செவ்வாய், 20 ஜனவரி, 2015

பாவம் செய்பவர்களே வாருங்கள் !


பாவம் செய்பவர்களே வாருங்கள் !

வாது பேசிய மனிதர்காள் ஒரு வார்த்தை கேண்மின்கள் வந்து நும் போது போவதன் முன்னரே அருட் பொதுவிலே நடம் போற்றுவீர் ...தீது பேசினீர் என்றிடாது உமைத் திருவுளங் கொலுங் காண்மினோ ..சூது பேசிலேன் நன்மை சொல்கின்றேன் சுற்றம் என்பது பற்றியே !

வாதம் செய்து பொய்யே பேசுகின்ற மனிதர்களே நான் சொல்லும் உண்மையான ஒரு வார்த்தையாவது வந்து கேளுங்கள் நீங்கள் கேட்டுவிட்டு போவதற்கு முன்னமே உங்களுக்கு எல்லா நன்மைகளும் கிடைக்கும்.

நீங்கள் எவ்வளவு குற்றம் செய்பவர்களாய் இருந்தாலும் மன்னித்து அருள் புரிவார் நமது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் .
அருள் பொது நடம் புரியும் உண்மையான இறைவனை நினைந்து போற்றுங்கள் அதனால் அடையும் ஆனந்தம் அளவில் அடங்காது .

தீமை தரும் பொய்யான வார்த்தைகளை சொல்ல மாட்டேன், அது உங்கள் உள்ளத்தை கேட்டால் அது பதில் சொல்லும்.அதன்பின் காணுங்கள் அதுவே உண்மையை விளக்கும்.

காப்பாற்றும் உண்மைக் கடவுள் இருக்க ,அழிக்கும் பொய்யான கடவுள்களை நம்பி மோசம் போகாதீர்கள் .

ஏன் அப்படி சொல்லுகின்றேன் என்றால் நீங்கள் யாவரும் என்னுடைய ஆன்மநேய உரிமை உடைய சொந்தங்கள் .நாம் அனைவரும் கடவுளின் குழந்தைகள் அதனால் உரிமையுடன் உங்களை நல்ல வழியில் செல்ல அழைக்கின்றேன் வாருங்கள் வாருங்கள் என அழைக்கின்றார் வள்ளல்பெருமான் .

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு