புதன், 12 அக்டோபர், 2016

பொய்யை நம்பி காத்து கிடக்க வேண்டாம் !

பொய்யை நம்பி காத்து கிடக்க வேண்டாம் !

வள்ளல்பெருமான் காட்டிய, சொல்லிய ''ஒரே கடவுள்'' அவரே அருட்பெருஞ்சோதி ஆண்டவர் '' என்ற கொள்கையைப் பின் பற்றாதவர்கள் சுத்த சன்மார்க்க கொள்கைக்கு நேர் விரோதமாணவர்கள்.என்பதை தெரிந்து புரிந்து கொள்ள வேண்டும் என்று வள்ளலார் சொல்லுகின்றார் .

சன்மார்க்க கொள்கையில் உள்ளவர்கள் இன்னும் சாதி ,சமய ,மதக் கொள்கையை பின்பற்றி கொண்டு உள்ளார்கள் .அப்படி உள்ளவர்கள் சுத்த சன்மார்க்கக் கொள்கைக்கு அருகதை அற்றவர்கள் .

வள்ளலார் பதிவு செய்து உள்ளது !

சுத்த சன்மார்க்கத்திற்கு முக்கிய தடைகள் ஆகிய சாதி,சமயம்,மதம் முதலிய மார்க்கங்களை முற்றும் பற்று அற கை விட்டவர்களும் ,காமக் குரோதம் முதலியவைகள் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக் கொள்பவரும் ,கொலை, புலை தவிர்த்தவர்களும் ஆகிய இவர்கள் தான் சுத்த சன்மார்க்கத்திற்கு உரியவர்கள் ஆவார்கள்.

அவர்களே மரணம்,பிணி,மூப்பு ,பயம்,துன்பம்,இவை முதலியவைகளைத் தவிர்த்துக் கொள்வார்கள் .அதாவது ;-- செயற்கை ஆகிய குணங்களை நன் முயற்சியால் தடுத்துக் கொள்பவர்களுக்குக் கேவலமான அதிகார மரணம் நீங்கும்.

அப்படி இல்லாது இவ்விடம் காத்து இருப்பவர்கள்.மரணத்தைத் தவிர்த்துக் கொள்ள மாட்டார்கள்.

அருள் விளங்கும் காலத்தில் அவரவர்கள் பரிபாகத்துக்குத் தக்கதாக இகலோக போகத்தை மட்டும் அனுபவிக்கக் கூடும் ..பரலோக போகமாகிய ஞான சித்திகளைப் பெற மாட்டார்கள்.என்பதை தெளிவாக வள்ளலார் விளக்கி சொல்லி எழுதி வைத்து உள்ளார்...

வள்ளலார் கொள்கையைப் பின்பற்றுபவர்கள் எல்லவரும் இதுவரைக்கும் இருந்தது போல் இனியும் வீண் காலம் கழுத்துக் கொண்டு இல்லாமல் வள்ளலார் சொல்லி உள்ள  உண்மை ஒழுக்கங்களைக் கடைபிடித்து  சுத்த சன்மார்க்கி களாய் வாழ்வதற்கு முயற்சி செய்யுங்கள் .

கண்டதை எல்லாம பின்பற்றிக் கொண்டு சன்மார்க்கத்தையும் பின்பற்றிக் கொண்டு வாழ்வதால் எந்த பயனும் கிடைக்காது...எக்காலத்திலும் மரணத்தை வெல்லவே முடியாது....இது சத்தியம்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு