புதன், 5 ஆகஸ்ட், 2015

திருடராய் பார்த்து திருந்தா விட்டால்

திருடராய் பார்த்து திருந்தா விட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது .!

குடியும் ! கொலையும்.!

ஒரு வீடும்,ஊரும்,  நாடும் நலமுடன்.மகிழ்ச்சியுடன்  இருக்க வேண்டுமானால் குடியும் ,கொலையும் இருக்க கூடாது.

அரசியல் வாதிகள் நூற்றுக்கு 90,,சதவிகிதம் பேர் குடிப்பவர்களாகவும் ,கொலையும் புலையும் உடையவர்களாக இருக்கின்றார்கள்

கொலைக்காரர் களாகவும்,புலால் உண்பவர்களாகவும்,
குடிக் காரர்களாகவும்  இருக்கின்றார்கள்.

புலால் உண்ணாமல் இருந்தாலே குடி தானே நின்றுவிடும்.அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழலாம்.

ஒவொரு குடும்பமும் ஏதாவது ஒரு அரசியல் கட்சியில் தொடர்பு உடையவர்களாக இருக்கின்றார்கள்.அவர்கள் அவர்களுடைய குடும்பத்தில் குடிக்காமல் இருக்கவும் புலால் உண்ணாமல் இருக்கும்  பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.

குடியினால் வரும் தீமைகளையும் கொலையினால் வரும் தீமைகளையும்,புலால் உண்பதால் வரும் தீமைகளையும்  அவர்களுடைய மக்களுக்கு போதிக்க வேண்டும்.

பஞ்சமா பாதங்களிலே முதன்மையானது குடியும்,கொலையும்.( புலால் உண்பது )

அரசியல் வாதிகள் பொதுமக்களையும்,
மாணவர்களையும் தூண்டிவிட்டு அரசியல்
ஆதாயம் தேடுவது வேதனைக்குறியது.

அதே நேரத்தில் படிக்க வேண்டிய மாணவர்கள் படிக்க வேண்டிய காலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு அவர்களுடைய எதிர்கால வாழ்க்கையை அழித்துக் கொள்கிறார்கள்..

மாணவர்களை கனவு காணுங்கள் என்றார் ''அப்துல்கலாம் அவர்கள்''  ....போராட்டம் நடத்தவா ? கனவு காணுங்கள் என்று சொன்னார் .

அவர் குடிக்காமலும் .புலால் உண்ணாமலும் இருந்தாரே ! அதனால்தான் அவரால் உயர்ந்த நிலைக்கு செல்ல முடிந்தது.அவர் கருத்துக்களைப் பின் பற்றுபவர்கள் ,மாணவர்கள், எப்படி ஒழுக்கமுடன் வாழ வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

போராட்டம் இல்லாமல் சாத்வீக முறையில் குடியினால் வரும் தீமைகளைப் பற்றி அறிவில்லாத  மக்களுக்கு அறிவுரையை போதிக்க வேண்டும்.

நமது அரசாங்கம் பள்ளி கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு குடியினால், கொலையினால் வரும் தீமைகளைப் பற்றி பாட நூல்களில் வெளியிட வேண்டும்.

மேலும் தனிமனித ஒழுக்கத்தைப் போதிக்க வேண்டும்.

வன்முறை இல்லாமல் ,பொது சொத்துகளுக்கு சேதம் இல்லாமல் ''காந்தீய வழியில்'' அகிம்சை வழியில் அறப்போராட்டமாக நடத்தினால் மக்கள் திருந்துவார்கள் .
இந்த போராட்டம் நம்முடைய நாட்டிற்கு நல்லதல்ல என நினைக்கின்றேன் .

தனிமனிதன் திருந்தினால் நாடே திருந்தும் .

குடியை நிறுத்துங்கள் மதுபானக் கடைகளே இருக்காது.

கடையை அடைப்பதால் பயன் இல்லை.உங்கள மனதை அடக்குங்கள்..

கடையை அடைத்தால் திருட்டு கடைகள் திறப்பார்கள் மேலும் .கள்ளச்சாராயம்,விஷச்சாராயம்,மேலும் கலப்பட மதுபானங்கள். குடித்து மக்கள் மேலும் அழிந்து கொண்டுதான் இருப்பார்கள்..

குடிப்பதை நிறுத்துங்கள் குடும்பங்கள் மகிழும்.!

கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக !
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

என்று வள்ளல்பெருமான் மக்களுக்கு போதித்து உள்ளார் கொல்லாமையைக் கடைபிடித்தாலே எல்லா உயிர்களும் இன்புற்று வாழ முடியும்.

பொய் விளக்கப் புகுகின்றீர் போதுக் கழிக்கின்றீர்
புலை கொலைகள் புரிகின்றீர் கலகல என்கின்றீர்
கை விளக்குப் பிடித்து ஒரு பாழ் கிணற்றில் விழுகின்றீர்
களியர் எனக் களிக்கின்றீர் கருத்து இருந்தும் கருதீர் .

என்று வள்ளல்பெருமான் தெளிவுப் படுத்தி உள்ளார் .

உயர்ந்த அறிவுள்ள மனிதனாக பிறந்து, தாழ்ந்த அறிவுள்ள மனிதனாக வாழ்ந்து கொண்டு உள்ளீர்கள் .

சிந்தியுங்கள் செயல்படுங்கள்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு