திங்கள், 7 டிசம்பர், 2015

பசிப் பிணியைப் போக்கும் சன்மார்க்க அன்பர்கள் !


பசிப் பிணியைப் போக்கும் சன்மார்க்க அன்பர்கள் !

தமிழகம் மழை வெள்ளத்தால் பாதித்து பெரும் சேதம் அடைந்துள்ளது .
கள் நெஞ்சையும் கரைய வைக்கும் காட்சிகள் .ஏழை பணக்காரன் என்ற பேதம் இல்லாமல் எல்லோரும் ஒரே நேரத்தில் பசிக்காக கை ஏந்தி துடிக்கும் காட்சிகள்

வீடு வாசல்,சொத்து ,சுகம்,பொருள்,வசதி,வாய்ப்புக்கள், அனைத்தும் இழந்து உயிர் பிழைத்தால் போதும் என்று காப்பாற்றுங்கள்,  காப்பாற்றுங்கள்,  என்று கூவி ,கூவி,அழைக்கும் கூக் குரல்கள்,எங்கு பார்த்தாலும் தண்ணீரில் தத்தளிக்கும் மக்களின் அபயக் குரல்,

கண்ணீர் தண்ணீரில் கலக்கும் காட்சிகள் .

தண்ணீரில் தத்தளிக்கும் உடல்கள் .

மனிதன் வாழ்க்கை இப்படியும் உண்டா ? ,

இப்படி வாழ் வதற்காகவா மனிதனை இறைவன் படைத்தார் ?
இனி மேலாவது சிந்தித்து செயலபடுங்கள். .

சாதி,சமய ,மத பேதம் இல்லாம் எல்லோரும் பார்த்து கண்ணீர் வடித்தக் காட்சிகள்.ஒவ்வொருவரும் உயிருக்காக போராடும் துடிப்புக்கள்,
இதுபோல் யாருக்குமே வந்துவிடக் கூடாது என்று இறைவனை வேண்டும் வேண்டுதல்கள்,எந்தக் கடவுள் வந்துதான் இவர்களைக் காப்பாற்றுவார்கள்,

இப்போது எந்தக் கடவுளும் வரமாட்டார் .அவர்கள் இருந்தால் தானே வருவைதற்கு,,,,

மனிதன்தான் கடவுள் என்பதை புரியாமல் இருந்து விட்டார்கள்,மனித ரூபத்தில் தான் கடவுள் உள்ளார் என்பதை மக்கள் மறந்து விட்டனர்.
சன்மார்க்க அன்பர்கள் !

விளம்பரம் இல்லாமல் ,வேடிக்கை பார்த்துக் கொண்டு இராமல் ,இந்த நேரத்தில் .யாரையும் எதிர்ப்பார்க்காமல் .வள்ளலார் கொள்கையைப் பின் பற்றும் சன்மார்க்க அன்பர்கள் .அவர்களால் முடிந்த அளவிற்கும் மேலாக இடைவிடாது மக்களின் பசிப்பிணியைப் போக்கிக் கொண்டு உள்ளார்கள்,பல பொது தொண்டு நிறுவனங்கள்,கருணை உள்ளம் படைத்த அமைப்புகளும்,பொது மக்களும்,இடைவிடாது பணி செய்து கொண்டு உள்ளார்கள், ,

இருப்பினும் தமிழ் நாட்டில் .வெளி மாநிலங்களில் உள்ள சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் மற்றும் ,ஒவ்வொரு ஆன்மநேய உடன் பிறப்புக்களின் உயிரைக் காப்பாற்றிக் கொண்டு இருக்கும்,சன்மார்க்க அன்பர்களின் காலில் விழுந்து வணன்ங்குகிறேன் .

அவர்களுக்கு எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் .அருளைக் கொடுத்து ஆசீர் வாதிப்பார் .

கடவுள் எங்கு உள்ளார் என்பதைக் வள்ளலார் தெரியப் படுத்துகின்றார் ;---
எத்துணையும் பேதம் உறாது எவ்வுயிரும் தம் உயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்து உரிமை உடையவராய் உவக்கின்றார் யாவர் அவர் உளம் தான் சுத்த
சித்துருவாய் எம் பெருமான் நடம் புரியும் இடம் என நான் அறிந்தேன் அந்த
வித்தகர் தம் அடிக்கு ஏவல் புரிந்திட என் சிந்தை மிக விழைந்த தாலோ !...........

எல்லா உயிரிலும் கடவுள் இருக்கின்றார் என்பதை உணர்ந்தவன் எந்த உயிர்களுக்கும் துன்பம் தராமல் வாழ்பவன்,

உயிர்களுக்கு துன்பம் வரும் போது அந்த துன்பத்தை போக்குகின்றவன் தான் கடவுள் என்றும் ,..அவருடைய காலில் விழுந்து நான் வணங்கின்றேன் என்றும் வள்ளலார் மிகத் தெளிவாக மக்களுக்குத் கடவுளின் தன்மையைப் பற்றி போதித்து உள்ளார்.

மனித உருவில்தான் கடவுள் உள்ளார் என்பதை மக்கள் புரிந்து கொண்டு உயிர்களுக்குத் துன்பம் தராமல் வாழ்ந்தால் இந்த நிலைமைகள் எப்போதும் மக்களுக்கு வராது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக.!

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்,
போன் .9865939896,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு