செவ்வாய், 20 ஜனவரி, 2015

கடவுளைக் காண முடியுமா ?


கடவுளைக் காண முடியுமா ?

கடவுளை எந்த காலத்திலும் காணமுடியாது .

அழியும் உடம்பை அழியாமல் யாக்கும் வழி தெரிந்தால் மட்டுமே கடவுளைக் காணமுடியும்.

வள்ளலாரைப் போல் மரணத்தை வென்றால் மட்டுமே கடவுளைக் காணமுடியும்.

தன்னை இயக்கிக் கொண்டு இருக்கும் உள் ஒளியாக உள்ள ஆன்மா என்னும் ஒளியையே காணமுடியாமல் கடவுளை எப்படி காணமுடியும்.

கடவுளைக் கண்டேன் என்பதும் காட்டுகிறேன் என்பதும் சுத்தமான பொய்யாகும்.

ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்றும் ஆற்றல் என்னும் அருள் திரவத்தால் மட்டுமே ஒளி உடம்பாக மாற்ற முடியும்..

அது அன்பு,தயவு ,கருணை என்னும் ஆன்ம இயற்கை உண்மை என்னும் குணத்தால் மட்டுமே அருள் என்னும் திரவம் சுரக்கும்.

அதை விடுத்து ,சரியை கிரியை தவம்,தியானம் ,யோகம்,என்னும் சாதனத்தால் மன அமைதி கிடைக்கும் .அவை கொஞ்சம் நேரத்தில் களைந்து விடும்.

ஜீவ காருண்யம் என்னும் உயிர் இரக்கம் கொண்டு ஆன்ம நேய ஒருமைப் பாட்டு உரிமையை அறிந்து கொண்டு எல்லா உயிர்களும் தம் உயிர்போல் என்னும் ஞான யோகம். கைவரப் பெற்றால்தான் ஆன்மாவில் இருந்து அருள் சுரக்கும்.

அந்த அருள் ஏழு சுவையாக உள்ளது ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் ஏழு திரைகளும் ஒவ்வொரு சுவையாக அனுபவித்த பின்தான் திரைகள் விலகும் .இறுதியில் உள்ள ஞான அமுதம் உண்டால் மட்டுமே ஊன உடம்பு ஒளி உடம்பாக மாறும்.

ஒளி உடம்பு பெருகின்ற போதுதான் கடவுள் போரொளி நமக்கு காட்டும் .அதுதான் கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்று வள்ளல்பெருமான் தெளிவாக அனுபவித்து சொல்லி உள்ளார்கள்.
கடவுளைக் கண்ட ஒரே ஒரு அருளாளர் வள்ளல்பெருமான் ஒருவரே.அவர் காட்டிய நேர் வழிப்பாதையால் சென்றால் மட்டுமே கடவுளைக் காணமுடியும்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு