வியாழன், 15 செப்டம்பர், 2016

மொழி இரண்டு வகை !

மொழி இரண்டு வகை !

 குறள் மொழி ஒன்று ,அருள் மொழி ஒன்று ,

குறள் மொழி என்பது ,விந்து நாதத்தால் எழுவது ,உணர்வது ,சொல்வது ,எழுதுவது .

அருள் மொழி என்பது ,பர நாதத்தால் ,பர ஞானத்தால் எழுவது .உணர்வது சொல்வது ,எழதுவது .

விந்து நாதத்தால் தோன்றியது அனைத்து மொழிகளும் ,அழி்து விடும் .

 பர நாதத்தால் தோன்றிய ஒரே மொழி தமிழ் மொழி யாகும் ,என்றும் அழியாதது .

விந்து நாதத்தில் தோன்றிய மொழிகளில் எதைச் சொன்னாலும் அவைகள் அழிந்து போய் விடும் .

பர நாதத்தில தோன்றிய மொழியில் எதைச் சொன்னாலும் போதித்தாலும் அவைகள் நிலைத்து நிற்கும் .

எனவேதான் வள்ளலார் சொல்லுவார் .

இறைவா என்னை வேறு மொழிகளில் பிறபிக்காமல் தமிழ் மொழியில் பிறப்பித்த உங்களுக்கு என்ன கைமாறு செய்வேன் என்று போற்றி புகழ்கின்றார் .

இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டும் .

நம்முடைய வள்ளலார் எழுதிய "திரு அருட்பா " பர நாதம் என்னும் அருள் ஞானத்தால் எழுதியது .

அதனால்தான் "சாகாக்கல்வியை" போதிக்கின்றது .மற்ற நூல்கள் அனைத்தும் சாகும் கல்வியைப் போதிக்கின்றது .

எனவேதான் சாதியும் மதமும் சமயமும் பொய் என ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி !என்கிறார் .

நான் மக்களை எப்போதும் சாடியதில்லை .மக்களை மாக்களாக்கிய சாதி சமயம் மதங்களை சாடுகிறேன் .

அதுவும் வள்ளலார் சொல்லி உள்ளதைத் தான் சொல்லுகிறேன் .அதனால் என்மீது பலபேருக்கு வருத்தம் .நான் அதைப்பற்றி எப்போதும் வருத்தம் அடைந்தது இல்லை .

இப்போது நமக்குக் கிடத்துள்ளது மாபெரும் பொக்கிஷம் "திரு அருட்பா "என்னும் "ஞான நூல் ".வள்ளலார் உலக மக்களுக்கு கொடுத்து உள்ள அருள் கொடையாகும் .

நாம் அனைவரும் ஆன்ம நேயம் கொண்டு அருளை பகிர்ந்து கொள்வோம் .

அருளைப் பெறுவோம் .


இன்னும் விரிக்கில் பெறுகும்

தொடரும் . . . .

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல் .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு