வெள்ளி, 7 அக்டோபர், 2016

உயிரைக் காப்பாற்றும் ஒரே தெய்வம் !

உயிரைக் காப்பாற்றும் ஒரே தெய்வம் !

உலகில் உயிரைக் காப்பாற்றும் உண்மையான ஒரே தெய்வம் அருட்பெருஞ்ஜோதி தெய்வம் .

தாயாகி தந்தையுமாய் தாங்குகின்ற தெய்வம்
தன்னை நிகர் இல்லாத தனித் தலைமை தெய்வம்
வாயார வாழ்த்து கின்றோர் மனத்து அமர்ந்த தெய்வம்
மலரடி என் சென்னி மிசை வைத்தபெரும்தெய்வம்
காயாது கனியாகிக் கலந்து இனிக்கும் தெய்வம்
கருணை நிதிக் தெய்வம் முற்றும் காட்டுவிக்கும் தெய்வம்
சேயாக எனை வளர்க்கும் தெய்வம் மகா தெய்வம்
சிற்சபையில் ஆடுகின்ற தெய்வம் அதே தெய்வம் !

அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்
ஆருயிர்கட்கு எல்லாம்நான் அன்புசெயல் தெய்வம்
எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே
என்தந்தை நினது அருட் புகழை இயம்பி இடல் வேண்டும்
செப்பாத மேனிலைமேல் சுத்த சிவ மார்க்கம்
திகழ்ந்து ஒங்க அருட்ஜோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பேது நான் செய்யுனும் நீ பொறுத்தல் வேண்டும்
தலைவா நினைப் பிரியாத நிலைமையும் வேண்டுவனே !

சாகாத வரம் எனக்கே தந்த தனித் தெய்வம்
சன்மார்க்க சபையில் எனைத் தணிக்க வைத்த தெய்வம்
மா காதலால் எனக்கு வாய்த்த ஒரு தெய்வம்
மாதவர் ஆதியர் எல்லாம் வாழ்த்துகின்ற தெய்வம்
ஏகாத நிலை அதன்மேல் எனை ஏற்றும் தெய்வம்
எண்ணு தோறும் என்உளத்தே இனிக்கின்ற தெய்வம்
தேகாதி உலகம் எல்லாம் செய்யப் பணித்த தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் !

உயிரைக் காப்பாற்ற வேண்டுமா ? அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரை விட்டால் வேறு தெய்வங்களால் எதுவும் நடவாது ..

ஏன் என்றால் உயிரைக் கொடுத்தவர்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்..உயிரைக் கொடுத்தவரால் தான் உயிரைக் காப்பாற்ற முடியும் என்பதை உணர்ந்து அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்ளுங்கள். உயிர் காப்பாற்றப் படும்...

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896 ,,,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு