சனி, 1 ஆகஸ்ட், 2015

மதுவை ஒழிக்க வேண்டும் .!

மதுவை ஒழிக்க வேண்டும் .!

பஞ்ச மா பாதகங்களில் ஒன்று மதுவாகும்.

கொலை ,கள். ( மது ).காமம்,களவு ,பொய்....இந்த ஐந்தும் மனிதனை சீக்கிரம் அழிப்பதாகும்.

இதிலே முக்கியமான முதல் குற்றம் கொலை யாகும் ,
இரண்டாவது குற்றம் மது குடிப்பதாகும்
மூன்றாவது குற்றம் காமம் கொள்வதாகும்.
நான்காவது குற்றம் களவு என்னும் திருட்டுத் தொழிலாகும்.
ஐந்தாவது குற்றம் பொய் பேசுவதாகும்.
இந்த ஐந்தும் மனித குலத்தை அழித்துக் கொண்டு உள்ளதாகும்.
இந்த குற்றங்களில் ஒன்றைப் பற்றினாலும் மற்ற குற்றங்கள் ஒன்று சேர்ந்து விடும்.
கள் உண்டவனுக்கு காமம் உண்டாகாமல் இருக்காது,..பின் கொலையும் செய்யத் துணிவான்.பின் திருட்டு தொழிலையும் செய்வான் .பின் பொய் பேசவும் அஞ்ச மாட்டான் .
ஒவ்வொரு குடும்பமும் குடியால் அழிந்து கொண்டு உள்ளது.மதுவை ஒழித்தால் மற்றவை யாவும் ஒழிந்துவிடும்.

குடி ஒழிந்தால் கொலை ஒழியும்.கொலை ஒழிந்தால் காமம் ஒழியும்,காமம் ஒழிந்தால் களவு ஒழியும்,களவு ஒழிந்தால் பொய் ஒழியும் .

மனிதன் மனிதனாக வாழ வேண்டுமானால் ஐந்து பஞ்ச மா பாதகங்கள் அனைத்தும் ஒழிக்க வேண்டும் .

மேலே கண்ட ஐந்து குற்றங்களை செய்யாமல் வாழ்பவனே முழுமையான மனிதன்..

மேலே கண்ட குற்றங்களை செய்பவர்கள் எந்த இனத்தை
சார்ந்தவர்கள் ? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் .

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு