புதன், 7 செப்டம்பர், 2016

சமய மதங்களின் கொள்கைகள் !


சமயம் மதங்களின் கொள்கைகள் !

 உலகம் தோன்றியது முதல் எல்லா பிறப்புகளிலும் உயர்ந்த மனிதன் பிறப்பு இறைவன் கொடுத்து உள்ளார் .

மனித பிறப்பு உயர்ந்தது ,இறைவன் அருளைப் பெற்று மரணத்தை வென்று பேர் இன்ப வாழ்வு வாழ வேண்டும் என்பது இறைவன் சட்டம் ,

சமயம் மதங்களைத் தோற்றுவித்தவர்கள உண்மைக்குப் புறம்பான கற்பனைக் கதைகளைச் சொல்லி மக்களை நம்ப வைத்து விட்டார்கள் .

அதனால்  இன்று வரையில்  உண்மை தெரியாமல் ,உயர்ந்த அறிவு இருந்தும் மக்கள் தெளிவு இல்லாமல் இருக்கிறார்கள் என்று தெரிந்து தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளல் பெருமானை இந்த உலகிற்கு வருவிக்க உற்றார் என்பதை நாம் தெரிந்து புரிந்து கொள்ள வேண்டும் .

வள்ளலார் பதிவு செய்து உள்ள பாடல் !

கலை உரைத்த கற்பனையே நிலை எனக் கொண்டாடும் கண் மூடிப் பழக்கம் எல்லாம் மண் மூடிப் போக ,என்று சாடுகிறார் .

இதற்கு என்ன அர்த்தம் என்று சன்மார்க்கிகள் புரிந்து கொண்டீர்களா ?

மேலும் வள்ளலார் பேர் உபதேசத்தில் இறுதியாக சொல்லி உள்ளார் .

இதற்கு மேற்பட .நாம் நாமும் பார்த்தும் ,கேட்டும் ,லஷியம் வைத்துக் கொண்டு இருந்த வேதம் ,ஆகமம் ,புராணம் ,,இதிகாசம் முதலிய கலைகளில் எதனிலும் லஷியம் வைக்க வேண்டாம் என்கிறார் .இதற்கு என்ன? அர்த்தம் என்பதை சன்மார்க்கிகள் தெரிந்து கொள்ள வேண்டும் .

மேலும் சைவம் வைணவம் முதலிய சமயங்களிலும் ,வேதாந்தம் ,சிந்தாந்தம் முதலிய மதங்களிலும் லஷியம் வைக்க வேண்டாம் என்கிறார் ,இதற்கு என்ன ?  அர்த்தம் என்பதை சன்மார்க்கிகள் தெரிந்து கொள்ள வேண்டும் .

இறுதியாக சொல்லுகிறார் .

உண்மை சொல்ல வந்தனன் என்று உண்மை சொல்ல புகுந்தாலும் தெரிந்து கொள்வார் இல்லை என்று வேதனைப் படுகின்றார் .

மேலும் :--சுத்த சன்மார்க்கத்திற்கு தகுதி உடையவர்கள் யார் ?

சுத்த சன்மார்க்கத்திற்கு முக்கிய தடையாகிய சமயம் ,மதம் முதலிய மார்க்கங்களை முற்றிலும் பற்று அறக் கைவிட்டவர்கள மட்டுமே சுத்த சன்மார்க்கத்திற்கு தகுதி உடையவர்கள் என்கிறார் .

இதில் இருந்து நாம் என்ன புரிந்து கொண்டோம் எனபது எனக்குத் தெரியவில்லை .

நான் வள்ளலார் சொல்லி உள்ளதைத் தான் சொல்லுகிறேன் .எனக்கு யார் மீதும் வருத்தம் இல்லை .

வைதாலும் வைதிடுமின் வாழ்த்து எனக் கொள்கிறேன் .பொய் தானோர் சிறிது எனினும் புகலேன் என்பார் வள்ளலார் .

அதேபோல் என்னைப் பற்றி நீங்கள் எதைச் சொன்னாலும் நான் வருத்தம் அடைய மாட்டேன் .

நான் வள்ளலார் எழுதிய சொல்லிய சுத்த சன்மார்க்க கொள்கையில் தெளிவாக இருக்கிறேன் . படமாட்டேன் இனித் துயரம் படமாட்டேன்  பயப்படவும் மாட்டேன் .அருட்பெரும்ஜோதி ஆண்டவரின் பதத்துணையை பிடித்து உள்ளேன் என்பதால் .

எனவே சன்மார்க்க அன்பர்கள் என்னை திட்டினாலும் புறம் கூறினானாலும் வருத்தம் அடைய மாட்டேன் .

ஏன் என்றால் நீங்கள் அனைவரும் என்னுடைய உடன் பிறப்புகள் என்பதை என்றும் மறக்க மாட்டேன் .

நான் சுத்த சன்மார்க்க கொள்கையில் தெளிவாக இருக்கிறேன் .

வள்ளலார் எழுதிய திரு அருட்பாவை முதல் திருமுறையில் இருந்து ஆறாம் திருமுறை வரையில் நன்கு படியுங்கள் .வள்ளார் ஏன் ?ஒன்றாம் திருமுறையில் இருந்து ஐந்து திருமுறை எழுதினார் .

அடுத்து ஆறாம் திருமுறை எழுதினார் என்பது உங்களுக்கே விளங்கும் .


தொடரும்

ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல் 

1 கருத்துகள்:

14 அக்டோபர், 2022 அன்று PM 10:15 க்கு, Anonymous பெயரில்லா கூறியது…

தயவு திரு கதிர்வேல் ஐயா அவர்களே தற்போதும் நிறையபேர் கூட்டத்திற்கு மட்டுமே என் பொழிவு எனக்கோ என்னைச் சேர்ந்தவர்க்கோ அல்ல என்று திண்ணம் இட்டு பேசு பவர்களே அதிகம்.

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு