வெள்ளி, 10 ஜூன், 2016

சைவ உணவு என்பது சரியா? தாவர உணவு என்பது சரியா ?

சைவ உணவு என்பது சரியா?
தாவர உணவு என்பது சரியா ?

வள்ளலார் சைவ உணவு என்று அருட்பாவில் எந்த இடத்திலும் சொல்ல வில்லை
தாவர உணவு என்றும் சாத்வீக உணவு என்றுதான் சொல்லி உள்ளார்
சன்மார்க்கிகள் தாவர உணவு உண்ண வேண்டும் என்றும்
மாமிச உணவு உண்ணக் கூடாது என்றும் சொல்லலாம்
புலால் உணவு உண்ணக் கூடாது என்றும் சொல்லலாம்
ஏன் சைவ உணவு என்று வள்ளலார் சொல்ல வில்லை என்றால் சைவ சமயத்தில் உள்ளவர்கள் மாமிசம் உண்பவரகள் அதிகம் உள்ளாகள் எனவே சைவ உணவு என்று வள்ளலார் சொல்லவும் இல்லை ,அருட்பாவில் எந்த இடத்திலும் எழுதவும் இல்லை .
சைவ சமய இந்துக்களால் தான் உயிர் பலி வாங்கும் கோவில்கள் சாமி சிலைகள் தோற்றுவிக்கப் பட்டு உள்ளன
அதனால் தான் சிறு தெய்வ வழிபாடு செய்ய கூடாது என்றும்
கடவுளின் பெயரால் உயிர் பலி செய்யாதீரகள் என்றும் அழுத்தமாக பதிவு செய்து உள்ளார்
எனவே இனிமேல் சுத்த சன்மார்க்கிள் சைவ உணவு என்று சொல்லாமல் தாவர உணவு என்று சொல்லுவதே நன்மை தரும் எனக் கருதுகிறேன் .
அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு