வெள்ளி, 10 ஜூன், 2016

சாதியை எப்படி ஒழிக்க முடியும் ?

சாதியை எப்படி ஒழிக்க முடியும் ?

சாதியை சட்டத்தைக் கொண்டு ஒழிக்க முடியாது
சட்டத்தை கொண்டு வருபவர்கள் எதாவது சாதியை சமயத்தை மதத்தை சார்ந்தவர்களாகவே இருப்பார்கள்
சாதியும் மதமும் சமயமும் பொய் என்றார் வள்ளலார்
அவை பொய் என்பதை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும் .
அவற்றை புரிய வைக்க சுத்த சன்மார்க்கத்தைக் சார்ந்தவர்களால் மட்டுமே முடியும் .
ஆனால் இப்போது சுத்த சன்மார்க்கம் என்று பேசிக்கொண்டு இருப்பவர்கள் எதாவது ஒரு சாதி சமய மதத்தை சார்ந்தவர்களாகவே இருக்கின்றார்கள்
என்ன செய்வது சன்மார்க்கிகளே திருந்தவில்லை மக்களை எப்படி திருத்த முடியும் .
சாதியை ஒழிக்க ஒரே வழி கலப்பு திருமணம் ,காதல் திருமணம் செய்து கொண்டால் மட்டுமே சாதியை ஒழிக்க முடியும் .
மேலும் வள்ளலார் கொள்கைகளை ஆணித்தரமாக அழுத்தமாக மக்களுக்கு போதித்து உண்மையை உணர வைக்க வேண்டும்
சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே
சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே
ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர்
அலைந்து அலைந்து வீணே நீர் அழிதல் அழகலவே
நீதியிலே சன்மார்க்க நிலை தனிலே நிறுத்த
நிறுத்தமிடும் தனித் தலைவர் ஒருத்தர் அவர் தாமே
வீதியிலே அருட் சோதி விளையாடல் புரிய
மேவுகின்ற தருணம் இது கூவுகின்றேன் உமையே !
என்று வள்ளலார் தெளிவாக விளக்கம் தந்து உள்ளார்
அவற்றை சிறமேற்க் கொண்டு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் சுத்த சன்மார்க்க ஒழுக்க நெறியை மக்கள் உள்ளங்களிலே விதைக்க வேண்டும் .
சுத்த சன்மார்க்க பயிர் உலகம் எல்லாம் வளர வேண்டும்
கதைகளை சொல்லாமல் உண்மையான கருத்துக்களை சொல்லுங்கள்
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் .
அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல் .
✿✿✿✿✿✿✿✿✿✿✿

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு