திங்கள், 10 அக்டோபர், 2016

இயற்கை உண்மை ! இயற்கை விளக்கம் !இயற்கை இன்பம் !

இயற்கை உண்மை !,இயற்கை விளக்கம் ! ,இயற்கை இன்பம் !

என்பது இரண்டு பக்கமும் உள்ளது, .அருட்பெரும்ஜோதியிடமும் உள்ளது .மனித தேகத்திலும் உள்ளது .

மனித தேகத்தில் :--

இயற்கை உண்மை என்பது ஆன்மா . . . இயற்கை விளக்கம் என்பது அருள் !
இயற்கை இன்பம் எனபது என்றும் அழியாத ஒளி தேகம் பெற்றுக் கொள்வது  !

மேலே கண்ட உண்மையை அறிந்து, மனிதன் வாழ வேண்டிய வாழ்க்கையைப் போதிப்பதுதான், வள்ளலார் சொல்லிய  சாகாக் கல்வி என்பதாகும் .

உயர்ந்த அறிவு உள்ள மனித தேகம் எடுத்து உள்ளவர்கள்,இயற்கை உண்மை ,இயற்கை விளக்கம் ,இயற்கை இன்பம் என்ன என்று,தெரிந்து கொண்டு வாழ வேண்டிய முக்கியமான உண்மை யாகும் .

இவற்றை அறிந்து வாழ்பவர்களே  உண்மை தெரிந்த அறிவு உள்ள மனிதர்கள்,

கடவுள் இடத்தில் உள்ளது :--

இயற்கை உண்மை என்பது கடவுள அருட்பெருஞ்ஜோதி  ஆண்டவர் !

இயற்கை விளக்கம் என்பது  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பேர் அறிவு !

 இயற்கை இன்பம் என்பது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பூரண அருள் !

மேலே கண்ட இரு உண்மைகளையும் அறிந்து வாழும் வாழ்க்கையே மரணத்தை வெல்லும் வாழ்க்கை யாகும்
தொடரும் :--

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல் .
9865939896 .
0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு