புதன், 2 டிசம்பர், 2015

சன்மார்க்க அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் !

சன்மார்க்க அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் !

தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு .சன்மார்க்க சங்கங்களும்,சன்மார்க்க அன்பர்களும் .இந்த நேரத்தில் நேரில் சென்று பசியால் வாடும் மக்களுக்கு உணவு  வழங்க வேண்டும்..

இந்த நேரத்தில் அவர்களுக்கு மிகவும் முக்கியமானது ,அவசரமானது உணவுதான் .உயிர்களைக் காப்பாற்ற உணவுதான் முதல் உதவி என்பதை புரிந்து கொண்டு செயல்படவேண்டும்.

மழை வெள்ளத்தால் சிக்கித் தவிக்கும் மக்களை உடனடியாக உடல் உழைப்பால் காப்பாற்ற வேண்டும்.

எந்த எந்த வகையில் நம்மால் முடியுமோ அந்த உதவிகளை தயக்கம் இல்லாமல் உதவிகளை செய்ய வேண்டும்.

நமக்கு வள்ளல்பெருமான் போதித்தது ''எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் ''

உயிர்களின் துன்பங்களைப் பார்த்துக் கொண்டு இராமல் உடனடியாக செயல்களில் ஈடுபடுங்கள்.

அரசு செய்யும்,மற்றவர்கள் செய்வார்கள்  என்று நினைத்துக் கொண்டு சும்மா இருந்துவிடக் கூடாது .

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை நினைத்துக் கொண்டு நல்லதை செய்யுங்கள் நலம் பெறலாம் .

புறப்படுங்கள் செயல்படுங்கள் .

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு