சனி, 8 அக்டோபர், 2016

சாகாக் கல்வி என்றால் என்ன ?

சாகாக் கல்வி என்றால் என்ன ?

சாகாக் கல்வி எனக்குப் பயிற்றித் தந்த ஜோதியே
தன்னேர் முடி ஒன்று எனது முடியிற் தரித்த ஜோதியே
ஏகாக் கரப் பொற் பீடத்து என்னைஏற்று ஜோதியே
எல்லாம் வல்ல சித்தி ஆட்சி யீந்த ஜோதியே !

சாதல் பிறத்தல் என்னும் அவத்தை தவிர்த்துக் காலையே
தனித்து உன்அருளின் அமுதம் புகட்டிக்கொடுத்தாய் மேலையே
ஓதல் உணர்தல் உவத்தல் எனக்கு நின் பொற்பாதமே
உலக விடயக் காட்டில் செல்லாது எனது போதமே !

சாகாக் கல்வி என்பது;-- ,

இறப்பது,பிறப்பது ,என்னும் அவத்தைகளில் இருந்து தவிர்த்து விலகி வாழ்வதாகும்.

அதாவது ,ஆன்மா,உயிர்,உடம்பு,உறுப்புக்களை தனித்தனியே விலகாமல்,ஆன்மாவின் தன்மைக்குத் தகுந்தவாறு மாற்றம் செய்வதாகும்.

ஜீவ தேகத்தை,ஆன்ம தேகமாக மாற்றிக் கொண்டு வாழ்வதாகும்.அதற்கு ஆன்ம இன்ப வாழ்வு என்பதாகும்.
அதில் மூன்று பிரிவான வாழ்க்கை உள்ளது,...இம்மை இன்ப வாழ்வு...மறுமை இன்ப வாழ்வு,,,,பேரின்ப வாழ்வு.என்பனவாகும்....

இம்மை இன்ப வாழ்வு என்பது ,;-- உயிர் இருக்கும் உடம்பு சீக்கிரம் அழியாது நீண்ட காலம் வாழ்வது,உடம்பு வெளி உலகத்திற்குத் தெரியும்..அதற்கு சுத்த தேகம் என்று பெயர் அவர்களுக்கு.மீண்டும் பிறப்பு இறப்பு உண்டு ..அவர்கள் கர்ம சித்திப் பெற்றவர்கள் என்று சொல்லப்படும்.

மறுமை இன்ப வாழ்வு என்பது;-- உயிர் இயக்கம் இருக்கும் ,உடம்பு கண்களுக்குத் தெரியாது, அவர்கள் வேண்டுமானால் உடம்பைக் காட்டலாம் ,காட்டாமலும் இருக்கலாம் ..அளவு கடந்த காலம் வாழலாம்,அதற்கு சுத்த பிரணவ தேகம் என்று பெயராகும்,அவர்களுக்கும் மீண்டும் பிறப்பு உண்டு .அவர்களுக்கு யோக சித்திப் பெற்றவர்கள் என்று பெயராகும்..

உயிரைக் கொண்டு வாழ்வது ஊன தேகம் என்பதாகும்.அதாவது ஜீவ தேகம் என்பதாகும்.உயிர் அடங்கி விட்டால் உடம்பு செயல் இழந்து விடும்.

தொடரும் ;---

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு