வெள்ளி, 7 அக்டோபர், 2016

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் எதையும் செய்ய முடியும் !


அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் எதையும் செய்ய  முடியும் !

மருத்துவர் கை விட்டாலும் ஆண்டவர் கை விடமாட்டார் !

இங்கே  நான் ஒரு உண்மையை சொல்ல விரும்புகிறேன் .

மருத்துவரால் காப்பாற்ற முடியாததை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் காப்பாற்ற முடியும்...

நமது தமிழக முதல்வர் உடல் நலம் சரியில்லாமல் அப்போலோ மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார் .பலபேர் பலவிதமாக பேசிக் கொண்டு உள்ளார்கள் ..அவர்  பூரண குணமடைய எல்லாம் வல்ல ''அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்''  அருள் புரிய வேண்டிக் கொள்கிறேன் ...

வள்ளலார் எழுதி உள்ள  ''திருஅருட்பாவில்''  ஜீவ காருண்ய ஒழுக்கம் என்ற
(  தலைப்பில்) பகுதியில்  மிகவும் தெளிவாக விளக்கம் தந்து உள்ளார் ..அவற்றைப் படித்து அதன் படி பின்பற்றினால் நமது முதல்வர் பூரண குணம் அடைந்து விடுவார் என்ற அவாவில் இதை பதிவு செய்கிறேன் ...

வள்ளலார் பதிவு செய்துள்ள ஒரு பகுதியை இங்கு பதிவு செய்கிறேன் !

தீராத நோய் தீர்க்கும் அருள் அமுதம்.!

சூலை,குன்மம்,குஷ்டம்,முதலிய தீராத வியாதிகளால் வருந்துகின்ற சமுசாரிகள் ,தங்கள் தரத்திற்கு ஒத்தபடி பசித்தவர்களுக்குப் பசி ஆற்றுவிப்பதே விரதமாக அனுசரித்தார் களானால், அந்த ஜீவ காருண்ய அனுசரிப்பே ''நல்ல மருந்தாக ''அந்த வியாதியை நிவர்த்தி செய்து விஷேச சவுக்கியத்தை உண்டு பண்ணும் என்பது உண்மை ...என்று தெளிவாக விளக்கி உள்ளார் ..

முதல்வருக்கு நெருக்கமாக உள்ளவர்கள் செய்ய வேண்டியது ;--..வடலூரில் வள்ளலார் தோற்றுவித்து உள்ள ''சத்திய ஞான சபையில் எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை ,உள்ளம் உருகி ''திரு அருட்பா''பாடல்களைப் பாராயணம் செய்து  வழிபாடு செய்து '' பின் '' நமது முதல்வர் குணம் அடையும் வரை ,,,வடலூரில் வள்ளலார் தோற்றுவித்து உள்ள ''சத்திய  தருமச்சாலையில் '' இடைவிடாது அன்னதானம் செய்து வரவேண்டும்...அப்படி நம்பி செய்து வந்தால் நிச்சயம் முதல்வர் குணம் அடைவார் ...இது சத்தியம்.....இது வள்ளலார் வாக்கு ..

மேலும் வள்ளலார் சொல்லியது .;--பசித்தவர்களுக்குப் பசி ஆற்றுவித்து இன்பத்தை உண்டு பண்ணுகின்ற ''ஜீவ காருண்ய ஒழுக்கமாகிய மேலான விரதமானது'' ,தேவர்கள்,மனிதர்கள்,பிரம்மசாரிகள் ,சமுசாரிகள்,தபசிகள்,சந்நியாசிகள்,ஆண் சாதியர்,பெண் சாதியர்,வார்த்திபர்,வாலிபர்,உயர்ந்தோர்,தாழ்ந்தோர் முதலிய யாவராலும் அவசியம் செய்யத் தக்கது என்பது ''கடவுள் ஆணை ''என்று அறிய வேண்டும்.

ஜீவ காருண்யம் உள்ள சமுசாரிகளுக்கு எப்படிப்பட்ட ஆபத்துக்களும்,அஜாக்கிரதையாலும்,ஊழ் வகையாலும் சத்தியமாக வராது ..என்று சத்தியம் வைத்து வள்ளலார் பதிவு செய்து உள்ளார் .

மேலே கண்டபடி நம்பிக்கையுடன் முதல்வர் உடன் தொடர்பு உள்ளவர்கள்., செயல்பட்டால் நிச்சயம் நமது முதல்வர் பூரண குணம் அடைவார்கள்...இது  சத்தியம்..

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் ..
9865939896.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு