புதன், 2 டிசம்பர், 2015

இயற்கை என்பது இறைவன் கட்டுப்பாட்டில் உள்ளது !

இயற்கை என்பது இறைவன் கட்டுப்பாட்டில் உள்ளது !

இயற்கையை நிறுத்தவோ,வரவேற்கவோ சாதாரண மனிதரால் முடியாது .

மழை வேண்டும் என்று வேண்டுவதாலோ .மழை வேண்டாம் என்று வேண்டுவதாலோ எந்த பயனும் இல்லை.

எல்லாம் வல்ல பரம் பொருளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கு எல்லாம் தெரியும் .

இறைவன் வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன் ..இறைவன் படைத்த உயிர்களுக்கு எது வேண்டும் எது வேண்டாம் என்பது இறைவனுக்கேத் தெரியும்.

இறைவன் வகுத்த வழியில் மனிதன் வாழ்ந்தால் எந்த துன்பமும் துயரமும்,அச்சமும்,பயமும்,வராது.

தமிழகத்தில் இப்போது வந்துள்ள மழையின் கூற்று மக்களை நல்வழிப் படுத்த வந்துள்ளது.இனிமேலாவது அரசாங்கமும் மக்களும் எந்த இடத்தில் மனிதன் வாழ்ந்தால் இயறைகையின் பிடியில் இருந்து தப்பிக்கலாம்,காப்பாற்றிக் கொள்ளலாம்  என்பதை உணர்ந்து வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

மழை இல்லை என்றால் எந்த உயிர் இனங்களும் வாழ முடியாது.இப்போது வந்து மழையானது எல்லா உயிர்களுக்கும் பொதுவானது..

நீர் நிலைகள் இருக்க வேண்டிய இடத்தில் மனிதன் வீடு கட்டி வாழ்வதால் ,நீர் செல்ல வழி இல்லாமலும்,நீல்நிலைகளில் நீர் தங்குவதற்கு இடம் இல்லாமலும் எதிர் நோக்கி செல்லுகின்றது அதனால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி தவிக்கின்றார்கள் .

இனி வருங்காலத்தில் அரசாங்கமும்,மக்களும் தெளிவான வாழ்க்கை வாழ்வதற்கு கற்றுக் கொள்ளவேண்டும்.

அதிகமான மழை வந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் உயிர்களுக்கு வேண்டியது போக கடலில் கலக்க வேண்டும்..கடலுக்கு தண்ணீர் செல்லும் வழியைத் தடுத்து விட்டதால் மக்களைப் பாதிக்கின்றது.

இறைவன் பஞ்ச பூதங்களைப் படைத்துள்ளார் .அதை எதிர்த்து வாழும் வாழ்க்கையை கற்று வாழ்ந்தவர் வள்ளல்பெருமான் .அதனுடன் நட்பாக வாழ்ந்தவர் வள்ளல்பெருமான்.

எல்லா மனிதர்களும் அப்படி வாழும் சக்தியை ,ஆற்றலை இறைவன் மனிதர்களுக்கு கொடுத்து உள்ளார் .அவற்றைப் பயன் படுத்த தெரியாமல் அறியாமையால் மனிதன் வாழ்ந்து அழிந்து கொண்டுள்ளான்.

இயற்கை சீற்றங்களால் சிக்கி அழியாமல் இருக்கத்தான் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை தோற்றுவித்துள்ளார்.அவருடைய கொள்கையை கடைபிடித்தால் எக்காலத்தும் துன்பம் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழலாம் .

மக்களை அழைக்கின்றார் வள்ளலார் !

இன்புறலாம் எவ்வுலகும் ஏத்திட வாழ்ந்திடலாம்
எல்லாஞ் செய் வல்ல சித்தி இறைமையும் பெற்றிடலாம்
அன்புடையீர் வம்மின் இங்கே சமரச சன்மார்க்கம்
அடைந்திடுமின் அகவடிவு இங்கு அனக வடிவமாகிப்
பொன்புடை நன்கு ஒளிர் ஒளியே புத்தமுதே ஞான
பூரணமே ஆரணத்தின் பொருண் முடிமேல் பொருளே
வன்புடையார் பெறற் கரிதாம் மணியே சிற்சபையின்
மாமருந்தே என்று உரைமின் தீமை எலாம் தவிர்ந்தே !

மனிதர்கள் இன்பமுற்று வாழ்வதற்கு இறைவன் எப்போதும் நமக்கு துணையாக இருந்து காப்பாற்றுவார்.

எனவே சுத்த சன்மார்க்க நெறியைக் கடைபிடித்து துன்பம் இல்லாமல் வாழலாம் .

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு