செவ்வாய், 20 ஜனவரி, 2015

சுத்த சன்மார்க்கத்திற்கு நேரடி எதிரிகள் !


சுத்த சன்மார்க்கத்திற்கு நேரடி எதிரிகள் !

வள்ளலார் காட்டிய, சொல்லிய சுத்த சன்மார்க்க கொளகைகளை, எல்லா மதங்களும் சமயங்களும் அறிவு பூர்வமாக ஏற்றுக் கொள்கிறார்கள் .

ஆனாலும் நம்முடைய சைவ சமயத்தை சார்ந்தவர்கள் ,சிவன் அடியார்கள் என்று சொல்பவர்கள் நமது பங்காளிகள் என்பவர்கள் தான் ,சுத்த சன்மார்க்க வளர்ச்சிக்கும் .கொள்கைகளுக்கும் நேரடி எதிரிகளாக இருக்கின்றார்கள் .

வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்கம் என்னவென்று தெரியாமல் ,சன்மார்க்கத்தில் நுழைந்து கொண்டு மக்களை குழப்பிக் கொண்டு உள்ளார்கள்.

வள்ளலார் காலத்தில் சைவ சமயத்தை சார்ந்தவர்கள் ,,யாழ்ப்பாணத்தில் உள்ள ஆறுமுக நாவலரை வரவழைத்து வள்ளலார் எழுதிய திருஅருட்பா என்ற அருள் நூலை,அருட்பா அல்ல !அது மருட்பா !என்று நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து தோல்வி அடைந்தார்கள் .

தே போல் இப்போது அருட்பாவை சைவ சமயத்தோடு ஒப்பிட்டு பேசி வருகிறார்கள் ..சைவ சமயத்தில் சொன்ன சிவன்தான் வள்ளலார் சொல்லிய சிவம் என்று பொய்யான தகவல்களை பரப்பி கொண்டும் வருகிறார்கள்.
சாதி,சமயம்,மதம் கடந்தது திருஅருட்பா என்று எல்லா மதங்களும் ஒப்புக் கொள்ளுகின்ற இத்தருணத்தில் நம்முடைய பங்காளிகளான சைவ சமயத்தார்கள் ஒரு சிலர் மக்களை குழப்பிக் கொண்டு வருவது வேதனையாக உள்ளது.
வள்ளலார் தெளிவாக சொல்லி உள்ளார் !
இப்போது வருகிற நமது கடவுள் இதற்கு முன் சமய,மத சாத்திர ,புராணங்களில் வந்தததாக சொல்லுகின்ற பலவைகைப்பட்ட ஏற்பாட்டுக் கர்த்தர்கள் ,மூர்த்திகள்,கடவுளர்,தேவர் ,அடியார் ,யோகி,ஞானி முதலானவர்களில் ஒருவர் அல்ல !
என்பதை வள்ளலார் தெளிவுபட சொல்லி உள்ளார். வள்ளலார் கண்ட ,காண்பித்த அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர ! இதுவரையில் யாரும் காணாதது கண்டு கொள்ள முடியாதது .என்பதை உலக மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் /

வள்ளலார் காட்டிய அறிமுகப்படுத்திய ஒரே உண்மைக் கடவுள் அருடேருஞ்ஜோதி ஆண்டவர என்பதாகும்.அது அருள் ஒளியாக உள்ளது.

இயற்கை உண்மையாக .இயற்கை விளக்கமாக,இயற்கை இன்பமாக இயங்கிக் கொண்டு உள்ளார் .

அந்த உண்மையைத் தெரியாமல் சைவ சமயத்தார் ஒன்று கிடக்க ஒன்றை உளறிக் கொண்டு உள்ளார்கள்.அது அவர்கள் சுவாபம் .அதைப்பற்றி யாரும் பெரிதாக எண்ணாமல் ,வள்ளலார் சொல்லிய உண்மைக் கடவுளை உண்மை என்று நம்பி வாழ்க்கையை நல்வழியில் அமைத்துக் கொண்டு வழிப்பட்டு அருளை பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.

வள்ளலார் காட்டிய இயற்கை உண்மையான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர இதுவரையில் எந்த ஒரு ஆன்மீக அருளாளரும் காணாதது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

ஈரோடு ஆன்மநேயன் கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு