செவ்வாய், 20 ஜனவரி, 2015

கடவுள் இப்போது எங்கே இருக்கின்றார் ?


கடவுள் இப்போது எங்கே இருக்கின்றார் ?

இந்தியாவில் உள்ள தமிழ் நாட்டில் கடலூர் மாவட்டம் வடலூர் என்னும் பார்வதி புறத்தில் ,சாதி சமயம் மதம் என்னும் பேதம் இல்லாமல், வள்ளல்பெருமான் உருவாக்கிய சத்திய ஞானசபையில் கடவுள் அருட்பெருஞ் ஜோதியாக அமர்ந்து உள்ளார் .

உண்மைக் கடவுள் அங்கு அமர்ந்து அருள் ஆட்சி புரிந்து கொண்டு உள்ளார் .அவரைக் கண்டு அவரவர்களும் ஆனந்தப் பெருங் களிப்பை அடையலாம் .


எல்லோருக்கும் தாய் ,தந்தை,அண்ணன் ,தம்பி,முதலான உறவினர்கள் செய்யப்பட்ட உதவி எவ்வளவோ ,அதற்கும் கோடி கோடி பங்கு அதிகமாக உதவி கொடுக்கும் படியான இடமாக இருக்கின்ற இடம் வடலூர் சத்திய ஞான சபையாகும்.

ஆதலால் மக்கள் அங்கு வந்து வந்து தரிசிக்கப் பெறுவீர்கள் ஆகில் பெறவேண்டியதைப் பெற்றுக் கொள்ளலாம் .இது சத்தியம் .

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு