வெள்ளி, 10 ஜூன், 2016

அருளார்கள் நிலை !

அருளார்கள் நிலை !

நம் தமிழ் நாட்டில் தோன்றிய சித்தர்கள் யோகிகள் ஞானிகள் போன்ற அருளாளர்கள்
உலகில் உள்ள அருளாளர்களை விட சிறந்தவர்கள் அதில் எந்த சந்தேகம் இல்லை .
ஆனால் அவரகள் முத்தி அடைந்தாகள், சமாதி அடைந்தார்கள,, பஞ்ச பூதங்களான மண்ணில் மறைந்தார்கள் ,்
நீரில் கரைந்தார்கள் ,
காற்றில் கலந்தார்கள்,
வானில் கலந்தார்கள,,
நெறுப்பில் கலந்தார்கள் ,
ஆனால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவா் உடன் கலக்கவில்லை
வள்ளலார் மட்டுமே ஆண்டவருடன் கலந்தவர் .
ஆண்டவருடன் கலப்பவர்களுக்கு மீண்டும் பிறப்பு இல்லை .
பஞ்ச பூதங்களில் கலந்தவர்களுக்கு பல்லாயிரம் ஆண்டுகள் கழித்து மீண்டும் மனித பிறப்பு உண்டு .
வள்ளலார் பெற்றது ஞான தேகம் அதற்கு முத்தேக சித்தி என்று பெயர் .மரணம் இல்லாப்பெருவாழ்வு என்று பெயர் .
கடவுள் நிலை அறிந்து அம்மயமம் ஆதல் என்பதாகும் .
அவர்கள் சொல்லுவது யாவும் ஆண்டவா் சொல்லுவதாகும் .
அதனால் தான் நான் உரைக்கும் வார்த்தை யாவும் நாயகன் தன் வார்த்தை என்றார் வள்ளலார் .
எனவே வள்ளலார் உண்மை உரைக்கின்றேன் இங்கு உவந்து அடைமின் உலகீர் உரை இதனில் சந்தேகித்து உளரி அழியாதீர்
எண்மையினால் எனை நினையீர் எல்லாம் செய் வல்லான்
என்னுள் அமர்ந்து இசைக்கின்றான் இது கேண்மின் நீவீர்
தண்மையொடு சுத்த சிவ சன்மார்க்க நெறியிற் சார்ந்து விரைந்து ஏறுமினோ சத்திய வாழ்வு அளிக்கக்
கண்மை தரும் ஒரு பெருஞ் சீர்க் கடவுள் எனப் புகலும்
கருணை நிதி வருகின்ற தருணம் இது தானே :
என்ற பாடல் வாயிலாக தெளிவாக விளக்கம் தந்து உள்ளார் .
உலகில் கடவுள் படைத்த எல்லா உயிர்களும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் எனபதே ஆண்டவரின் விருப்பமாகும்
அவற்றை நிறைவேற்றவே வள்ளலாரை இவ் உலகிற்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அனுப்பி வைத்தள்ளார் .
அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு