திங்கள், 3 ஆகஸ்ட், 2015

மரணம் வராமல் வாழ்வதே மனிதன் வாழ்க்கை !

மரணம் வராமல் வாழ்வதே மனிதன் வாழ்க்கை  !

இந்த உலகம் என்னில் அடங்கா ஆண்டுகள் தன்னைத்தானே இயங்கிக் கொண்டு உள்ளது..

அதன் உள்ளே ஆன்மாவை அனுப்பி .உயிர். உடல் கொடுத்து ஆன்மா வாழ்வதற்கு வழிக் காட்டி கொண்டே உள்ளது .

ஒவ்வொரு கால கட்டத்திலும் பல மகா ஆத்மாக்களை இறை அருளால் இறை ஆற்றலால் தேர்வு செய்து அனுப்பிக் கொண்டே இருக்கும்..

அழியும் அணுக்களை வைத்து ஆராய்ச்சி செய்து உள்ளார்கள்.

அழிக்காமல் இருக்கும் அணுக்களைப் பற்றி  ஆராய்ச்சி செய்ய முடியவில்லை.

அவை கண்களுக்கோ கருவிகளுக்கு சிக்காது..அருள் பெற்றால் மட்டுமே அருளுக்கு மட்டுமே சிக்கும்.

அந்த அருளைப் பெற்றவர்களுக்கு மரணம் வராது .

நல்ல ஆன்மாக்களை தேர்வு செய்து மக்களுக்கு காட்டிக் கொண்டே இருக்கும்.

எவ்வளவு பெரிய ஆத்மாக்கள் இந்த உலகை விட்டு பிரிந்தாலும். நாம் வருத்தப்பட வேண்டியதில்லை.

ஏன் என்றால் மறுபடியும் அந்த ஆன்மாக்களுக்கு பிறப்பு உண்டு.

என்ன பிறப்பு ? எங்கு பிறக்கும் ? என்பதை யாராலும் கணிக்க முடியாது.

மேலும் மேலும் நல்ல பக்குவம் உள்ள ஆத்மாக்களை இறை ஆற்றல் படைத்துக் கொண்டே இருக்கும்.

இந்த உலகத்தை எக்காலத்திலும் மனித சக்தியால் காப்பாற்றவும் முடியாது .அழிக்கவும் முடியாது.

நாம் ஒழுக்கம்  உள்ள மனிதர்களாக வாழ்வதை மட்டுமே  இறை அருள் இறை ஆற்றல் ஏற்றுக் கொள்கிறது .

ஒழுக்கம் உள்ள ஆத்மாவை இயற்கை என்னும் இறை ஆற்றல்  உலகிற்கு அறிமுகப் படுத்துகின்றது..எதற்காக ஏன் ? என்றால் ஒவ்வொரு வரும் இப்படித்தான் வாழ வேண்டும் என்பதற்காக

வாழ்த்துவதோ பாராட்டுவதோ .அனுதாபம் தெரிவிப்பிதோ முக்கியம் அல்ல !

மனிதப் பிறப்பின் உண்மையை அறிந்து கொண்டு மனிதன் மனிதனாக வாழ்ந்து காட்டுவதே இயற்கையின் விருப்பமாகும்.

இயற்கைக்கு இணைந்து வாழ்பவர்கள் பாராட்டுக்கு உரியவர்கள் .இயற்க்கைக்கு இணைந்து வாழாதவர்கள் தண்டனைக்கு உரியவர்கள்.

வள்ளல்பெருமான் .

இறந்தவரை எடுத்திடும் போது அரற்று கின்றீர் உலகீர்

இறவாத பெரும் வரம் நீர் ஏன் அடைய மாட்டீர்

மறந்து இருந்தீர் பிணி மூப்பில் சம்மதமோ உமக்கு

மறந்தும் இதை நினைக்கின் நல்லோர் மனம் நடுங்கும் கண்டீர் .

சிறந்திடு சன்மார்க்கம் ஒன்றே பிணி மூப்பு மரணம்

சேராமற் தவிர்த்திடும் காண் தெரிந்து வம்மின் இங்கே

பிறந்த பிறப்பில் இதில்தானே நித்திய மெய் வாழ்வு

பெற்றிடலாம் பேரின்பம் உற்றிடலாம் விரைந்து !

இறந்த உடலைப் பார்த்து அழுவது பயனில்லை இறக்காமல் வாழும் வழி உள்ளது .

பிணி மூப்பு மரணம் வராமல் வாழும் அணு ஆராய்ச்சியை கண்டுபிடித்து ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்றிக் கொண்டு ,என்றும் அழியாமல் வாழும் பேரின்ப வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டு இருப்பவர்தான் திரு அருட்பிரகாச வள்ளலார் என்பவராகும்.

மரணத்தை வெல்லாமல் வாழ்பவர்கள் யாராக இருந்தாலும் மீண்டும் அவர்களுக்கு பிறப்பு உண்டு .

இந்த உலகத்தை விட்டு வெளியே எங்கும் செல்லமுடியாது.இதுதான் இயற்கை சட்டம்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு