வியாழன், 3 டிசம்பர், 2015

வள்ளலார் சொன்னார்! யாரும் கேட்கவில்லை !

வள்ளலார் சொன்னார்! யாரும் கேட்கவில்லை !

மனிதன் அறிவு உள்ளவன் .மனிதனுக்கு மட்டும் இறைவன் அறிவைக் கொடுத்துள்ளார் .

மக்களை ஆளும் ஆட்சியாளர்களுக்கும் எப்படி நாட்டை ஆட்சி செய்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற வழி முறைகளைக் கற்றுத் தந்துள்ளார் .

ஆட்சியாளர்களும் கேட்கவில்லை .மக்களும் கேட்க வில்லை .

மக்கள் துன்பம் வரும்போது அழுது ,கண்ணீர் சிந்தி கலங்கிக் கொண்டு உள்ளார்கள்,வாழும் வழி தெரியாமல் புலம்பிக் கொண்டு உள்ளார்கள்.

தண்ணீரைக் கண்டு மக்கள் கண்ணீர் வடித்துக் கொண்டு உள்ளார்கள்.

தண்ணீர், தான் செல்லும் வழியில்லாமல் தவித்துக் கொண்டு உள்ளது .தண்ணீரைத் தடுத்து நிறுத்தியதால் தண்ணீர் தான் செல்லும் வழி தெரியாமல் கண்ட இடம் எல்லாம் சென்று கொண்டு உள்ளது.

தண்ணீர் செல்வதற்கு தடை இல்லாமல் தண்ணீருக்கு வழி விட்டு இருக்க வேண்டும்.

அதன் வழியை அடைத்ததினால்  அதன் வேலையைக் காட்டுகின்றது.இப்போது மக்கள் கண்ணீர் வடிக்க வேண்டி உள்ளது.

தண்ணீரை அடைத்ததினால் கண்ணில் உள்ள தண்ணீர் வழிகின்றது .தண்ணீரின் அருமை கண்ணீருக்குத் தான் தெரியும்.

நீங்கள் அழவில்லை தண்ணீரைக் கண்டு தண்ணீர்தான் வேதனைப் படுகின்றது.

பஞ்ச பூதங்களின் பிடியில் இருந்து தப்பித்து வாழும் வழியை வள்ளல்பெருமான் தெளிவாக விளக்கி உள்ளார் .யாரும் கேட்டபாடு இல்லை.

தமிழகத்தில் தோன்றி வாழ்ந்து உலக மக்களுக்கே வாழும் வழியை காட்டி வாழ்ந்தும்  உள்ளார் .

தங்களுக்கு துன்பம் வராமல் காத்துக் கொள்வது எப்படி என்பதை வள்ளல்பெருமான் மிகத் தெளிவாக சொல்லி உள்ளார் .

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் ;--

ஆற்று வெள்ளம் வருவது முன் அணை போட அறியீர்
அகங்காரப் பேய் பிடித்தீர் ஆடுதற்கே அறியீர்
கூற்று வருங்கால் அதனுக்கு எது புரிவீர் அய்யோ
கூற்று தைத்த சேவடியைப் போற்றி விரும்பீரே
வெற்று உரைத்து வினை பெருக்கி மெலிகின்ற உலகீர்
வீண் உலகக் கொடு வழக்கை விட்டு விட்டு வம்மீன்
சாற்றுவக்க எனது தனித் தந்தை வருகின்ற
தருணம் இது சத்தியஞ் சிற் சத்தியைச் சார்வற்கே !

உலக உயிர்களைக் காப்பாற்ற இறைவனால் உலகுக்கு, மழையை அனுப்பிக் கொண்டே உள்ளார் .மழை நீர் தங்குவதற்கும்,குளம் குட்டைகளையும், ஏரிகள் வாய்க்கால் ,ஆறுகளையும்,கடல்களையும் படைத்துள்ளார் .

மழை பெய்து தண்ணீர் தேங்குவதற்கு அணையைக் கட்டுவதற்கு மறந்து விட்டீர்கள் .குளம் குட்டைகளை ஆழப்படுத்த தவறி விட்டீர்கள்.ஆறுகளை தடுத்து விட்டீர்கள் .

மேலும் தண்ணீர் நிற்கும் இடம் எல்லாம் .வீடுகளும் ,அடுக்குமாடி கட்டிடங்களும் ,தொழிற் சாலைகளும் ,கட்டி விட்டீர்கள்,பாலங்களும் கட்டி விட்டீர்கள், ரோடுகளும் போட்டு விட்டீர்கள் , .தண்ணீர் எங்குதான் செல்லும் .

தண்ணீர் வாழும் இடத்தில் நீங்கள் வாழ்ந்தால் கண்ணீர் வடிக்க வேண்டும் என்பதை மறந்து விட்டீர்கள் .இப்போது கண்ணீர் வடிக்கின்றீர்கள்.

மக்களுக்கு வழி காட்டவேண்டிய ஆட்சியாளர்களே அளவில்லாத தவறுகள் செய்து அறிவு இல்லாமல் அறிவைத் தொலைத்துவிட்டு வேதனைப் படுகின்றார்கள் .
என்ன வளம் இல்லை இந்த தமிழ் நாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளி நாட்டில் என்பதுபோல் ,இப்போது தமிழகம் அனைவரிடமும் கை ஏந்த நிலை ஏற்பட்டு விட்டது.

சிறிய தவறு செய்வதால் பெரிய நட்டம்,பெரும் இழப்பு  உண்டாகிவிட்டது.

இனிமேலாவது ஆற்று வெள்ளம் வருவதன் முன் அணையைக் கட்டுங்கள் என்கின்றார் வள்ளலார் .

ஒவ்வொரு மனிதனுக்கும் மிகவும் முக்கியமானது இறைவன் கொடுத்த உயிர் .

உயிரைக் காப்பாற்றுவான் மனிதன் என்று உயிரை இறைவன் கொடுத்துள்ளான் .நீங்கள் உயிரைக் காப்பாற்ற தவறிவிட்டால் இறைவனே உயிரை எடுத்துக் கொள்வார் என்பதை ஏன் மறந்து விட்டீர் எனக் கேட்கின்றார் வள்ளல்பெருமான்

கூறறுவன் என்னும் எமன் வந்து எந்த நேரத்திலும் உங்கள் உயிரை எடுத்துக் கொண்டு சென்று விடுவான் .எனவே நான் சொலவதை தயவு செய்து கேளுங்கள் என்று வள்ளல்பெருமான் அழைக்கின்றார்.

நான் சொல்லுவதைக் கேட்டால் உங்கள் உயிரைக்  காப்பாற்ற என்னால் முடியும் .என்கின்றார்.

இறைவன் நான் சொல்லுவதைக் கேட்கின்றார் ஆனால் நீங்கள் நான் சொல்லுவதைக் கேட்காமல் இருக்கின்றீர் .

இனிமேலாவது நான் சொல்லுவதைக் கேளுங்கள்.உங்களைக் காப்பாற்ற என்னால் முடியும் என்கின்றார் நமது அருட்பிரகாச வள்ளல்பெருமான்.

உலகைக்  காப்பாற்றும் உரிமையை என்னிடம் இறைவன் தந்து உள்ளார் .

நீங்கள் நான் சொல்லுவதைக் கேட்டால் மட்டுமே உங்களைக் காப்பாற்ற முடியும்.மேல் கொண்டு உங்கள் விருப்பம்,நீங்கள் தான் முடிவு எடுக்க வேண்டும் ,உங்களுக்கு அறிவு உள்ளது அதைப் பயன் படுத்துங்கள்  என்கின்றார் வள்ளல்பெருமான் .

அறிவை அறிவாலே அறிகின்ற போது அனுபவம் தோன்றும் .என்கின்றார் .

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு ....வள்ளுவர் .

எனவே வள்ளலார் சொல்லிய கொள்கையைப் பின் பற்றுங்கள் நலமுடன் வாழ்வீர்கள் .

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .
போன் ..9865939896.  

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு