வெள்ளி, 10 ஜூன், 2016

முத்தி என்பது என்ன ? சித்தி என்பது என்ன ?

முத்தி என்பது என்ன ?
சித்தி என்பது என்ன ?

பக்தியினால் கிடைப்பது முத்தி ✿
தயவினால் கிடைப்பது சித்தி ✿
மாயையால் கொடுப்பது முத்தி❀
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் கொடுப்பது சித்தி 
முத்தி அடைந்தவர்களுக்கு மீண்டும் பிறப்பு உண்டு 
சித்தி அடைநதவர்களுக்கு மீண்டும் பிறப்பு இல்லை !
முத்தி என்பது முன்னுறும் சாதனம் !
சித்தி என்பது நிலை சேர்ந்த அனுபவம் !
முத்தி உயிர் அனுபவம் !
சித்தி ஆன்ம அனுபவம் !
தவத்தால் கிடைப்பது முத்தி !
ஞானத்தால் கிடைப்பது சித்தி!!
சமாதி நிலை முத்தி !
சாகாத நிலை சித்தி !
சாகும் கல்வி முத்தி !
சாகாத கல்வி சித்தி !
சாதனம் முத்தி!
அனுபவம் சித்தி !
புத்தியால் அறிவது முத்தி !
அறிவால் அறிவது சித்தி !
அழியும் உடம்பு முத்தி !
அழியா உடம்பு சித்தி !
சுத்த தேகம் முத்தி !
ஞான தேகம் சித்தி !
சித்தி பெறுவதற்கு வள்ளலார் பதிவு செய்து உள்ள பாடல் !
நான் உரைக்கும் வார்த்தை எல்லாம் நாயகன் தன் வார்த்தை
நம்புமினோ நமரங்காள் நல்ல தருணம் இதுவே
வான் உரைத்த மணிமன்றில் நடம் புரியும் எம் பெருமான்
வரவு எதிர் கொண்டு அவன் அருளால் வரங்கள் எலாம் பெறவே
தேன் உரைக்கும் உளம் இனிக்க எழுகின்றேன் நீவீர்
தெரிந்து அடைந்து என்னுடன் எழுமின் சித்தி பெறலாகும்
ஏன் உரைத்தேன் இரக்கத்தால் எடுத்து உரைத்தேன்
யான் அடையும் சுகத்தினை நீர் தான் அடைதல் குறித்தே !
அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு