் சிற்சபையில் புகும் தருணம் இதுவே !

என்று தெளிவாக விளக்கி பதிவு செய்து உள்ளார்...

மரணத்தை வெல்வதற்கும்,அருளைப் பெறுவதற்கும் ஒரே கருவி ''கருணைதான்'' என்று வள்ளலார் சொல்லி உள்ளார்,கருணையினால் அருள் சுரக்கும்....எங்கே கருணை இயற்கையில் உள்ளன அங்கே விளங்கிய அருட்பெரும் சிவமே என்று அகவலில் தெரிவித்து உள்ளார் .

பேருபதேசம் ;---

வள்ளலார் இறுதியாக பேருபதேசம் என்ற பகுதியில் தெளிவாக விளக்கி உள்ளார் ,...இப்போது ஆண்டவர் என்னை ஏறா நிலை மேல் ஏற்றி இருக்கின்றார்...எல்லா வற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது ,,ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்கள் ஆனால் என்னைப் போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள் .இது வரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டு இருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களா ? என்று ஒரு கேளிவியைக் கேட்கின்றார் ,,

எவரும் பெற்றுக் கொள்ளவில்லை .நான் அப்படி அந்தச் சமயத்தில் வைத்திருந்த ;லட்சயமே என்னை இந்த நிலையில் தூக்கி விட்டது என்றாலோ ...அந்த லட்சியம் என்னை தூக்கி விடவில்லை,என்னை இந்த இடத்திற்குத் தூக்கி விட்டது யாதெனில் ...;--

எனக்கு அக்காலத்திலே தெரிவிக்க வேண்டியதை தெரிவித்தார் ..அந்த உண்மைப் பெருநெறி ஒழுக்கம் யாதெனில்  ''கருணையும் சிவமே பொருள் எனக் காணும் காட்சியும் பெருக '' என்றதுதான் என்னை ஏறா நிலை மிசை ஏற்றி விட்டது ,,அவைதான் தயவு ,தயவு என்னும் கருணைதான் என்னைத் தூக்கி விட்டது என்று மிகத் தெளிவாக பதிவு செய்து உள்ளார் .

அந்த தயவுக்கு ஒருமை வரவேண்டும் ,அந்த ஒருமை இருந்தால்தான் தயவு வரும் என்கின்றார் ,தயவு வந்தால்தான் பெரிய நிலைமேல் ஏறலாம் ...ஒருமை என்பதுதான் ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமை என்பதாகும்.

ஆன்மநேய ஒருமைப் பாட்டு உரிமை என்றால் என்ன ?

எத்துணையும் பேதம் உறாது எவ் உயிரும்
தம் உயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்து உரிமை உடையவராய் உவக்கின்றார்
யாவர்  அவர் உளம் தான் சுத்த
சித்து உருவாய் எம் பெருமான் நடம் புரியும்
இடம் என நான் தெரிந்தேன் அந்த
வித்தகர் தம் அடிக்கு ஏவல் புரிந்திட என்
சிந்தை மிக விழைந்த தாலோ !

எல்லா உயிர்களும் தம் உயிர்போல் நினைக்கின்றது தான் ஆன்மநேய ஒருமைப் பாட்டு உரிமை என்பதாகும்  ,,,அந்த உரிமையைத் தெரிந்து கொண்டு வாழ்பவர்களுக்கு மட்டுமே கருணை என்னும் தயவு உண்டாகும் .அந்த கருணை உள்ளவர்களுக்கு ..அருட்பெருஞ்ஜோதியின் தனிப்பெரும் கருணை என்னும் அருள் கிடைக்கும்...அந்த அருள் பூரணமாக கிடைக்கும் போது தான் ஊன உடம்பு ஒளி உடம்பாக மாற்றம் அடையும் ,

ஒளி உடம்பாக மாற்றம் அடைந்தால் மட்டுமே,  மரணத்தை வென்று மரணம் இல்லாப் பெருவாழ்வு கிடைக்கும்....அதற்குப் பெயர்தான் பேரின்ப பெருவாழ்வு என்பதாகும்,,,சுத்த பிரணவ ஞான தேகம் என்பதாகும்.கடவுள் நிலை அறிந்து அம்மயமாகும் என்பதாகும்...

தொடரும் ;--

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896 ...


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு