வியாழன், 15 செப்டம்பர், 2016

குரு என்பவர் யார் ?

குரு என்பவர் யார் ?

அறிவு உடம்பில் நான்கு வகை !

அறிவு என்பது உடம்பில் நான்கு பிரிவுகளாக நான்கு வகையாக செயல் படுகிறது .

இந்திரிய அறிவு ,
கரண அறிவு ,
ஜீவ அறிவ,,
ஆன்ம அறிவு ,

என்பதாகும் ,அதற்கு மேல் அருள் அறிவு ,கடவுள் அறிவு என்பதும் உண்டு .

இதில் எந்த அறிவு உயர்ந்தது என்பதை சிந்திக்க வேண்டும் .

நாம் எந்த அறிவைக் கொண்டு இயங்கிக் கொண்டு உள்ளோம் .

இந்திரிய அறிவைக் கொண்டும,் கரண அறிவைக் கொண்டும் செயல் பட்டுக் கொண்டு உள்ளோம் . அந்த அறிவு எப்படி வந்தது .? நம் முன்னோர்கள் அருளாளர்கள் சொல்லியதை கேட்டு பார்த்து செயல் பட்டுக் கொண்டும் வாழந்து கொண்டும்  உள்ளோம் .

இவைகள் எல்லாம் உண்மையானதா என்றால் இல்லை .ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியைக் காட்டி விட்டு சென்று விட்டார்கள் .

நாம் அவற்றை விடாமல் பின் பற்றி வாழ்ந்து கொண்டு உள்ளோம் .

அதனால் நமக்கு உண்மையான அறிவு விளக்கம் இல்லாமல் ,இந்திரிய அறிவிலும் கரண அறிவிலும் பின் பற்றி வாழ்ந்து கொண்டு உள்ளோம் .

வள்ளலார் . . . .  எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த  லாபம், ஆண்டவர்  என்னை ஏறா நிலைமிசை ஏற்றி வைத்து உள்ளார் என்கிறார் .

இதுவரையில் நாம் ஜீவ அறிவுக்கும் ,ஆன்ம அறிவுக்கும் செல்லவில்லை .மன அறிவைத் தெரிந்து கொண்டு மனிதனாக வாழ்ந்து கொண்டு உள்ளோம் .

மன அறிவானது.,  ஜீவன் அறிவு  வழியாக ஆன்ம அறிவைத் தொடர்பு கொள்ள வேண்டும் .

அதனால் தான் ஜீவ காருண்யம் வேண்டும் என்கிறார் .ஜீவ காருண்யமே மோட்ச வீட்டின் திறவு கோல் என்றார் .

அதனால் ஜீவ காருண்யமே குரு என்று ஆகிவிட முடியுமா ? முடியாது .அது குருவை காட்டும் வழியாகும் .

ஜீவ காருண்யத்தால் ஜீவ அறிவு விளக்கம் அடையும் .

ஜீவ அறிவு விளக்கம் அடைந்தால் தான் ,ஜீவன் என்னும் உயிர் .தன்னை பாதுகாக்க ஆன்ம அறிவுடன் தொடர்பு கொள்ளும் ,

ஆன்ம அறிவு விளக்கம் அடைந்தால் அருள் அறிவு விளக்கம் அடையும் .

அருள் அறிவு  பூரண விளக்கம் அடைந்தால் ,கடவுள் அறிவு தோன்றும் வெளிப்படும் .

இதில் எது உயர்ந்தது . இயற்கை உண்மையான கடவுள் உயர்ந்தவர் என்பதை நாம் புரிந்து கொண்டால் .

எல்லாம் வல்ல இறைவன் தான் குரு என்பதை அறிந்து தெரிந்து புரிந்து கொள்ள வேண்டும் .

அந்த இயற்கை உண்மையான கடவுள் இருக்கும் இடம் தான் சிற்சபை என்னும் சிரநடுவில் உள் ஒளியாக இயங்கிக் கொண்டு உள்ளார் .

எனவேதான் சிற்சபை நடத்தை தெரிந்து துதித்திடுமின் சித்தி எல்லாம் இத்தினமே சத்தியம் சேர்ந்திடுமே .

என்று சத்தியம் வைத்து சொல்லுகின்றார் நமது அருள் தந்தை அருட்பிரகாச வள்ளலார் .

நமக்கு உண்மையான குரு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர ஒருவரே !

வள்ளலார் காட்டிய பாதையில் வாழ்ந்து வளம் பெறுவோம் .

எல்லா உயிர்களும் இன்புற்று வாழக !

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல் ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு