வெள்ளி, 10 ஜூன், 2016

குருடும் குருடும் !

குருடும் குருடும் ! 


ஒரு ஊரில் ஒரு குருடன் இருந்தான் அவன் ஒரு வழியில் சென்று கொண்டு இருந்தான் .
அவன் செல்லும் வழியில் வழி தெரியாமல் வேறு ஒரு குருடன் இருந்தான் அந்த வழியே செல்லும் குருடனைப் பார்த்து
அய்யா நான் சொர்க்கத்திற்கு போக வேண்டும் அதற்கு வழி காட்ட முடியுமா என்றான் .
நானும் அங்குதான் செல்கிறேன் வாருங்கள் போகலாம் என்றான் .
இவனுக்கு அவன் குருடன் என்று தெரியாது .அவனுக்கு இவன் குருடன் என்று தெரியாது
கண் தெரிந்தால் தானே காண முடியும் முன் செல்லும் குருடன் சப்தத்தை வைத்ததே பின் செல்லும் குருடன் சென்று கொண்டு இருந்தான் .
கொஞச தூரம் சென்றதும ஒரு பாழும் கிணறு வந்தது .அதிலே முன்னாடி சென்ற குருடன் விழுந்தான் .
அவன் விழுந்தது தெரியாமல் பின்னாடி சென்ற குருடனும் விழுந்தான்
இருவரும் சத்தம் போட்டு காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று புலம்பிக் கொண்டு இருந்தார்கள் .
அந்த வழியாக வந்த கண் உள்ளவன் சத்தம் கேட்டு கிணற்றில் பார்த்தான் இரணடு குருடர்களும் உடம்பு முழுவதும் அடிப்பட்டு இரத்தம் கொட்ட கொட்ட துடிதுடித்துக் கொண்டு இருந்தார்கள் .
கண் உள்ளவன் அவர்களை காப்பாற்றி கரைசேர்த்தான
இதைத்தான் குருடும் குருடும் கூத்தாட்டம் ஆடி குழியில் விழுந்த கதையாகும்
உங்கள் கண்களையே உங்களால் பாரக்க முடியாது .முன்னாடி ஒரு கண்ணாடி வைத்து தான் பார்க்க முடியும் .
வள்ளலார் சிறு வயதிலேயே கண்ணாடியில் அனைத்தையும் கண்டவர் .
ஊனக்கண்ணை ஞானக் கண்ணாக மாற்றுவதுதான் சுத்த சன்மார்க்கம்
ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்றுவதுதான் சன்மார்க்கம்
ஊனக் கண்ணைக் கொண்டு தான் ஞானக் கண்ணைக் காண முடியும் .
எதற்காக கண்களை இறைவன் கொடுத்து உள்ளார்
அண்ட கோடிகள் அனைத்தும் காணும் கண்கள் எய்தியே
அறிந்தேன் அங்கைக் கனிபோல் அவற்றின் உள்ளே செய்தியே
பிண்ட கோடி முழுதும் காணப் பெற்று நின்னையே
பேசிப் பேசி வியக்கின்றேன் இப் பிறவி தன்னையே !
ஆதி அந்தமும் இல்லா ஜோதி தன்னையே நினைமின்கள சுகம் பெற விழைவீர்
நீதி கொண்டு உரைத்தேன்
நீவீர் மேல் ஏறும் வீதி மற்றைய வீதிகள் கீழ் செல்லும் வீதி !
அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு