செவ்வாய், 4 அக்டோபர், 2016

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்் வருகை !அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வருகை !

5-10-1823 ஆம் ஆண்டு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இந்த உலகத்திற்கு வந்தார் .


அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் 51, ஆண்டுகள்  இந்திய திரு நாட்டின் ,தமிழ் மாநிலத்தில் ,நாம் பார்க்கும் வண்ணம் மனித உருவில் ,மனித வடிவில்  வாழந்து  உள்ளார் .

அவர்தான் திரு அருட்பிரகாச வள்ளலார் என்பவராகும்

 உண்மையானக்  கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ,வள்ளலார் உருவம் தாங்கி ,எல்லா உண்மைகளையும் ஒளிவு மறைவு இன்றி உலக மக்களுக்கு தெரிவித்து விட்டார் .

இறைவன் மொழியாகிய தமிழ் மொழியில் " திரு அருட்பா " என்னும் தலைப்பில் .சுமார் ஆறு ஆயிரம் பாடல்கள் வாயிலாகவும் .உரை நடைப் பகுதிகளாவும் .எழுதி வைத்து உள்ளார் .

உயர்ந்த அறிவுள்ள மனித தேகம் எடுத்தவர்கள் ,இப்படித்தான் வாழ வேண்டும் என்ற வழி இது . முறை இது . துறை இது . . என்ற உண்மையான வாழ்க்கை முறைகளை தெரிவித்து விட்டார் .

இனிமேல் வாழ்வது நம்முடைய விருப்பம் .

 இனி உருவம் தேவை இல்லை என்பதால் ,30-1-1874. ஆம் நாள் ஊன உடம்பை  ஒளி உடம்பாக மாற்றிக் கொண்டார் .

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இந்த உலகத்திற்கு வந்த நாளான .5-10-2016 ஆம் நாளைை ""உலக ஒருமைப்பாட்டு தினமாக .ஆன்ம நேய ஒருமைப்பாட்டு தினமாக ""சன்மார்க்க சங்கங்களில் ,சன்மார்க்க அன்பர்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள் .

 உலகில் உள்ள  எல்லா சன்மார்க்க  சங்கங்களிலும் அன்னதானமும் சொற்பொழிவும் நடைபெற்று வருகின்றன .

அனைத்து சன்மார்க்க சங்கத்தின் அன்பர்கள் அனைவருக்கும் உளமார்ந்த வாழ்த்துக்களையும் வந்தனத்தையும் தெரிவித்து கொள்கிறேன் .

ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல் ,


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு