செவ்வாய், 14 ஜூன், 2016

சும்மா இருக்கும் சுகம் !

சும்மா இருக்கும் சுகம் !
இன்றுவரு மோநாளைக் கேவருமோ அல்லதுமற்
றென்றுவரு மோஅறியேன் எங்கோவே - துன்றுமல
வெம்மாயை அற்று வெளிக்குள் வெளிகடந்து
சும்மா இருக்கும் சுகம்.
பூத வெளியை கடந்து ஞான வெளி என்னும் அருள் வெளியை தொடர்பு கொண்டால் பேச்சு இல்லாமல் அதாவது சப்தம் இல்லாமல் சும்மா இருப்பதாகும் .
அதில் உள்ள சுகத்தை அனுபவிப்பதுதான் அருள் சுகம் .
அந்த சுகத்தை சொல்லால் அறிய முடியாது ,சும்மா இருந்தால் தான் அறிய முடியும் .
அதைத்தான் வள்ளலார் சொல்லால் அளப்பது அறிதாம் ஜோதி வரை மீது தூய துரிய அப்பதியில் நேயம் அற ஓது என்றார்
அருட்பெருஞ்ஜோதியை தொடர்பு கொள்ளும் போது பேச்சு அற்று சும்மா இருப்பதையே சுகம் என்கிறார் வள்ளலார்
அதற்கு பெயர் தான் மவுனம்
மவுனம் சாதிப்பது அன்றி வேறு ஒன்றும் கண்டிளேன் என்பார்
மவுனத்தின் சக்தி அளவில் அடங்காதது
அதைத் தான் வெளிக்குள் வெளி கடந்து சும்மா இருக்கும் சுகம் என்பதாகும்
அந்த வெளிக்குப் பெயர் மவுன வெளி என்பாகும்
இன்னும் விரிக்கில் பெருகும் .
ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல் .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு