வியாழன், 2 ஜூன், 2016

நிதி என்பது இரண்டு வகை !

நிதி என்பது இரண்டு வகை !

சங்க நிதி ! பதும நிதி ! என இரண்டு வகை உண்டு .!

அவைகள் குறையும் நிதி ! குறையா நிதி என்று சொல்லப்படும் .

அருள் பெற்றவர்களிடம் உள்ள நிதி குறையாது !
அருள் பெறாதவர்களிடம் உள்ள நிதி குறைந்து விடும்.

வானவர்கள் இடம் இரண்டு நிதியும் உண்டு அதற்கு சங்க நிதி ! பதும நிதி !
என்று இரண்டு நிதிகளும் பெற்று இருப்பார்கள் .அவர்கள் அருளையும் கொடுப்பார்கள் ,பொருளையும் கொடுப்பார்கள் .

அவர்களின் அருள் வல்லமைப் பொறுத்து நடக்கும் .அவர்களிடம் அருள் தீர்ந்து விட்டால் பொருளும் தீர்ந்து விடும் .அதற்குமேல் அவர்களால் எதுவும் கொடுக்க முடியாது .

உலகில் ''வள்ளலார் தனி வல்லபம் பெற்றவர்'' .அவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம்  பூரண  அருள் ஆற்றலைப் பெற்றுக் கொண்டவர் .

எடுத்து எடுத்து உதவினும் என்றும் குறையா
அடுத்து அடுத்து ஓங்கும் மெய் அருளுடைய பொன்னே !

தளர்ந்திடேல் எடுக்கின் வளர்ந்திடுவோம் எனக்
கிளர்ந்திட உரைத்துக் கிடைத்த செம்பொன்னே !

எண்ணிய தோறும் இயற்றுக என்று எனை
எண்ணி என் கரத்தில் அமர்ந்த பைம் பொன்னே !

என்று திருஅருட்பா அகவலில் பதிவு செய்துள்ளார் !

உலகில் எவருக்கும் கிடைக்காத அருள் வல்லபத்தை பூரணமாக கொடுத்து எண்ணிய தோறும் எக்காலத்திலும் என்றும் குறையாத ,அருள் வல்லபத்தையும் பொருள் வல்லபத்தையும் கொடுத்து உள்ளார் ...

மரணத்தை வென்றவர்களுக்கு மட்டுமே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்றும் குறையா நன் நிதியைக் கொடுப்பார் !

அதற்கு மாதிரி  ஒரு நிகழ்ச்சியைப் தருமச்சாலையில் வள்ளலார் செய்து காட்டினார் !  

தம் உள் இருக்கும் பொருள்களைப் பிறர் எவ்வளவு ,எடுத்துக் கொள்ளினும் அவ்வளவையும் மீண்டும் உண்டாக்கிக் கொண்டு எப்பொழுதும் குறையா நிலையில் இருக்கும் .

அம்மாதிரி அய்யா தோற்றுவித்த சத்திய தருமச்சாலையிலும்  ஒரு காலத்தில் தன்னிடத்து சமைத்து வைத்திருந்த உணவை எடுக்க எடுக்கக் குறையாது முன்போல் இருக்கச்செய்தது  எவ்வாறு  எனில் ;--

ஒருநாள் இரவில் உணவு எல்லாம் சமத்தபிறகு உண்ணப் போகின்ற வேளையில் சுமார் நூறு பேர் திடீர் என வந்து  விட்டனர் ..அவர்களைக் கண்டவுடனே  அங்குள்ள அடியவர்கள் சமையல் காரர்கள் எல்லாம் ,''என்ன இது ? இத்துணைப் பேர்கள் வந்து விட்டனரே ! இங்கு உள்ள உணவோ மிகச்சிலர்கே அளிக்கத் தகுந்தது .

மற்றையோருக்குச் சமைத்துப் போடுவது என்றால் இந்த நேரத்தில் அது சாத்தியம் இல்லையே '' என்று  அவர்கள் வருந்துவதை அறிந்த அய்யா அவர்கள் ,அவர்களை நோக்கி  ''பிச்''  ''இல்லை போடுங்கள் '' என்று கூறித் தாமே ,அந்த நூறு பேரையும் அமரவைத்து தாமே உணவு பரிமாற தொடங்கினார்கள்  அனைவரும் பசியாற வயிறு நிறைய உண்டார்கள் .

அங்கு அட்டியில் இருந்த உணவு அனைவருக்கும் பரிமாறப்பட்டும் ,அளவு குறையாமல் அப்படியே இருந்தது .

இதுதான் அருளாளர்களின் என்றும் குறைய நன் நிதி என்பதாகும்.

இல்லாமை எனக்கு இல்லை எல்லோருக்கும் தருவேன் ,என்னுடைய பெருஞ் செல்வம் என்புகல்வேன் என்று வள்ளல்பெருமான் சொல்லுவார் .

எனவே அன்பு ஆன்மநேய உடன் பிறப்புகளே ,அழியாத செலவத்தை நாமும் பெறலாம் .பெற முடியும் .வாரி வழங்க வள்ளல் இருக்க வாட்டம் ஏன் ?

வாருங்கள் சுத்த சன்மார்க்கத்தை கடைபிடித்து  சுக நிலை பெறுவோம் ,உத்தமர்களாக மாறுவோம் ஓங்கி உலகம் எல்லாம் போற்றுவோம் .

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ பாடுபடுவோம் !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .
9865939896,
  

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு