வெள்ளி, 10 ஜூன், 2016

மனிதனைப் பிடித்து இருக்கின்ற பேய்கள் !

மனிதனைப் பிடித்து இருக்கின்ற பேய்கள் !

மனிதன் பிறந்ததில் இருந்து அவனைப் பிடித்துக் கொண்டு இருக்கும் பேய்கள் பதிமூன்று !

 1,நான் என்கின்ற ஆணவப்பேய் !

2,எனது  என்கின்ற இராட்தப் பேய் !

3,மாயை என்கின்ற வஞ்சகப் பேய் !

4,பெண்ணாசை என்கின்ற வஞ்சகப் பேய் !

5,மண்ணாசை என்கின்ற மானிடப் பேய் !

6,பொன்னாசை என்கின்ற பொல்லாப் பேய் !

7,குரோதம் என்கின்ற  கொள்ளிவாய்ப் பேய் !

8,உலோபம் என்கின்ற  உதவாப் பேய் !

9,மோகம் என்கின்ற மூடப் பேய் !

10,மதம் என்கின்ற வலக்காரப் பேய் !

11,சமயம் என்கின்ற சாகசப் பேய் !

12,ஜாதி என்கின்ற சதிக்காரப் பேய் !

13,ஆச்சர்யம் என்கின்ற மலட்டுப் பேய் !

மேலே கண்ட பதிமூன்று பேய்களும் மனப் பேயோடு கூடி இரவும் பகலும் ,ஆட்ட  ஆடி ஆடி இளைக்கின்ற எங்களைக் காத்தருளத் திரு உள்ளம் இரங்கித் உங்கள் தரிசனம் அருளி ,துன்பத்தை நீக்கி இன்பத்தை அளித்து காத்து அருள வேண்டும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே !

எனக்கு தந்தையாக இருந்து ,எனக்குத் தாயாக இருந்து,எனக்குக் குருவாக இருந்து,எனக்குத் நல்ல தெய்வமாக இருந்து ,எனக்கு குல தெய்வமாக இருந்து ,என்னுடிய உயிர்த் துணையாக இருந்து ,என்னுடைய அறிவுக்கு அறிவாக இருந்து,என்னை இயக்கிக் கொண்டு இருக்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே !

வேதங்களும் அறியாது !

உங்களின் திருவடிப் புகழை வேதங்களும் ஆகமங்களும் ,புராணங்களும்,இதிகாசங்களும் ஆறு அந்தங்களும் அறியாமல் விழித்துக் கொண்டு தேடித் தேடி இளைக்கின்றன என்ற உண்மையை,, ''வள்ளல் பெருமான்'' அனுபவித்து எழுதி வைத்துள்ள ''திரு அருட்பாவின்'' வாயிலாக அறிந்து கொண்டோம் .


ஆதலால் சர்வ வல்லபராகிய தனித் தலைமைக் கடவுளே !

எங்களைப் பிடித்து கொண்டு இருக்கும் பேய்களை எங்களை விட்டு விலகும் படி அருள் பாலிக்க வேண்டும் .

தாங்கள் எங்கள் ஆன்மாவில் அமர்ந்து அருளி அற்புதத் திருவருள் விளக்கத்தால் எங்களையும் ,இவ்வுலகில் இத்தேகத்தைப் பெற்ற மற்றவர்களையும் உண்மை அடியார்களாக்கி ,உண்மை அறிவை விளக்கி ,உண்மை இன்பத்தை அளித்துச் சமரச சுத்த சன்மார்க்க நிலையில் வைத்து வைத்துச் சத்திய வாழ்வை அடைவித்து ,நித்தியர்களாக்கி,வாழ்வித்தல் வேண்டும்.

எல்லாம் உடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே !

\இது தொடங்கி எக்காலத்தும்,சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடைகளாகிய சமயங்கள் .மதங்கள் ,மார்க்கங்கள்,என்பவற்றின் ஆச்சார சங்கற்ப விகற்பங்களும்,வருணம் ,ஆசிரமம்,முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும்,எங்கள் மனதில் பற்றாத வண்ணம் அருள் செய்தல் வேண்டும்.

சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய ஆன்ம நேய ஒருமைப் பாட்டு உரிமை ,எங்களுக்குள்,எக்காலத்தும்,எவ்விடத்தும்,எவ்விதத்தும்,எவ்வளவும் ,விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்து அருளல் வேண்டும்.

எல்லாம் ஆகிய தனிப்பெரும் தலைமை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே !

தேவரீர் திருவருட் பெருங் கருணைக்கு வந்தனம் வந்தனம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

சுத்த சன்மார்க்கச் சுகநிலைப் பெருக !
எல்லோரும் உத்தமன் ஆகுக ஓங்குக !

போற்றி நின் பேரருள் போற்றி நின் பெருஞ் சீர் !
ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ் ஜோதி !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் ,
9865939896 ..


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு