புதன், 15 ஜூன், 2016

ஆன்மா ! ஆணவம் ! மாயை,கன்மம் !

ஆன்மா என்பது !

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் குழந்தை என்பதாகும்.


மாயை !

மனம் என்பது உலகியல் இன்பத்தை தேடிக் கொண்டே இருக்கும் ஒரு சூக்குமக் கருவியாகும்.மனம் இல்லை என்றால் மனிதன் இல்லை ..

இறைவனால் அனுப்பட்ட ஆன்மா , பஞ்ச பூத உலகத்தில் வாழ்வதற்கு ,மாயை என்னும் அதி சூக்குமக் கருவியால்,ஆன்மாவிற்கு  உயிரும் உடம்பும் பொருத்தி வாழ்வதற்கு வசதி செய்து கொடுக்கப்படுகின்றது.

மாயைக்கு என்ன ? அந்த அளவிற்கு சக்தி உள்ளது என்று கேட்கலாம் ,நினைக்கலாம்,

பல கோடி அண்டங்களையும்,உலகங்களையும் உயிர்களையும்,பஞ்ச பூத அணுக்கள் களையும்,கிரகங்களையும் .படைத்துள்ளவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்தான் என்பதை நாம் முதலில் அறிந்து புரிந்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு அண்டங்களையும் நிர்வாகம் செய்ய ஒரு தலை சிறந்த நிர்வாக  அதிகாரி தேவை ! அந்த நிர்வாக அதிகாரிதான் மாயை என்னும் அதிகாரியாகும்,அந்த அதிகாரியை யாரும் எளிதில் பார்த்துவிட முடியாது.தொடர்பு கொள்ள முடியாது .

பொருள் உள்ளவர்களால் பார்க்க முடியாது .அருளைப் பெரும் தகுதி உள்ளவர்கள்,இடைவிடாது நன் முயற்ச்சி செய்து அருளைப் பெற்றால்  மட்டுமே மாயையின் சொரூபத்தை காண முடியும்.

பஞ்ச பூத உலகத்தின் இயக்கத்திற்கு,அதன்  நிர்வாக பொறுப்பும் அவற்றை  ஆட்சி  செய்யும்  நிலையான பதவியில் இருப்பது தான் மாயை என்பதாகும் அந்த .மாயையை அவ்வளவு சீக்கிரம் பதவியில் இருந்து,இறக்கி விடவோ  நீக்கிவிடவோ  முடியாது.அதுதான் நிலையான ஜனாதிபதி போன்றது ஆகும்..

எக்காலத்திலும்,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின்.  சட்டத்தை மீறாமலும்  சட்டத் திருத்தம் செய்யாமலும்,  ஒழுக்கம் தவறாமல்.ஒருமை மாறாமல், தன்னுடைய பணியை சிறப்பாக செய்து கொண்டு உள்ளதுதான் மாயை என்பதாகும்.

பலப்பல  ஞானிகள், சித்தர்கள்,யோகிகள் ,மற்றும் உலக அறிவாளிகள்,மேலும் பலத்தரப்பட்ட   மக்கள் மாயையைக் குறைச்சொல்லிக் கொண்டே இருப்பார்கள் அவை முற்றிலும் தவறானதாகும்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வகுத்துத் தந்த சட்டத்தை எக்காலத்திலும்,எக்காரணம் கொண்டும் தவறான முறையில் செயல் படுத்தாத நேர்மையான ,ஒழுக்கமான சிறந்த  அதிகாரி தான் மாயை என்பதாகும்.

மாயைக்குத் துணையாக ,மாமாயை,பெருமையை,என்ற இரண்டு துணை அதிகாரிகள் செயல் பட்டுக் கொண்டு உள்ளார்கள்...இவர்கள் மூவரையும் மீறி எதுவும் இவ்வுலகில் நடைபெறாது,செயல்படாது,இயக்க முடியாது .இயங்க முடியாது.

 மாயை  தாய் போன்றது.!

மாயை என்பது தாய் போன்றது ! அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தந்தை போன்றவர் !

ஆன்மாவிற்கு உயிரைக் கொடுப்பவர் தந்தை ! உடம்பைக் கொடுப்பது தாய் !

மாயையின் நிர்வாகம்;---இந்த  பஞ்ச பூத உலகில் நீர்,நிலம்,அக்கினி,காற்று,ஆகாயம்,மற்றும்,சூரியன் .சந்திரன,நட்சத்திரங்கள்,, மேலும்,ஒன்பது கிரகங்கள்,மேலும் வால்அணு ...,திரவ அணு,..குரு அணு ...லகு அணு ,...அணு....,பரமா அணு.... ,விபு அணு ...என்னும்  ஏழு விதமான , அணுக்களை நிர்வாகம் செய்வது .மாயையின் வேலைகள் ஆகும்.

அதே வேளையில் இங்கு அருள் நிறைந்து இருக்கின்றது.அருளை நிர்வாகம் செய்யும் பொறுப்பை மாயை இடம் ஒப்படைக்க வில்லை.என்பதை நன்கு அறிந்து,புரிந்து ,தெரிந்து கொள்ள வேண்டும்.

அருளை நிர்வாகம் செய்யவும்,பாது காக்கவும்,.அருளை .யார் ? யாருக்கு எந்த அளவிற்கு  கொடுப்பது,..கொடுக்காமல் இருப்பது என்பது எல்லாம்,
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பொறுப்பும்,தனிப் பெருங் கருணை என்பதாகும்.

கணவன் மனைவி !

மாயையும், ,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரும் கணவன் மனைவி போன்றதாகும்.இதைத்தான் சக்தி இல்லையேல் சிவன் இல்லை,சிவன் இல்லையேல் சத்தி இல்லை என்பார்கள்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இருக்கும் இடம் ! நிர்வாகம் செய்யும் இடம் ! எங்கு உள்ளது என்பதை நமது அருட் தந்தை ''அருட் பிரகாச வள்ளலார்'' கீழ் கண்ட பாடல் வாயிலாக தெரியப் படுத்துகின்றார் .

அருட் பெரு வெளியில் அருட்பெரு உலகத்து
அருட்பெரும் தலத்து மேல் நிலையில்
அருட்பெரும் பீடத்து அருட்பெரு வடிவில்
அருட்பெரும் திருவிலே அமர்ந்த
அருட்பெரும் பதியே அருட்பெரும் நிதியே
அருட்பெரும் சித்தி என் அமுதே
அருட்பெரும் களிப்பே அருட்பெரும் சுகமே
அருட்பெரும் சோதி என் அரசே !

என்னும் பாடலில் தெளிவாக விளக்கி உள்ளார் .

அருட்பெரு வெளியில் இருந்து தான் ,பலகோடி அண்டங்களையும், பலகோடி உலகங்களையும்,எல்லாப் பதங்களையும்,எல்லாச் சத்திகளையும்,எல்லா சத்தர்களையும்,எல்லாக் கலைகளையும்,..எல்லாப் பொருள்களையும்,..எல்லாத் தத்துவங்களையும்,..எல்லா தத்துவி களையும் ...எல்லா உயிர்களையும் ...எல்லா செயல்களையும் ...எல்லா இச்சைகளையும் ...எல்லா ஞானங்களையும் ...எல்லாப் பயன்களையும் ...எல்லா அனுபவங்களையும் ...மற்றை எல்லா வற்றையும் ...தமது திருவருள் சத்தியால் ..

தோற்றுவித்தல்,..வாழ்வித்தல் ...குற்றம் நீக்குவித்தல் ...பக்குவம் வருவித்தல்,,,விளக்கம் செய்வித்தல் என்னும் ஐந்து தொழில்கள் முதலிய பெருங் கருணைத் தொழில்களை இயற்றி இயக்கிக் கொண்டு உள்ளவர்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பவராகும் ...  

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சமூகத்தில் ஆன்மாக்கள் நிறைந்து இருக்கின்றது.!

மாயையின் சமூகத்தில் அணுக்கள் நிறைந்து இருக்கின்றது.

 

கொடுத்து உடம்பை நான்கு பிரிவுகளாக வகுத்து ,நான்கு பிரிவுகளுக்கும்


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு