உலகில் உள்ள பொருள் யார் உடையது ?
எனது இனிய நண்பர் திரு அண்ணாதுரை அவர்கள் ஒரு கேள்வி கேட்டு பதில் தருமாறு கேட்டு இருந்தார் .
ஜீவகாருண்யம் செய்வதற்கு சாதி மதம் சார்ந்தவர்கள் இடத்தில் இருந்து தானே சன்மார்க்கிகள் பொருள் வாங்கி செய்கிறார்கள் அது சரியா ? என்று கேட்டு உள்ளார் .
இந்த உலகத்தில் உள்ள பொருள்கள் யாவும் இறைவன் படைத்தது .அதற்கு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது . அதற்கு சாதி மதம் என்ற பேதம் கிடையாது .ஒவ்வொரு பொருளும் உருவம் மாறிக் கொண்டே இருக்கும் .
அதனால் தான் மரணம் வந்தால் எந்தப் பொருளையும் யாரும் எடுத்துக் கொண்டு செல்ல முடியாது .பொருள் உள்ளவர்கள் ஜீவகாருண்யம செய்தால் அவர்களுக்கு புண்ணியம் சேரும் பாவம் தொலையும் .
உலகில் மனிதர்கள் எடுத்துச் செல்லும் ஒரே பொருள் அதுதான் "அருள்" என்பதாகும் . அதற்கு சாதி சமயம் மதம் என்ற கிடையாது.
எனவே தான் வள்ளலார் சாதி சமயச் சழக்கை விட்டேன் அருட்பெருஞ்ஜோதி யைக் கண்டேனடி அக்கச்சி ஜோதியைக் கண்டேனடி என்பார் .
சாதி சமய மதங்களை இறைவன் படைக்க வில்லை .மனிதர்கள் படைத்தது அதனால் தான் அவைகளை விட்டு விடுங்கள் என்கிறார் வள்ளலார் .
வள்ளலார் வடலூரில் தருமச்சாலையைச் தோற்றுவித்ததின் நோக்கம் .எல்லோரும் ஜீவகாருண்யம் செய்யலாம் .எல்லோரும் ஆன்ம லாபத்தை பெற்றுக் கொள்ளலாம் என்பதுதான் .
பொருளுக்கு சாதி சமயம் மதம் என்ற விலாசம் கிடையாது .
ஆனால் மனிதர்களுக்கு விலாசம் உண்டு .விலாசம் உள்ள மனிதர்கள் விலாசம் இல்லாத பொருளைக் கொடுப்பது தான் ஜீவகாருண்யம் .
ஜீவ காருண்யம் விளங்கும் போது அன்பும் அறிவும் தானே விளங்கும் .என்பார் வள்ளலார் ,
அன்புக்கும் அறிவுக்கும் சாதி சமயம் மதம் என்ற பேதம் கிடையாது .
எனவே தான் தயவு உள்ளவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சன்மார்க்க சங்கத்தை சார்ந்தவர்கள .
அருள் பெற்றவர்கள் யாராக இருந்தாலும் சன்மார்க்க சங்கத்தை அடைந்தவர்கள் என்பார் .
பற்று அற்றவன் இறைவன் அவரை அடைவதற்கு சாதி சமயம் மதம் போன்ற எந்தப் பற்றுதல்களும் தவிர்க்க வேண்டும் என்கிறார் .
அவரவர்கள எதை செய்தாலும் அதன் நன்மை தீமைகள் அவரையே சாரும் என்பதை சன்மார்க்கிகள் தெரிந்து கொள்ள வேண்டும் .
அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல் .

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு