செவ்வாய், 4 அக்டோபர், 2016

சுத்த சன்மார்க்க அன்பர்களுக்கு வேண்டுகோள் !

சுத்த சன்மார்க்க அன்பரகளுக்கு வேண்டுகோள் !

5-10-2016. ஆம் நாள் வள்ளலார் வருவிக்க உற்ற நாள் .

நாளை சன்மார்க்க அன்பர்கள் கடைபிடிக்க வேண்டியது .:-- நாளை காலை அமுதக்காற்று பூமியை நோக்கி வருவதால்  4-30 மணிக்கு எழுந்து விடவேண்டும் ,

சன்மார்க்க சங்கங்களில் ,வீடுகளில் அருட்பெருஞ்ஜோதி விளக்கு ஏற்றி வைத்து ,வேண்டுதல் ,விண்ணப்பம் .முறையீடு .அகவல் பாராயணம் போன்ற தோத்திரம் உள்ளம் உறுக பாடல்  செய்ய வேண்டும் .

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்வதற்கு பிரார்த்தனை செய்ய வேண்டும் .

ஏழை எளிய மக்களுக்கு அவரவர் களால் முடிந்த ஜீவ காருண்யம் செய்ய வேண்டும் .சன்மார்க்க கொள்கைகளை மக்களுக்கு போதிக்க வேண்டும் .

உயிர் கொலை செய்வதும் ,புலால் உண்பதும் பெரிய குற்றம் என்பதை போதிக்க வேண்டும் .

நாளை முழுவதும் அருட்பெருஞ்ஜோதி நினைவாகவே மனதை சிற்சபை கண் செலுத்திக் கொண்டே  இருக்க வேண்டும் .

மேலே கண்டபடி கடைபிடித்தால் ,துன்பம் ,துயரம் .அச்சம் .பயம் போன்ற துன்பம் நீங்கி மகிழ்ச்சியுடன் வாழ்வாங்கு வாழலாம் .

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அவரவர்கள் பக்குவத்திற்கு தகுந்தாற்போல் அருளை வாரி வழங்குவார் .   இது சத்தியம் .

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

 ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல் .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு