வியாழன், 14 மே, 2015

பக்தியின் பகல் வேடம்

பக்தியின் பகல் வேடம் !

தினமும் நெற்றி நிறைய திருநீறு இட்டுக் கொள்வதும், நாமம் போட்டுக் கொள்வதும்,திருமண் இட்டுக் கொள்வதும்,சிலுவை அணிந்துக் கொள்வதும் ,தலைப்பாகை அணிந்து கொள்வதும்,காவி உடை அணிந்து கொள்வதும் .உண்மையான பக்தியாகி விடாது.

தினமும் உயிர்க்கொலை செய்வதும் அதன் புலாலை உண்பதும்,மது விற்பனைக் கூடங்களில் மது அருந்துவதும் சூதாட்டம் ஆடுவதும்,கள்ளக் கடத்தல் செய்வதும் ,பெண்களை கற்பழிப்பதும்,தவறான வழிகளில் பொருள் சேர்ப்பதும்,பதவிக்காக பழி வாங்குவதும் போன்ற கொடுஞ் செயல்களில் ஈடுபடாதவர்களே பக்திமான்கள் .

நல்ல மனமும், நல்ல செயல்களில் ஈடுபாடு  கொண்டவர்களுக்கு பக்தியின் வெளி வேடம் தேவை இல்லை.

பக்தியின் அடையாளச்சின்னங்கள் !

ஒவ்வொரு மதமும்  ,சமயமும்,சாதிகளும் ஒவ்வொரு அடையாளச் சின்னங்களை வைத்துக் கொண்டு ஆண்டவரின் அடியாட்கள் என்று சொல்லிக் கொண்டு உள்ளார்கள் .

ஆண்டவர் எந்த புறச் சின்னங்களையும்,புற வழிபாடுகளையும்  விருப்புவதில்லை.

நாம் செய்யும் ஒவ்வொரு நல்ல செய்லகளையும் நாம் அன்றாடம் இறைவனை நினைக்கின்ற நேரம் எவ்வளவு என்பதையும்,எந்த அளவிற்கு ஒழுக்கம் உள்ளவர்களாக உள்ளார்கள் என்பதையும்,உயிர்கள்மேல் எந்த அளவுக்கு  அன்பு வைத்துள்ளார்கள் என்பதையும்,உயிர்களுக்கு எவ்வளவு நன்மை செய்கிறார்கள் என்பதையே விரும்புகின்றார்.

தன்னை நெறிப்படுத்திக் கொள்வதற்கு அக்காலத்தில் சமய மதங்கள் புறச்சின்னங்களான .திருநீறு பூசுவதும்,திருமண் என்னும் நாமம் இட்டுக் கொள்வதும்,சிலுவை அணிந்து கொள்வதும்,தலைப்பாகை அணிந்து கொள்வதும்,காவி உடை அணிந்து கொள்வதும்,பக்தியின் அடையாளச்
சின்னங்களாக புறத்தில் வைத்துள்ளார்கள்.

மேலே கண்ட புறச்சின்னங்களால் மட்டுமே பக்தனாகி விடமுடியாது.

புறச்சின்னங்கள் அணியாதவர்களை பக்தன் இல்லை என்று சொல்லிவிடவும் முடியாது.

எவர் ஒருவர் நல்ல பண்புள்ள ஒழுக்கமும்,உயிர்களுக்கு துன்பம் கொடுக்காமல் வாழ்கின்றாறோ ! ,உயிர்களுக்கு உபகாரம் செய்து வாழ்கின்றறோ ! அவரே  பக்தன்.அவரே  இறைவனின் அடியார்கள்.

மேலும் அடையாளம் காட்டும் சமய மத புறச் சின்னங்களால் மனித நேயமும்,ஆன்மநேயமும் பாதிக்கின்றது .மனித ஒற்றுமை சீர் குலைந்து விடுகின்றது.

அதனால்தான் பக்தி என்னும் பகல் வேடம் வெளியில் போடாமல் ஆன்மநேயத்தை கடை பிடியுங்கள் என்றார் வள்ளல்பெருமான்.

உண்மையில் இறைவன் மேல் பக்தி உள்ளவர்கள் எந்த விதமான சமயச் சின்னங்களும் அணியமாட்டார்கள்.அவர்களே சுத்த சன்மார்க்கிகள்.

வள்ளலார் மக்களுக்கு சொல்லிய விண்ணப்பம் !

எல்லாம் உடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே !

இது தொடங்கி எக்காலத்தும் ,சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகளாகிய ,சமயங்கள்,மதங்கள்,மார்க்கங்கள்,என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும்,

வருணம்,ஆசிரமம்,முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும்,எங்கள் மனத்தில் பற்றாத வண்ணம் அருள் செய்தல் வேண்டும்.

சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய ஆன்ம நேய ஒருமைப் பாட்டு உரிமை ,எங்களுக்குள் ,எக்காலத்தும்,எவ்விடத்தும்,எவ்விதத்தும், எவ்வளவும்,விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தல் வேண்டும்.

எல்லாமாகிய தனிப்பெரும் தலைமை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே !

தேவரீர் திருவருட் பெருங்கருணைக்கு வந்தனம்! வந்தனம் !

மேலே கண்ட விண்ணப்பம்,''சுத்த சன்மார்க்க சங்க சாதகர்கள்'' ,அன்றாடம் இறைவனிடம் விண்ணப்பம் செய்கின்றோம்,

விண்ணப்பம் செய்துவிட்டு சமய மதங்களில் பற்று வைத்துக் கொண்டு இருந்தால் எந்த பிரயோஜனமும் கிடைக்காது.

நாமும் சமய,மத வாதிகள் போல் பக்தியின் பகல் வேடம் போடுவதற்கு சமமாகிவிடும்.ஆதலால் இனிமேலாவது வள்ளல்பெருமான சொல்லிய உண்மைப் பொது நெறியான சுத்த சன்மார்க்க அருள் நெறியை பின்பற்றி வாழ்வோம்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு